search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் என ஏமாற்றி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி 10 நாட்கள் சிறை வைத்து 30 பவுன் நகைகள் பறித்து சென்ற கும்பல்
    X

    போலீஸ் என ஏமாற்றி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி 10 நாட்கள் சிறை வைத்து 30 பவுன் நகைகள் பறித்து சென்ற கும்பல்

    • 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் டாலர் காலனியில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையை சேர்ந்த போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறி அவரை மிரட்டினர். பின்னர் 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து சஞ்சீவியை அவர்கள் கோவைக்கு கடத்தி வந்தனர். வரும் வழியில் அவரது டிரைவரை கரூரில் இறக்கி விட்டு வந்தனர். பின்னர் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது 7 பேர் கொண்ட கும்பலுடன் கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் என கூறி அங்கு வந்தார். அவருடன் கிப்சன், அலெக்ஸ் ஆகியோரும் வந்து இருந்தனர்.

    இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். ஆனால் அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கும்பல் பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்து இருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச் செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கி விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்கவும் என கூறி விட்டு சென்றனர். இது குறித்து சஞ்சீவி காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மிரட்டி ரியஸ் எஸ்டேட் அதிபரை கடத்தி 8 நாட்கள் சிறை வைத்து மிரட்டி 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×