என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா
    X

    நல்லம்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா

    • நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கி–ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் முதல் அமைச்சர் ஆணைக்கிணங்க சமுதாய வளைகாப்பு விழா, நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா வரவேற்புரை ஆற்றினார். சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை யேற்று பேசினார்.அதனை தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டா ரத்திற்கு உட்பட்ட 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் சாந்தி பெண்களுக்கு வளையல் அணிவித்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, ஒன்றிய செயலா ளர் ஏ.எஸ் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி, வட்டார ஒருங்கி ணைப்பாளர் ஆனந்தன், தொகுதி மேற்பார்வையா ளர்கள் சந்திரா, தமிழ்ச்செல்வி, ஜெயா அன்பு கரசி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×