நிலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

100 நாள் வேலை வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.இது குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நக்கலூத்து ஊராட்சி அக்ரஹார ப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்கு பணித்தள பொறு ப்பாளர்கள் சிலருக்கு வேலை இல்லை என்றும், உங்களுக்கு ஏற்கனவே உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கணக்குகளில் உங்கள் பெயர் இல்லை என்று கூறி வேலை வழங்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு திரண்டு முற்று கைப் போராட்டம் நடத்தி னர். பின்னர் அலுவலகத்தி ற்குள் நுழைந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜய சந்திரிகா போரா ட்டம் நடத்திய கிராம மக்களை அழைத்து தற்போது பல்வேறு கணக்குகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் 100 நாள் வேலை சம்பந்தமாக எந்தவிதமான கணக்கும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com