என் மலர்
கடலூர்
இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாட்கள் என்பதால் காலை முதல் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
கடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளில் நடைபெற உள்ளன. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதல் சுயேட்சை அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒருசிலர் அந்தந்த அலுவலகங்களில் வேட்புமனுத்தாக்கல் செய்துவந்தனர்.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் நேற்று மற்றும் இன்று அனைத்து வேட்பாளர்களும் காலை முதல் தங்கள் ஆதரவாளர்களுடன் அந்தந்த அலுவலகங்களில் நேரில் சென்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாட்கள் என்பதால் காலை முதல் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் குவிக்கப்பட்டிருந்த போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்த குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அனுபவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாக பகுதிகளிலும் வேட்பாளருடன் ஆதரவாளர்களை கும்பலாக நிற்பதற்கு அனுமதிக்கவில்லை. இதுமட்டுமின்றி வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் கடும் கெடுபிடி விதித்து அனுமதித்தனர்.
மேலும் அவருடன் வந்தவர்களை அலுவலக வளாகத்தில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் இன்று மாலை 5 மணிக்குள் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்து வருவதால் ஏராளமான வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பு ஆதார் அட்டையை வீசி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூதமூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி லதா. இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
இவர்கள் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும் வாழ்வாதாரத்தை இழந்து வரும் தங்களுக்கு அரசு உதவி செய்ய கோரியும் இவர்களுக்கு வீடு இல்லை. நிலம் இல்லாமல் இருக்கும் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல்வேறு மனுக்கள் அளித்தும் வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் அளித்த மனுவுக்கு அரசு எதுவும் செவிசாய்க்கவில்லை. ஆத்திரமடைந்த விஜயகுமார் அவரது மனைவி லதா இதுவரை தாங்கள் விண்ணப்பித்திருந்த தங்களது மனுக்கள் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஊனமுற்றோர் உதவிபெறும் அடையாள அட்டை, பள்ளி படிப்பு சான்று, தேர்தல் அடையாள அட்டை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பு வீசி சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் அங்கு இருந்த மனுக்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைப்பற்றி சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் அந்தந்த கட்சி சார்பில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
கடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் அந்தந்த கட்சி சார்பில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் நேற்று மற்றும் இன்று அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென்று நேரில் வந்தார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வேட்புமனு தாக்கல் செய்வதை ஆய்வுசெய்து பார்வையிட்டார்.
பின்னர் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் வேட்புமனுத்தாக்கல் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வேட்புமனு தாக்கல் செய்து செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

பண்ருட்டி அருகே 30 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்ற தகவல் அறிந்ததும் தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவாமூர் கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமாத்மா. அவரது மனைவி ஆனந்தி இவர்கள் ஆடு வளர்க்கும் தொழில் செய்கின்றனர்.
இவர்களுக்கு சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. நேற்று வழக்கமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பின்பு இரவு 10 மணி அளவில் பட்டியில் அடைத்தனர். இரவு 11 மணி அளவில் பட்டியில் இருந்த ஆடுகள் கத்தியது. அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவியும் ஆடுகள் அடைக்கப்பட்டு இருந்த பட்டிக்கு சென்றனர். அப்போது 30 ஆடுகள் இறந்து கிடந்தது கண்டு பதறிபோனார்கள். இந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துகொன்று உள்ளது.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு செட்டிபாளையம் கால்நடை டாக்டரை வரவழைத்து ஆடுகள் இறப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இந்த சம்பவத்தால் பரமாத்மா குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

பா.ஜ.க. அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கடலூர் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கும் கல்லூரி மாணவி ஹம்சினி கூறினார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி 21-வது வார்டில் பா.ஜனதா சார்பில் புதுப்பாளையம் சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்த 23 வயதுடைய பி.எஸ்சி., (கண் பரிசோதனை) இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஹம்சினி பொன்னிரவி போட்டியிடுகிறார். இவர் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுபற்றி கல்லூரி மாணவி ஹம்சினி கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி பற்றியும், அவரது திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு தெரியவில்லை. நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பேன். பா.ஜ.க. அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 7-வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 7-வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
2-வது வார்டு ந.ஜோதிமணி, 3-வது வார்டு வெ.மீனாட்சி, 4-வது வார்டு உமா மகேஸ்வரி, 5-வது வார்டு கோ.வெண்ணிலா, 6-வது வார்டு க.கோவிந்தராசு, 8-வது வார்டு சி.செமிளாதேவி, 9-வது வார்டு ப.கோபு, 11-வது வார்டு ஹா.பவித்ரா, 12-வது வார்டு மு.கொளஞ்சியப்பன், 13-வது வார்டு ர.செந்தில்குமார், 15-வது வார்டு ரா.கண்மணி, 16-வது வார்டு கோ.இளங்கோவன், 17-வது வார்டு கு. மஞ்சுளா, 18-வது வார்டு வே.கவிதா, 20-வது வார்டு ரா.வினோத், 21-வது வார்டு கா.அமிர்தவள்ளி, 22-வது வார்டு ப.பரமகுரு, 23-வது வார்டு சு.முத்துவேல், 24-வது வார்டு அ.அமிர்தவள்ளி.
