என் மலர்
தர்மபுரி
- தருமபுரியில் ரேஷன் கடைகளில் வழங்கும் புழுங்கல் அரிசியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
தருமபுரியில் உள்ள நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அரிசி பயன்படுத்தும் பொழுது குடும்ப பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். காரணம் புழுங்கல் அரிசி தண்ணீரில் கொட்டி ஊற வைக்கும் பொழுது சிறிது நேரத்தில் பிசுபிசுப்பு தன்மை அதிகமாக இருக்கின்றது.
அரை மணி நேரத்திற்கு மேல் அரிசியை உப்பு கலந்து ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும். இப்படி கழிவினால் மட்டுமே பிசுபிசுப்பு தன்மை நீக்கப்படுகிறது . இல்லையென்றால் அந்த அரிசி பயன்படுத்த முடிவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியே பயன்படுத்தினால் பல்வேறு உபாதைகள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களிலும் தெருக்களில் உள்ள உணவகங்களிலும் ஆய்வு நடத்துகிறார்கள். தரம் இல்லாத உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் நியாய விலை கடைகளில் விற்கப்படுகின்ற உணவு பண்டங்கள், அரிசி, பருப்பு, வகைகளையும் எண்ணெய் வகைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
- கரும்பு சக்கைநில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம். மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம். கோபாலபுரம் அருகே அம்மாபாளையத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.
உழவர் பேரியக்கம் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சின்னசாமி வரவேற்றார். சத்யராஜ், ஆனந்த், முருகன், சீனிவாசன், ராஜேந்திரன், முருகேசன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பா ளர்களாக மாநில உழவர் பேரியக்க செயலா ளர் வேலுசாமி, தர்மபுரி கிழக்கு மாவட்டம் செயலாளர் அரசாங்கம் கலந்து கொண்டனர்.
தருமபுரி கிழக்கு மாவட்ட தலைவர் அல்லி முத்து உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் முழுவதுமாக ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆலை கழிவுகள் முழுவதுமாக விவசாயி களின் நலன் கருதி இலவசமாக வழங்க வேண்டும்.
கரும்பு சக்கையின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- புதிய அரசு மதுபானக் கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பகுதிசை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது;-
டாஸ்மாக் கடையை திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். இதனால் கிராமத்து பெண்கள் மற்றும் மாணவிகள் சென்று வர அச்சுறுத்தல் ஏற்படும். அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் ஆண்கள் சம்பள பணத்தை குடித்து தீர்த்து விடுவார்கள்.
ஊரில் உள்ள வாலிபர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மது பழக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர். மேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தருமபுரியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தல்
- ஊதியம் ரூ.294 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமங்களில் பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு நடப்பு நிதியாண்டில் 4.63 விழுக்காடு ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.294 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டாலும் மறுபுறம் நல்லம்பள்ளி ஒன்றியம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள 251 ஊராட்சிகளிலும் 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் ஆண்கள் பெண்கள் என அனைவருமே முழுமையாக இப்பணியை மட்டுமே நம்பி வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்த சம்பள நிலுவை மற்றும் காத்திருப்பினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 71 கோடியே 43 லட்சம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரிந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் வரவுள்ள தீபாவளி பண்டிகை கொண்டாடு வதற்கு குடும்ப பெண்கள் செலவினங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். குறித்து தகவல் அறிந்த மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் பிரதாபன் 3 மாதம் காலமாக நிலுவையில் உள்ள சம்பளத் தொகையினை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார்.
- வத்தல்மலையில் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- வத்தல்மலையில் சனத்குமார நதி உற்பத்தியாகிறது. அந்த பகுதியில் 3 அருவிகள் அருகருகே உள்ளன.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் வத்தல்மலை உள்ளது. இது தருமபுரியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலை தொடரான சேர்வராயன் மலை பகுதியில் வத்தல்மலை அமைந்திருப்பதால் குளிர்ச்சியாக காணப்படும். இந்த மலையில் சின்னங்காடு, பால்சிலம்பு, பெரியூர், உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இதனை தவிர முருகன், சிவன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு அதிகளவில் சிறுதானியம் பயிர் செய்யப்படுகிறது. காபியும், மிளகும் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. தருமபுரியில் இருந்து அரசு பஸ் வசதியும் உள்ளது.
வத்தல்ம லையில் சனத்குமார நதி உற்பத்தியாகிறது. அந்த பகுதியில் 3 அருவிகள் அருகருகே உள்ளன. மலையை சுற்றி 24 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து தான் வத்தல்மலைக்கு செல்ல முடியும்.
