search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ஏல அங்காடியில்  வெண் பட்டுக்கூடுகள் ரூ.12.73 லட்சத்திற்கு ஏலம்
    X

    தருமபுரி ஏல அங்காடியில் வெண் பட்டுக்கூடுகள் ரூ.12.73 லட்சத்திற்கு ஏலம்

    • பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.
    • 2900 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 12.73 இலட்சத்திற்கு விற்பனை யானது.

    தருமபுரி,

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராம நாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலத்தில் 8 லட்சமும் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 42 விவசாயிகள் கொண்டு வந்த 2900 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.12.73 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் ரூ.541 க்கும், அதிகபட்சமாக ரூ.281-க்கும், சராசரியாக 439 ரூபாய் என ஏலம் போனது.

    மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து 2 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனை யானது. ஆனால் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 2900 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 12.73 இலட்சத்திற்கு விற்பனை யானது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவ லர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×