2-வது வார்டு வி.எஸ்.எல்.கீதா குணசேகரன், 3-வது வார்டு ஏ.பிரகாஷ், 6-வது வார்டு ஹேமலதா சுந்தரமூர்த்தி, 7-வது வார்டு த.சங்கீதா தனஜெயன், 10-வது வார்டு ராஜ்மோகன், 12-வது வார்டு த.பிரசன்னகுமார், 13-வது வார்டு எஸ்.பி.நடராஜன், 15-வது வார்டு கார்த்திகா உதயன், 16-வது வார்டு வே.ஆராமுது வேல்முருகன், 17-வது வார்டு கிரேசி ஆறுமுகம், 18-வது வார்டு சுதாஅரங்கநாதன், 19-வது வார்டு செந்தில்குமாரி இளந்திரியன், 22-வது வார்டு சுபாஷினிராஜ், 24-வது வார்டு வெ.சாமுவேல், 25-வது வார்டு சசிகலா ஜெயசீலன், 29-வது வார்டு க.உமாபதி, 30-வது வார்டு சங்கீதா செந்தில்முருகன், 31-வது வார்டு சாய்த்துனிஷா சலீம், 32-வது வார்டு கோ.ஜெய்கணேஷ், 33-வது வார்டு ச.புண்ணியமூர்த்தி, 35-வது வார்டு கே.ஜி.எஸ்.சரத், 37-வது வார்டு மு.இளையராஜா, 38-வது வார்டு கவிதா ரகுராமன், 39-வது வார்டு ர.பாலசுந்தர், 40-வது வார்டு கோ.கர்ணன், 41-வது வார்டு என்.பி.என்.தமிழரசன் 43-வது வார்டு இ.பாரூக்அலி, 44-வது வார்டு கே.லோகா கிருஷ்ணமூர்த்தி, 45-வது வார்டு ராதிகா பிரேம்குமார்,
2-வது வார்டு வி.எஸ்.இராஜா, 4-வது வார்டு பா.ஜெயசித்ரா, 5-வது வார்டு தஸ்லிமா, 6-வது வார்டு எஸ்.கவிதா சரவணன், 7-வது வார்டு எஸ்.புகழேந்தி, 8-வது வார்டு வைஜெயந்தி, 9-வது வார்டு தி சரவணன், 10-வது வார்டு எம். ஷகிலா, 11-வது வார்டு சி.க. இராஜன், 12-வது வார்டு கே. ஜி. அசோகன், 14-வது வார்டு கே. ஆர். செந்தில்குமார், 15-வது வார்டு கல்பனா, 16-வது வார்டு த. விஜயராகவன், 17-வது வார்டு பி. மணிகண்டன், 18-வது வார்டு எஸ். வளர்மதி, 19-வது வார்டு வி. விஜயலட்சுமி, 20-வது வார்டு இரா. வெங்கடேசன், 21-வது வார்டு அ. தாரணி, 22-வது வார்டு சுதா, 23-வது வார்டு ப. சந்திரசேகரன், 25-வது வார்டு ஜி. சுதாகர், 26-வது வார்டு ஜெ. அறிவழகன், 28-வது வார்டு சே. சுந்தரி, 29-வது வார்டு எம். சுனிதா, 30-வது வார்டு அ. லதா, 31-வது வார்டு அ. இந்துமதி, 33-வது வார்டு எம். முத்துக்குமரன்.
