என் மலர்
திண்டுக்கல்
- திண்டுக்கல் மாவட்ட எல்லையான தோமையார்புரம் பகுதியில் கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதியை கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மதுரையில் நாளை நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
திண்டுக்கல்:
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து ஜோதி ஓட்டம் தொடங்கியது.
பல்வேறு ஊர்களை கடந்து வந்த இந்த ஜோதி திண்டுக்கல் மாவட்டம் வந்தடைந்தது. திண்டுக்கல் மாவட்ட எல்லையான தோமையார்புரம் பகுதியில் கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதியை கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொருளாளரும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளரும், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், சார்பு அணி நிர்வாகிகள் பாரதிமுருகன், யூசுப்அன்சாரி, கோபி, ராஜன், மேற்கு பகுதி செயலாளர் சேசு, மின்சார பிரிவு திட்ட செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மயில்சாமி, அகரம் பேரூராட்சி செயலாளர் சக்திவேல், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், மதுரையில் நாளை நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
- எதிர்காலத்தில் மாணவிகளின் பங்கு மேலோங்க வேண்டும் மற்றும் நாட்டிற்கு உதவும் வகையில் தங்கள் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்றார்.
- நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் இசபெல்லா வரவேற்புரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் சிறுமலர் தலைமை உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கவுன்சிலர் மேற்கு மாவட்ட தி.மு.க பொருளாளர்விஜயன் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
அதில் எதிர்காலத்தில் மாணவிகளின் பங்கு மேலோங்க வேண்டும் மற்றும் நாட்டிற்கு உதவும் வகையில் தங்கள் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.
இதில் வடக்கு மாவட்ட கவுன்சிலர் லலிதா மோகன்,வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன்,சில்வார்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள் சுந்தரம்,ஒன்றிய துணைத் தலைவர் ராமதாஸ், வி.டி.பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன்,திண்டுக்கல் மாவட்ட அறநிலையத்துறை குழு உறுப்பினர் பாக்யராஜ்,வி.டி.பட்டிஊராட்சி துணைத் தலைவர் முத்துகுமார்,ஊராட்சி செயலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக கல்லூரியின் பேராசிரியர் முகமது ஆரிபா நன்றி கூறினார்.
- பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண் 1800 599 5950 வெளியிடப்பட்டது.
- தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுதுறைக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண் 1800 599 5950 வெளியிடப்பட்டது.
இதனையடுத்து டி. ஜி. பி வன்னிய பெருமாள் உத்தரவின் படி, மதுரை மண்டல எஸ்.பி விஜய கார்த்திக் ராஜ் மேற்பார்வையில், டி. எஸ். பி ஜெகதீசன் தலைமையில், திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் கீதா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் போஸ்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல், வடமதுரை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பொது விநியோக திட்ட பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்.
இதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த கட்டணமில்லா எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
நத்தம் அருகே ஊராளிப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடம், ரூ.41,000 மதிப்பீட்டில் சமையல் அறை கட்டுமான பணி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது சமுதாயத்தில் அனைத்து குழந்தைகளின் நலனும் கவனிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி, சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ பரிந்துரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, அங்கன்வாடி மையங்களில் சுகாதாரம், சத்தான உணவு வகைகள், சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு ரூ.41,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையல் கூடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
- தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.
- கடந்த காலங்களில் இருந்ததை காட்டிலும் தற்போது படித்த இளைய சமுதாயத்தினருக்கு போட்டிகள் நிறைந்த உலகமாக இருந்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சிங்கார கோட்டை பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழர் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் விதமாக, "மீண்டெழும் வரலாறு" என்னும் தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-
கடந்த காலங்களில் இருந்ததை காட்டிலும் தற்போது படித்த இளைய சமுதாயத்தினருக்கு போட்டிகள் நிறைந்த உலகமாக இருந்து வருகிறது. எனவே படிப்புடன் பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. உயர் கல்வி பயிலவும், வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ளவும், உயர் கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை அறிந்துகொள்ள புத்தகங்கள் வழிகாட்டியாக உள்ளன.
கல்லூரி மாணவ-மாணவிகள் சிறந்த சக்தி மிக்க செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். திறமையை பல மடங்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது தொன்மையான பாரம்பரியம் தொன்மையான நாகரீகம், கலாச்சாரங்களை அறிய தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. திருக்குறளில் நமக்குத் தேவையான அத்தனை விபரங்களும் உள்ளன. செழிப்பான கருத்துக்களைக் கொண்ட புத்தகம் படிப்பது நமது அறிவு மற்றும் ஆளுமையை அதிகரிக்கும்.
கல்வி பாடப்புத்தகங்களை படிப்பதோடு இருந்துவிடாமல், பொதுஅறிவு சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும். இதன்மூலம் உலகம் சார்ந்த அறிவை பெற முடியும். முன்னோர்களைப் பற்றியும், முன்னோர்கள் வரலாறு, பண்பாடு, மருத்துவம் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.
புத்தகங்களை வாசிப்பதனால் அதிகளவில் வார்த்தைகளையும், வாக்கிய அமைப்புகளையும் அறிந்துகொள்வதோடு, தைரியம், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற மன உறுதி ஏற்படும். உலகை புரிந்துகொள்ளலாம். சொந்தமாக எழுதும் ஆற்றல் வளரும் என பேசினார்.
