என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுண்டன்யா மகாநதி ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கும் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி.
குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கும் பணி
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
- ஆக்கிரமிப்பு இடம் குறித்தும் கேட்டறிந்தார்
குடியாத்தம்:
குடியாத்தம் நகரின் மத்தியில் உள்ள உழவர் சந்தை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வருவாய்த்துறை வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் அந்த ஆக்கிரமிப்பு இடம் குறித்தும் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து உழவர் சந்தைக்குள் சென்று பார்வையிட்டார் மேலும் உழவர் சந்தைக்கு வெளியே காய்கறி கடைகள் அமைந்துள்ள பகுதியில் சேர்ந்துள்ள குப்பைகளை தினந்தோறும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நகரி நடுவே கவுண்டன்யா மகாநதி ஆறு செல்கிறது இதில் கெங்கையம்மன் கோவில் அருகே தரைப்பாலம் உள்ளது. இந்த ஆற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருத்த வெள்ளப்பெருக்கின் போது கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்துக்கு மிகவும் பேரு உதவியாக இருக்கும் இந்த தரைப்பாலம் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்டதால் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை
ஆற்றில் வெள்ளம் செல்லும் போது தரைப்பாலத்தின் மேலே வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதாலும் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க ரூ. 5 லட்சத்தில் தற்காலிகமாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் 7 இடங்களில் ராட்சத பைப்புகள் வைத்து ஆற்றில் வெள்ளம் அதில் செல்லும் வகையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலெக்டர் ஆய்வு
அந்த தரைப்பாலத்தில் நடைபெறும் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, நகர நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ்.அரசு, ஆட்டோமோகன், என்.கோவிந்தராஜ், சி.என்பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.அமர்நாத் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.