1-வது வார்டு க.சிவக்குமார், 2-வது வார்டு வசந்தகுமாரி, 3-வது வார்டு இளவரசன், 4-வது வார்டு எஸ்.சிவக்குமார், 5-வது வார்டு மஞ்சுளா, 6-வது வார்டு தமிழ்செல்வி, 7-வது வார்டு சித்ரா, 8-வது வார்டு எஸ்.ஷாகுல்ஹமீது, 9-வது வார்டு ஆர்.சுப்பராயலு, 10-வது வார்டு சந்தியா, 11-வது வார்டு ஆனந்தி, 12-வது வார்டு சித்ரா, 13-வது வார்டு ஏ.மாயவேல், 14-வது வார்டு தன.தமிழ்செல்வன், 15-வது வார்டு ஆர்.ராஜபூபதி, 16-வது வார்டு பி.விஜயராகவன், 17-வது வார்டு சுமதி, 18-வது வார்டு விஜயகுமாரி, 19-வது வார்டு பழனி, 21-வது வார்டு தனலட்சுமி, 22-வது வார்டு மாதரசி, 23-வது வார்டு மாலதி, 24-வது வார்டு எஸ்.பிரபு, 27-வது வார்டு எஸ்.பழனிவேல்.
1-வது வார்டு எஸ். கேசவன், 3-வது வார்டு எஸ். வெண்ணிலா, 6-வது வார்டு எம். சரஸ்வதி, 7-வது வார்டு ஆர்.வினோதினி, 9-வது வார்டு எஸ். சாந்தி, 10-வது வார்டு ஆர்.பி. சண்முகம், 11-வது வார்டு பி. சரவணன், 13-வது வார்டு டி.கந்தன், 14-வது வார்டு எம். அஞ்சலிதேவி, 15-வது வார்டு ஆர்.செல்லபாண்டியன், 16-வது வார்டு அ.ஜோதி, 17-வது வார்டு எஸ். லதா, 18-வது வார்டு பி. கலைச்செல்வி.
2-வது வார்டு நாதியாபேகம், 6-வது வார்டு ஜே. அன்வர்சதாத், 8-வது வார்டு மதீனாபேகம், 9-வது வார்டு வஹிதாபானு, 12-வது வார்டு தயிபாபேகம்.
2-வது வார்டு நூர்ஜஹான், 3-வது வார்டு ராஜேஸ்வரி, 4-வது வார்டு இளவரசன், 5-வது வார்டு தமிழ்ச்செல்வன், 6-வது வார்டு திவ்யா, 7-வது வார்டு அறிவழகன், 8-வது வார்டு உஷா, 9-வது வார்டு முஹம்மது சதுருத்தீன், 10-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி, 11-வது வார்டு விஜயலட்சுமி, 14-வது வார்டு ஷிலாராணி, 15-வது வார்டு ஆனந்தி, 16-வது வார்டு மீனா, 17-வது வார்டு கணேசமூர்த்தி, 18-வது வார்டு ப.இராமலிங்கம்,
1-வது வார்டு க. காயத்ரி, 2-வது வார்டு கு. தேவிகா, 3-வது வார்டு தங்க. அன்பரசு, 4-வது வார்டு கோ. வேலாயுதம், 5-வது வார்டு க. பழனி, 6-வது வார்டு ஆ. ஆனந்தன், 7-வது வார்டு ந. ஐயப்பன், 8-வது வார்டு இர. சுகுணாதேவி, 9-வது வார்டு ப. ரமாவதி, 10-வது வார்டு மோ. சந்திரா, 11-வது வார்டு பா. விஜயலெட்சுமி, 12-வது வார்டு ஜெ. கலாவதி, 13-வது வார்டு து. வேலு, 14-வது வார்டு ரா. ராஜேஸ்வரி, 15-வது வார்டு வி. தமிழ்ச்செல்வி,
1-வது வார்டு எஸ். தேன்மொழி, 2-வது வார்டு ஜெ. பசிரியாமா, 4-வது வார்டு கோ.செழியன், 5-வது வார்டு எம். எஸ். ஜாஃபர் ஷரீப், 6-வது வார்டு கே. ரொகையாமா, 7-வது வார்டு அ. ஜாஸ்மின் நிஹார், 8-வது வார்டு எஸ். பர்ஜானா, 9-வது வார்டு ஆர்.புகழேந்தி, 10-வது வார்டு எஸ். கலைவாணி, 11-வது வார்டு எம். எஸ். முஹம்மது யூனுஸ், 12-வது வார்டு ஆர்.செந்தில்குமார், 13-வது வார்டு வி. கோவிந்தராஜன், 15-வது வார்டு ஜி. தையல்நாயகி, 16-வது வார்டு வி. ராமலிங்கம், 17-வது வார்டு எம். ராஜகுமாரி, 18-வது வார்டு ஜி. ஆனந்தன்.
