என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
    • 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி னார். தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்ப ட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பொருட்கா ட்சியானது கோவை மாநகராட்சி, சிறைச்சாலை அணிவகு ப்பு மைதான த்தில் இந்த மாதம் இறு தியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இந்த பொருட்கா ட்சியில் செய்தி -மக்கள் தொடர்புத்துறை உள்பட 27 அரசு துறைகள் சார்பில் தங்கள் துறையின் மூலம் செயல்படு த்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பய ன்பெறும் வண்ணம் அரங்கு கள் அமைக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு மின்வாரியம் உள்பட 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொரு ட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. பொருட்கா ட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தி ல்பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.

    மேலும் கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்து டன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்க ளும், வீட்டு உபயோக பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்ப ட உள்ளது.

    தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக பஸ்கள் செல்லும் வகையில் கூடுதல் பஸ் சேவை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது.
    • 3 டன் எடையிலான சரக்குகள் விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    கோவை,

    விஷு பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து கடந்த 7 நாட்களில் மொத்தம் 14 டன் எடையிலான காய்கறிகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், மலையாள புத்தாண்டு தினமான விஷுவை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக அளவு கையாளப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, மலையாள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 7 நாட்களில் கோவையிலிருந்து வழங்கப்பட்ட 5 விமான சேவையில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் 14 டன் சரக்குகள் காய்கறிகளாகும். கோவக்காய், வாழைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை தவிர்த்து 1 டன் எடையிலான மாங்காய் மற்றும் ரோஜாப்பூ, சூரியகாந்திப்பூ உள்ளிட்ட மலர்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றனர்.

    கோவை விமான நிலையத்தில் தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகி ன்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் விமான சேவை அதிகரிக்க வாய்ப்பு ள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • யானை வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
    • வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

    கவுண்டம்பாளையம், -

    கோவை தடாகம் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.

    அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருவதை வாடி க்கையாக வைத்து ள்ளது.

    பன்னிமடையை அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வீடு ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது.

    அந்த யானை தோட்டத்திற்குள் அங்கும், மிங்கும் சுற்றி திரிந்தது. பின்னர் வீட்டின் அருகே சென்ற காட்டு யானை வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து உள்ளே நுழைந்த காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனங்களை உண்ண முயன்றது.

    ஆனால் யானையால் மேற்கொண்டு வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

    இதனால் யானை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் தேசப்படுத்தி விட்டு மீண்டும் வனத்தை நோக்கி சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது.

    அந்த காட்சிகள் தற்போ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் எப்போது வேண்டுமா னாலும் ஊருக்குள் நுழையக்கூடும் என்பதால், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
    • கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் நேற்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது. இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சீருடை அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.

    பொன்னைய ராஜபுரத்தில் தொடங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார்பேட்டை, தெலுங்குவீதி, ராஜவீதி வழியாக தேர்நிலைத் திடல் சென்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணியையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த ஆர்.எஸ். பேரணிக்கு கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது. அதன்படியே தமிழகத்தில் பேரணியும் நடந்தது.

    இந்த நிலையில் கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டு நிபந்தனைகளை மீறியதாக கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார் ஆகிய 3 பேர் மீது வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் டாலர் காலனியில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையை சேர்ந்த போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறி அவரை மிரட்டினர். பின்னர் 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து சஞ்சீவியை அவர்கள் கோவைக்கு கடத்தி வந்தனர். வரும் வழியில் அவரது டிரைவரை கரூரில் இறக்கி விட்டு வந்தனர். பின்னர் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது 7 பேர் கொண்ட கும்பலுடன் கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் என கூறி அங்கு வந்தார். அவருடன் கிப்சன், அலெக்ஸ் ஆகியோரும் வந்து இருந்தனர்.

    இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். ஆனால் அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கும்பல் பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்து இருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச் செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கி விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்கவும் என கூறி விட்டு சென்றனர். இது குறித்து சஞ்சீவி காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மிரட்டி ரியஸ் எஸ்டேட் அதிபரை கடத்தி 8 நாட்கள் சிறை வைத்து மிரட்டி 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
    • சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தின் சமவெளிப்பகுதியில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்புத்தாண்டை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், நீராறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி காட்சிமுனை மற்றும் பாலாஜி கோவில் என அனைத்து பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்த தால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வால் பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மே மாத இறுதிக்குள் அனுமதி பெற வேண்டும் என சுற்றுலாத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வால்பாறையில் சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல வசதியாக 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. வால்பாறை நகர், ரொட்டிக் கடை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தனியார் தேயிலை தோட்டப்பகுதிகளில் தனியார் ரிசார்டுகளும் உள்ளன.

