என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் 48-ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜை
- வத்தலக்குண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முத்து மாரியம்மன் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வத்தலக்குண்டு,:
வத்தலக்குண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முத்து மாரியம்மன் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் விமர்சியாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்புக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 48 ஆம் நாள் மண்டல அபிஷேக பூஜை நேற்று கோவில் வளாகத்திற்குள் சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் தலைமையில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் தலைமையில் 3000 பேருக்கு திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்பு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தர்மலிங்கம், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கோபாலன், வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