1-வது வார்டு இ. இராஜம், 2-வது வார்டு எஸ். ராஜேஸ்வரி, 3-வது வார்டு ஆர்.ராணி, 4-வது வார்டு அ. தினேஷ்பாபு, 5-வது வார்டு கே. பவானி, 6-வது வார்டு கே. கலைச்செல்வி, 7-வது வார்டு எஸ். கே. கருணாநிதி, 9-வது வார்டு எஸ். தமிழ்ச்செல்வி, 10-வது வார்டு டி. சாந்தா, 11-வது வார்டு டி. ஜெயக்குமார், 12-வது வார்டு ஜெ. செந்தில், 13-வது வார்டு வி. குலோத்துங்கன், 14-வது வார்டு எஸ். செந்தமிழ் செல்வி, 15-வது வார்டு அ. சுமதி.
1-வது வார்டு அ. வேல்முருகன், 2-வது வார்டு எஸ். சிவகாமி, 4-வது வார்டு அ. பரிதா, 5-வது வார்டு சி. பாலகிருஷ்ணன், 6-வது வார்டு அ. பெலிக்ஸ், 7-வது வார்டு அ. பெனாசீர், 8-வது வார்டு அ. மனோகர், 10-வது வார்டு எம். தீன்முகமது, 13-வது வார்டு கே. அகிலாண்டேஸ்வரி, 14-வது வார்டு கே. கமலா, 15-வது வார்டு என். புவனேஸ்வரி.
1-வது வார்டு வீ. பன்னீர்செல்வம், 3-வது வார்டு ஆர். ராஜேஸ்வரி, 4-வது வார்டு ஜி. தேவேந்திரன், 5-வது வார்டு பி. நாகராஜன், 6-வது வார்டு பூ. சதீஷ் குமார், 7-வது வார்டு இ. ஷாஜகான், 8-வது வார்டு ஜெ. முருகானந்தம், 9-வது வார்டு க. இளவரசி, 10-வது வார்டு பா. முத்தமிழரசி, 11-வது வார்டு கே. செல்வராணி, 12-வது வார்டு ஜெ. ராமையன், 13-வது வார்டு ஆர். லட்சுமி, 14-வது வார்டு ஆ. செல்வி, 15-வது வார்டு டபிள்யூ. பிலோமீனா மலர்கொடி.
1-வது வார்டு சி.ஐஸ்வரியா2-வது வார்டு இரா.முருகன்4-வது வார்டு க.தமயந்தி6-வது வார்டு செ.கிள்ளைரவிந்திரன் 7-வது வார்டு இ.யாஸ்மின்8-வதுவார்டு மு.குமார்9-வது வார்டு க.பாண்டியன்10-வது வார்டு செ.மல்லிகா11-வது வார்டு செ.நிறைமதி13-வது வார்டு.

சிதம்பரம் அருகே 4 வயது சிறுவன் மர்மமான முறையில் ஆற்றில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தியாகவல்லி பகுதி திருச்சோபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அஸ்வந்த் (வயது 4). இவன் நேற்று அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானான்.