இங்குள்ள மெயின் அருவியான குதிமடுவு அருவியில் குளிப்பதற்கும்- இயற்கை அழகை கண்டுகளிப்பதற்கும் வார விடுமுறை நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். இங்கு எப்போதும் மிதமான கால நிலை நிலவுகிறது. மலை நடுவே அமைந்துள்ள வயல்வெளிகள் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்ல மிக சிறந்த மாதமாக இருக்கிறது. மேலும், தனிமை விரும்பிகளுக்கு இது நல்ல அனுபவத்தை வழங்கும். இந்நிலையில் இங்கு வரும் சிலர் மலைப்பகுதிகளில் மது அருந்தி விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இது குறித்து வத்தல்மலையை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-
வத்தல்மலைக்கு வார விடுமுறை நாட்கள் மட்டும் அரசு விடுமுறை தினங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் , சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அதிக அளவில் இளைஞர்கள் வந்து குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் வாலிபர்கள் கும்பலாக காட்டுப் பகுதிகளில் மது அருந்தி விட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடக்கின்றன. மது அருந்துபவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டை ஊசி வளைவுகளில் போதையில் விபத்தை ஏற்படுத்துகின்றனர். சில மாதங்களில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளும் அதில் 2 பேர் பலியும் ஆகியுள்ளனர்.
6 மாதங்களுக்கு முன்பு வரை வத்தல்மலைக்கு கீழே சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது மது பாட்டில்களுடன் மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதனால் மோட்டர் சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது சோதனை சாவடி மூடிக்கி டக்கிறது.
கண்காணிப்பு பணியில் உள்ள போலீசாரும் இல்லை. இதனால் வத்தல்மலைக்கு சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் வந்து பொது மக்களுக்கு அச்ச மூட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆகவே மீண்டும் வத்தல் மலைக்கு செல்லும் மலை அடிவாரத்தில் சோதனை சாவடியை திறந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- விழிப்புணர்வு குறும்படங்கள் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்டன.
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேமிப்பின் அவசியம் மற்றும் கட்ட மைப்புகளை பராமரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து மழைநீர் சேகரிப்பு விழிப்பு ணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.
மேலும், மாவட்ட கலெக்டர் அதிநவீன மின்னணு காணொளி வாகனம் மூலம் ஒளிபரப்ப பட்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேமிப்பின் அவசியம் மற்றும் கட்டமைப்புகளை பராமரித்து மழைநீரை சேமிக்கும் விதத்தை அனைத்து பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்களுடனான பாதகைகள் மற்றும் துண்டு பிரச்சாரங்களுடன் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இப்பேரணியானது இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலைவழியாக செந்தில் நகர், பாரதிபுரம் வரை சென்று மீண்டும் இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குப்படி தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் மழைநீரின் சேகரிப்பு அவசியம் குறித்து மாவட்ட த்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பபடுகிறது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து மழைநீரை சேகரிப்பதன் மூலம் தண்ணீர் பிரச்சனையை தீர்த்தல், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள் மற்றும் பழைமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை தூர்வாரி மழைநீரை சேகரித்தல், மேலும், திறந்த வெளி கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்டன.
இந்நி கழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லோகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் இராகோத்சிங், துணை நிலநீர் வள்ளுநர் மணி மேகலை, உதவி நிலநீர் வள்ளுநர் ராதிகா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார்.
- மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
தருமபுரி:
தருமபுரி போக்குவரத்து காவல் பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தங்கமணி. இவர் சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் தருமபுரி ரெயில்வே நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி, பார்த்து செல்லுமாறு தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளில் திட்டி போலீஸ்காரரை தாக்கியுள்ளார். இதில் தங்கமணிக்கு லேசான காயம் ஏற்பட்டு சீருடை கிழிந்தது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அருகேயுள்ள எ.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த பழனியப்பன் மகன் முனியப்பன் (வயது40) என்பதும், இவர் சென்டரிங் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து முனியப்பன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பகுதிசை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;-
டாஸ்மாக் கடையை திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். இதனால் கிராமத்து பெண்கள் மற்றும் மாணவிகள் சென்று வர அச்சுறுத்தல் ஏற்படும். அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் ஆண்கள் சம்பள பணத்தை குடித்து தீர்த்து விடுவார்கள்.
ஊரில் உள்ள வாலிபர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மது பழக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.
மேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் நடைபெற்று வருகிறது.
- டாஸ்மாக் கடைகளை நிறைய திறந்து வைத்து போதை பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
தருமபுரி:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தருமபுரிக்கு இன்று வருகை தந்த தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தான் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஜனாதிபதி தமிழகம் வருகையின்போது நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது வரலாறு. கவர்னர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை தடுப்பதும் தமிழக அரசின் கடமை.
திராவிடம் என்பது பொய் தவறான விஷயம், திராவிடம் இல்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது, திராவிடம் என்பது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களுக்கு பொதுவானது. பாராளுமன்ற தேர்தலுக்காக யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஜனவரி மாதம் உரிய அறிவிப்பு கட்சி தலைமை முறையான அறிவிப்பு வெளியிடும். விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது.
