என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதார் அட்டை
    X
    ஆதார் அட்டை

    விநாயகர் கோவில் முன்பு ஆதார் அட்டையை வீசிய மாற்றுத்திறனாளி தம்பதி

    விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பு ஆதார் அட்டையை வீசி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூதமூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி லதா. இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.

    இவர்கள் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும் வாழ்வாதாரத்தை இழந்து வரும் தங்களுக்கு அரசு உதவி செய்ய கோரியும் இவர்களுக்கு வீடு இல்லை. நிலம் இல்லாமல் இருக்கும் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல்வேறு மனுக்கள் அளித்தும் வந்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் அளித்த மனுவுக்கு அரசு எதுவும் செவிசாய்க்கவில்லை. ஆத்திரமடைந்த விஜயகுமார் அவரது மனைவி லதா இதுவரை தாங்கள் விண்ணப்பித்திருந்த தங்களது மனுக்கள் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஊனமுற்றோர் உதவிபெறும் அடையாள அட்டை, பள்ளி படிப்பு சான்று, தேர்தல் அடையாள அட்டை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பு வீசி சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    தகவலறிந்த சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் அங்கு இருந்த மனுக்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைப்பற்றி சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×