    இதில் பல தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது சுற்றுலாத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:-

    வால்பாறையில் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நகராட்சியில் மட்டும் அனுமதி வாங்கினால் போதாது. சுற்றுலாத்துறையிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். மே மாதம் இறுதிக்குள் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
    • எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆ.ராசா எம்.பி வழங்கினார்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு சிவன்புரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காமிராக்கள் இயக்கம், ரூ.25 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஒருங்கிணைந்த சமுதாய கூடம் அமைக்கும் பணியை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.தொடர்ந்து 13 வது வார்டு புருசோத்தமன் நகரில் பசுமைப்பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்ட பணிகளையும் , நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்று கொண்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்பவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.கொரோனா காலத்தில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி என சொல்லாததையும் நிறை வேற்றியுள்ளார்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்க வேண்டும் என்பதற்காக பல கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட அவைத்தலைவர் புரு ஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், காரமடை நகரக்கழகச் செயலாளர் வெங்கடேஷ், 2-வது வார்டு உறுப்பினர் குருபி ரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே காரமடை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் நீலகிரி எம்.பி. ஆ.ராசா குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    • தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்.
    • மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாமன்னா நீர் ஏற்று நிலையத்தின் அருகே பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    இந்த பணிக்காக தண்ணீரினை அதிகமாக மோட்டார் மூலம் உறுஞ்சி எடுக்க அந்த பகுதியில் பவானி ஆற்றின் நடுவே கற்களை கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டது.

    இந்த தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படுவதாகவும், மேட்டுப்பாளையம் மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    எனவே இதனை அகற்ற வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இருப்பினும் அந்த தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் நேற்று அந்த பகுதியை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களும் சென்றனர்.

    ஆய்வில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் மட்டுமின்றி அதற்கு கீழ் பகுதியில் உள்ள திட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடுப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்புகள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.

    • மின்வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும்.

    கோவை,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்கவும், மனிதர்கள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைக்கப்பட்டதினால் மின்வேலிகளில் மனிதர்களும், விலங்குகளும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    மின் வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறி உள்ளார்.

    பொதுமக்கள் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும், மின் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியனை கொண்டு பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

    மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தக்கூடாது. மின் நுகர்வோர்கள் தங்களது மின் வயரிங்குகளை முறையாக ஆய்வு செய்து பழுதடைந்த வயரிங்குகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மின் நுகர்வோர் தங்களது வீடுகள், வளாகத்தில் மின் இணைப்பில் ஆர்சிடி, இஎல்சிபி-யை பொருத்து மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது அருகில் மின் பாதைகள் இருப்பின் உரிய இடை வெளியோடும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் பணிகள் மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வந்தனர்.
    • கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார்.

    கோவை,

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை (வயது 32). இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து நிறுவனத்தின் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார்.

    இந்த நிலையில், அவர் போத்தனூர் ரெயில்வே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இசக்கிதுரையிடம் இப்போது மணி என்ன ஆகிறது? என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தீட்டினர். பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் அந்த கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார். இதில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அவர் கூச்சலிட்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவர் தனது நண்பரை அழைத்து கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பொது இடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் வாலிபரை கல்லால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள எண்.4.வீரபாண்டி பேரூராட்சி மற்றும் கூட லூர் கவுண்டம்பாளையம் நகராட்சி இந்து முன்னணி நடத்தும் 2-ம் ஆண்டு மாபெரும் 1508 திருவிளக்கு பூஜை விழா வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

    விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவில் முதலாவதாக சிலம்பாட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதனை ஸ்ரீ வாராஹி மந்திராலயத்தை சேர்ந்த மணிகண்ட சுவாமிகள் மற்றும் சிவ நாசர் இந்த பூஜையை நடத்தி வைத்தார்.

    இந்த பூஜையில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளக்கு, பூக்கள், எண்ணை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சிப்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை விழா குழுவினர் வழங்கினர்.

    இதனையடுத்து அனைத்து பக்தர்களும் விநாயகருக்கு பூஜை செய்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் வீரபாண்டி, கூடலூர் கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், திரு மலைநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவிழா நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • நாளை மகா கணபதி ஹோமம், முகூர்த்த கால், சிறப்பு அபிஷேகம், பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவை,

    கோவை அவினாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) மகா கணபதி ஹோமம், முகூர்த்த கால், சிறப்பு அபிஷேகம், கிராம சாந்தி, பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 20-ந் தேதி அக்னிசாட்சி நிகழ்ச்சி, 21-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 22-ந் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 23-ந் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 24-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 25-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 26-ந் தேதி சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது.

    27-ந் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீர், கொடி இறக்குதல், கம்பம் கலைத்தல், 28-ந் தேதி தமிழில் லட்சார்ச்சனை, 30-ந் தேதி சங்காபிஷேகம், வசந்த உற்சவம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் திருவிழா காலங்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

    ×