2½ ஆண்டில் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேறவில்லை 10 சதவீதம் தான் நிறைவேற்றி உள்ளனர்.
பெண்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று கூறினர். அதுகுறித்தும் எந்த அறிவிப்பு இல்லை.
டாஸ்மாக் கடைகளை நிறைய திறந்து வைத்து போதை பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் அரசு எடுக்கவில்லை.
"நீட்" ஒட்டுமொத்த மாணவர்களையும் தி.மு.க. குழப்பி விடுகிறது. நீட் இந்தியாவிற்கு பொதுவானது. நீட்டை ஒழிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியும் நீட் விலக்குக்கு உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தினாலும் எடுபடாது. அரசியல் செய்வதற்காக இந்த வேலையை செய்கின்றனர் என்று மாணவர்கள் தெளிவாகி விட்டனர். மாணவர்கள் குழம்பி போகாமல் எந்தவொரு தேர்வை அறிவித்தாலும், அதில் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவராக வேண்டும் என்றும் தே.மு.தி.க. சார்பில் கேட்டு கொள்கிறோம். நீட் என்பது வேறு, ஜூரோ மார்க் என்பது வேறு. நம்மை விட பின்தங்கிய மாநிலங்களில் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அரசியல் லாபத்திற்காக நீட்டை எதிர்ப்பது மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தி செல்வதாகும்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள போனஸ் குறித்து போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு திருப்தி கிடையாது. 40 சதவீதம் வரை போனஸ் உயர்த்தி தர வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கும் முயற்சி ஆபத்தானது. காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் எவ்வளவு பிரச்சனை உள்ளது. அதற்கு தீர்வு காணாமல், தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை மறைப்பதற்காக சாதனத்தை பற்றி பேசி வருகின்றனர். வாக்கு வங்கி சரிந்து வருகிறது என்பது தே.மு.தி.க.விற்கு மட்டுமல்லாமல், தேர்தல் நேரங்களில் அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகளும் பெரிய தோல்விகளை சந்தித்து உள்ளன. தே.மு.தி.க. அபாரமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் விரைந்து சென்று குழந்தை புதைத்த பகுதியை தோண்டி பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து போலீசார் இறந்த பெண் குழந்தையின் தந்தை எல்லப்பாவிடமும், தாய் சத்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பெரிய சப்படி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பா (வயது35). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சத்யா (23) என்ற மனைவியும், சரண் என்ற மகனும் மான்சியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் 3-வது முறையாக கர்ப்பமான சத்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு கடந்த 10 நாள் முன்பு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து தனது சொந்த ஊர் பெரியப்படியில் உள்ள வீட்டிற்கு தாயும், சேயும் வந்ததாகவும், பின்பு இருவரும் நலமாக உள்ளதாகவும் காமன்தொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு குழந்தை திடீரென்று இறந்ததாகவும், குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காமன்தொட்டி ஆரம்ப சுகாதார நிலை மருத்துவர் அயோத்தி என்பவருக்கு ரகசிய தகவல் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று அதிகாலை சூளகிரி தாசில்தார் சக்திவேல், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, வட்டார மருத்துவர் வெண்ணிலா வருவாய் அலுவலர் ஜெயக்குமார், கிராம அலுவலர் மற்றும் மற்றும் அதிகாரிகள் போலீசார் விரைந்து சென்று குழந்தை புதைத்த பகுதியை தோண்டி பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் இறந்த பெண் குழந்தையின் தந்தை எல்லப்பாவிடமும், தாய் சத்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை இயற்கையாக இறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதால் வேறு யாராவது சிசு கொலை செய்துள்ளனரா? என்பது தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
- மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கி–ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் முதல் அமைச்சர் ஆணைக்கிணங்க சமுதாய வளைகாப்பு விழா, நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா வரவேற்புரை ஆற்றினார். சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை யேற்று பேசினார்.அதனை தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டா ரத்திற்கு உட்பட்ட 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் சாந்தி பெண்களுக்கு வளையல் அணிவித்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, ஒன்றிய செயலா ளர் ஏ.எஸ் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி, வட்டார ஒருங்கி ணைப்பாளர் ஆனந்தன், தொகுதி மேற்பார்வையா ளர்கள் சந்திரா, தமிழ்ச்செல்வி, ஜெயா அன்பு கரசி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.
- 2900 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 12.73 இலட்சத்திற்கு விற்பனை யானது.
தருமபுரி,
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராம நாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலத்தில் 8 லட்சமும் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 42 விவசாயிகள் கொண்டு வந்த 2900 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.12.73 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் ரூ.541 க்கும், அதிகபட்சமாக ரூ.281-க்கும், சராசரியாக 439 ரூபாய் என ஏலம் போனது.
மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து 2 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனை யானது. ஆனால் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 2900 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 12.73 இலட்சத்திற்கு விற்பனை யானது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவ லர்கள் தெரிவிக்கின்றனர்.






