என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
    X
    கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

    கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

    நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் அருகே சி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்யும் பணியினையும், விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்யப்படுவதையும், நெல் ஈரப்பத பரிசோதனை செய்வதையும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் சிட்டா மற்றும் ஆதார் எண்களை முறையாக பதிவு செய்து வரிசை சீட்டுகள் வழங்கப்பட்டு கொள்முதல் விரைவாக செய்யவேண்டும். நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகளுக்கு மேல் பிடிக்க வேண்டும். மழை ஏற்பட்டால் நெல் மூட்டைகள் நனையாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்கவும்,

    மேலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு தரையிருப்பில் உள்ள நெல்லினை அன்றைக்கோ அல்லது மறுதினமோ கிடங்குகளுக்கு மாற்றம் செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவ) ஜெயக்குமார், செயற்பொறியாளர்(ஊரக வளர்ச்சித்துறை) தணிகாச்சலம், உதவி செயற்பொறியாளர் கல்யாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, விஜயா, கடலூர் வட்டாட்சியர் பூபாலச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×