என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new fee procedure"

    • மாவ‌ட்ட‌ வ‌ன‌ அலுவ‌ல‌ரிட‌ம் கொடைக்கான‌ல் ந‌க‌ர்ம‌ன்ற‌ த‌லைவ‌ர், ந‌க‌ர் ம‌ன்றதுணைத் த‌லைவ‌ர், வாக‌ன‌ ஓட்டுன‌ர்க‌ள் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தினர்.
    • தற்போது தற்காலிகமாக பழைய கட்டண முறையே தொடரும் என மாவட்ட வன அலுவலர் யோகேஸ்குமார் மீனா தெரிவித்தார்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்களை கண்டு மகிழ்கின்றனர். இதில் 12 மைல் சுற்றளவில் உள்ள மோயர் சதுக்கம், குணாகுகை, தூண்பாறை, பைன்மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு செல்ல வனத்துறை சார்பில் நுழைவு வாயில் கட்டணம் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலரிடம் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, நகர் மன்றதுணைத் தலைவர் மாயக்கண்ணன், வாகன ஓட்டுனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து நிர்வாகிகளுக்கும், மாவட்ட வன அலுவலருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனஅலுவலர் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் தற்போது தற்காலிகமாக பழைய கட்டண முறையே தொடரும் என மாவட்ட வன அலுவலர் யோகேஸ்குமார் மீனா தெரிவித்தார். மேலும் சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணிக்காக மூடப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விரைவில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைப்படி புதிய கட்டண முறை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

    ×