என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் அந்தந்த கட்சி சார்பில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
கடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் அந்தந்த கட்சி சார்பில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் நேற்று மற்றும் இன்று அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென்று நேரில் வந்தார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வேட்புமனு தாக்கல் செய்வதை ஆய்வுசெய்து பார்வையிட்டார்.
பின்னர் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் வேட்புமனுத்தாக்கல் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வேட்புமனு தாக்கல் செய்து செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story