நீண்ட நேரமாகியும் அஸ்வந்த் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அஸ்வந்த் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அஸ்வந்த்தின் அண்ணன் வெங்கடேசன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவன் அஸ் வந்தை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள உப்பனாற்றில் சிறுவனின் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கும் அஸ்வந்த்தின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அஸ்வந்த்தின் பெற்றோர் ஆற்றில் பிணமாக மிதப்பது அஸ்வந்த் என்பதை உறுதி செய்துவிட்டு தனது மகனின் உடலை கண்டு அலறி துடித்தனர்.
மேலும் போலீசார் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 4 வயது சிறுவன் மர்மமான முறையில் ஆற்றில் இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் மற்றும் கீறல்குறியீடு ஓடுகள் ஆகியவற்றை கண்டுபிடித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்கால கைக்கோடாரியின் நீளம் 8.செ.மீ., அகலம் 3.7 செ.மீ., மற்றொரு கருவியின் நீளம் 4.செ.மீ., அகலம் 3.5 செ.மீ., மற்ற இரண்டு கருவிகளும் உடைந்த துண்டுகளாக கிடைத்துள்ளன. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர், புதிய கற்கால காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது.
மனித குலத்தின் தொன்மை வரலாற்றை பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம், நமக்கு கிடைத்த இக்கருவி புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைகோடாரியாகும்.
பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத்தேடி அலைந்து நிலையான இருப்பிடம் இன்றி வாழ்ந்தான், புதிய கற்காலத்தில் மனிதன் தனக்கென ஒரு நிலையான வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றான், இக்காலகட்டத்தில் வழுவழுப்பான கற்கருவிகள் மற்றும் சக்கரத்தால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளான்.
புதிய கற்கால கருவிகள் மனிதனின் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவுகளை தோண்டி எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது ஆகும், மற்றும் இரும்புக்கழிவுகள் இங்கு கிடைத்துள்ளது. இரும்பு சார்ந்த பொருட்கள் கிடைத்துள்ளதால் இரும்பை உருக்கி பயன்படுத்தவும் அறிந்திருந்தனர் அக்காலமக்கள் என அறிய முடிகிறது
இது போன்ற புதிய கற்கால ஆயுதங்கள் தமிழ்நாட்டில் மயிலாடும்பாறை, மாங்குடி, பையம்பள்ளி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே சி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்யும் பணியினையும், விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்யப்படுவதையும், நெல் ஈரப்பத பரிசோதனை செய்வதையும் கலெக்டர் கேட்டறிந்தார்.
நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் சிட்டா மற்றும் ஆதார் எண்களை முறையாக பதிவு செய்து வரிசை சீட்டுகள் வழங்கப்பட்டு கொள்முதல் விரைவாக செய்யவேண்டும். நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகளுக்கு மேல் பிடிக்க வேண்டும். மழை ஏற்பட்டால் நெல் மூட்டைகள் நனையாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்கவும்,
மேலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு தரையிருப்பில் உள்ள நெல்லினை அன்றைக்கோ அல்லது மறுதினமோ கிடங்குகளுக்கு மாற்றம் செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவ) ஜெயக்குமார், செயற்பொறியாளர்(ஊரக வளர்ச்சித்துறை) தணிகாச்சலம், உதவி செயற்பொறியாளர் கல்யாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, விஜயா, கடலூர் வட்டாட்சியர் பூபாலச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
காட்டுமன்னார்கோவில் யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ராஜினாமா செய்வதாக கூறியதால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்று திடீரென பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்தனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில் எங்களிடம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அதிகாரமில்லை. தாங்கள் மனுவாக கொடுத்தால் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்து விடுவோம் என்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனடியாக கூட்ட அரங்கில் ஒன்றாக கூட்டத்தை கூட்டி முடிவுகளை எடுத்துள்ளனர் இதனால் சலசலப்பு உண்டானது. பின்னர் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டரங்கில் திடீர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று ராமலிங்கம் வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ராமலிங்கத்தை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடலூரில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
வடலூர் ஆபத்தாரனபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நவீன்குமார்(23) அதே பகுதியை சேர்ந்த சிறுமியுடன் கடலூரில் உள்ள தனியார் ஜவுளி கடையில் பணி செய்தபோது பழக்கம் ஏற்பட்டது,
இந்த நிலையில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி,திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது, இதனையொட்டி திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாகவும், வடலூர் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்