- வத்தலக்குண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முத்து மாரியம்மன் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வத்தலக்குண்டு,:
வத்தலக்குண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முத்து மாரியம்மன் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் விமர்சியாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்புக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 48 ஆம் நாள் மண்டல அபிஷேக பூஜை நேற்று கோவில் வளாகத்திற்குள் சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் தலைமையில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் தலைமையில் 3000 பேருக்கு திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்பு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தர்மலிங்கம், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கோபாலன், வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பணிக்கு சென்ற கிராம மக்களை பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் வேலை செய்ய வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
- 100 நாள் வேலை பயனாளிகள் தேர்வின் போது தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் எந்த தகவலும் கூறவில்லை.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பணிக்கு சென்ற கிராம மக்களை பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் வேலை செய்ய வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜயசந்திரிகா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களை 100 வேலை செய்யவேண்டாம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளிடம் உடனடியாக பணி வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயசந்திரிகா தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தியிடம் கேட்டபோது 100 நாள் வேலை பயனாளிகள் தேர்வின் போது தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் எந்த தகவலும் கூறவில்லை. இதனால் வேலை செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.
- மாவட்ட வன அலுவலரிடம் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர், நகர் மன்றதுணைத் தலைவர், வாகன ஓட்டுனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- தற்போது தற்காலிகமாக பழைய கட்டண முறையே தொடரும் என மாவட்ட வன அலுவலர் யோகேஸ்குமார் மீனா தெரிவித்தார்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்களை கண்டு மகிழ்கின்றனர். இதில் 12 மைல் சுற்றளவில் உள்ள மோயர் சதுக்கம், குணாகுகை, தூண்பாறை, பைன்மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு செல்ல வனத்துறை சார்பில் நுழைவு வாயில் கட்டணம் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலரிடம் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, நகர் மன்றதுணைத் தலைவர் மாயக்கண்ணன், வாகன ஓட்டுனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து நிர்வாகிகளுக்கும், மாவட்ட வன அலுவலருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனஅலுவலர் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் தற்போது தற்காலிகமாக பழைய கட்டண முறையே தொடரும் என மாவட்ட வன அலுவலர் யோகேஸ்குமார் மீனா தெரிவித்தார். மேலும் சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணிக்காக மூடப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விரைவில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைப்படி புதிய கட்டண முறை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
- திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளார் என விசாரணை நடத்துவதற்காக கஸ்டடி எடுத்தனர்.
- தனிப்படை அமைத்தும் தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.
கொடைரோடு:
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் மீது திருட்டு மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இடுக்கி மாவட்டம் மறையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளார் என விசாரணை நடத்துவதற்காக கஸ்டடி எடுத்தனர்.
கடந்த 17ம் தேதி பாலமுருகனை காவலில் எடுத்த போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது போலீசாரிடம் பாலமுருகன் டீ சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அங்கு இறங்கிய போலீசார் பாலமுருகனுக்கு டீக்கடையில் பிரட் மற்றும் டீ வாங்கி கொடுத்தனர். அப்போது திடீரென சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிய பாலமுருகன் கைவிலங்குடன் இருட்டில் தப்பியோடினார்.
இதுகுறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொடைரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தனிப்படை அமைத்தும் தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.
- பழனியில் ரோப்கார் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது.
- இன்று முதல் ஒரு மாதத்துக்கு அதன் சேவை நிறுத்தப்படுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியே செல்ல முடிவதால் ரோப்காரையே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகின்றனர். பழனியில் ரோப்கார் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது. மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறும்.
அதேபோல் மாதத்துக்கு ஒருநாள், வருடத்துக்கு ஒரு மாதம் என ரோப்காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணியின்போது ரோப் (கம்பி வடம்) பெட்டிகள் ஆகியவை கழற்றி சீரமைப்பு செய்யப்படும். அதோடு பழுதடைந்த உபகரணங்கள் மாற்றப்படும்.
இந்நிலையில் நேற்று, பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பழனி ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. எனவே இன்று முதல் ஒரு மாதத்துக்கு அதன் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வரலாம் என கூறப்பட்டு உள்ளது.
- பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வான வேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பில்லம நாயக்கன்பட்டி அருகே கஸ்தூரி நாயக்கன்பட்டி உள்ளது. இங்கு பெரி யாண்டவர்,கஸ்தூரி அம்மன், முனிசாமி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் 12ஆண்டு களுக்கு பிறகு ஆடி திருவிழா நடைபெற்றது.
கடந்த 1ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வானவேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கதிர் நரசிங்க பெருமாளுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆரா தனை மற்றும் முனிசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி அபி ஷேக ஆராதனை நடை பெற்றது.
பின்னர் பெரியாண்டவர் கோவில் முன்பாக நூற்று க்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் ஆபரண பெட்டி, பெரி யாண்டவர் கரகம், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகே உள்ள கங்கையில் விடப்பட்டது. இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- எலக்ட்ரீசியன் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
- ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகில் உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜன் (வயது23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






