என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 4-ம் கட்ட வேள்வி பூஜையுடன் தொடங்கியது.
    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கரிவரதராஜ பெருமாளின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவனாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

    கோவில் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளியன்று முதற்கட்ட வேள்வி பூஜையுடன் தொடஙகியது. இதில் திவ்ய பிரபந்தம்,வேத பாராயணம் தொடக்கம், திருவாதாரணம் சாற்று முறை நடைபெற்றன.

    நேற்று 2 -ம் கட்ட வேள்வி பூஜைகளும், பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம், பெருமாள் யாகசாலைக்கு எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.தொடர்ந்து மாலை 4 மணியளவில் 3 -ம் கட்ட வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

    இதில் விமான கலஸ ஸ்தாபனம், பாண்டுரங்கன், சக்கரத்தாழ்வார்,யோக நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயருக்கு பிரதிஷ்டை மருந்து சாற்றுதல், ஹோமம் - வேதபாராயணம் - திவ்ய பிரபந்தம் பூஜைகளும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 4-ம் கட்ட வேள்வி பூஜையுடன் தொடங்கியது. இதில் ஹோமம் வேத பாராயணம் - திவ்ய பிரபந்தம், நாடி சந்தானம், திருவாதாரணம், பூர்ணாஹூதி உபசாரங்கள், யாத்ரா தானம் கும்ப உத்தாபனமும் நடைபெற்றது.

    தொடர்ந்து யாக சாலையில் இருந்து ஸ்ரீ தாசபளஞ்சிக ஸ்ரீ ராமானுஜ பக்த ஜன சபையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு 8.30 மணிக்கு மகா (சம்ப்ரோக்ஷணம்) கும்பாபிஷேகம் நடைபெற்றது. காரமடை ஸ்ரீ வேத வியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமையில் கலசங்களில் இருந்து புனித நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், காரமடை, மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கரிவரதராஜ பெருமாளின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

    பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 

    • விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை விண்ணப்பம் வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார்

    கோவை,

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்காக கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று படிவம் வழங்கி பூர்த்தி செய்து, திரும்ப பெற்று இந்த திட்டத்துக்கென வடிவமைத்துள்ள மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,401 ரேஷன் கடைகளில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

    839 கடைகளுக்கு உட் பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 கார்டுதாரர்கள் விண்ணப்பம் பெற்று கொண்டனர்.

    அதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 விண்ணப்பம் பெறப்பட வில்லை.

    மீதமுள்ள 562 கடைக ுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இந்த கடைகளில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.

    ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். இவர்களிலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள், விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தி ருக்கின்றனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பம் வழங்க வில்லை.

    இரு முகாம்களிலும் சேர்த்து 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்க வில்லை.

    இவர்களுக்காகவே விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 குடும்பத்தினர் விண்ணப்பமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார். விடுபட்டோருக்கு நடத்தப்படும் சிறப்பு முகாமில் கூடுதல் விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் பூர்த்தி செய்து திரும்ப பெற்றுள்ள விண்ணப்பங்கள் அதிகம். ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருவாய் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கவுண்டம்பாளையத்தில் தொடங்கி துடியலூர் வரை நடந்தது.
    • பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    கோவை,

    கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ரன் பார் வீல் எனும் மாரத்தான் போட்டி, சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. இது கவுண்டம்பாளையத்தில் தொடங்கி துடியலூர் வரை நடந்தது. இங்கு 3, 5, 10 கிலோ மீட்டர் என்று 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் ஏற்படுத்தும் வகையில் நடந்த மாரத்தான் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஆண், பெண் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வீல் சேர் கூடைப்பந்து அணியின் முன்னணி வீரர்களும் பங்கேற்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    • பொதுப்பிரிவினருக்கான நேரடிக்கலந்தாய்வு 22 மற்றும் 23-ந் தேதியும் நடக்கிறது.
    • மாணவர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்து நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நாளை (21-ந் தேதி) நடக்கிறது.

    இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான பொதுப்பிரிவு மற்றும் தொழிற்முறை கல்வி பாடப்பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நாளை (21-ந் தேதி) மதியம் 3 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடக்கிறது.

    மேலும், பொதுப்பிரிவினருக்கான நேரடிக்கலந்தாய்வு 22 மற்றும் 23-ந் தேதியும் நடக்கிறது. நேரடி கலந்தாய்விற்கான கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 7.5 சதவீத இடஒதுக்கீடு பொதுப்பிரிவு, தொழில்முறை கல்வி பாடப்பிரிவினர், பொதுப்பிரிவினர் மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வில் பங்கேற்க குறுஞ்செய்தி மாணவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

    எனவே, மாணவர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்து நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மறு பரீசிலனை செய்யப்ப டாது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு நான்காம் வேள்வி நடக்கிறது.
    • கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் கனகராஜ், தக்கார் ராஜேஷ் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

    முன்னதாக காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு நான்காம் வேள்வி நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு விமான கலசத்துக்கும், 8.30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கும் திருக்குட நன்னீராட்டு (கும்பாபிஷேகம்) நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து காலை 8.45 மணிக்கு குரு மகா சன்னிதானங்கள் சிரவை ஆதினம் குமரகுருபரசாமிகள், பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் ஆகியோர் அருளாசி வழங்குகின்றனர்.

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் கனகராஜ், தக்கார் ராஜேஷ் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது.
    • கோவையில் இருந்து 10 வாகனங்களில் பயணம்

    கோவை,

    கோவை புறநகர் அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணைத்தலைவர் செபி செபாஸ்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று, கழக பொதுசெய லாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் கோவையில் இருந்து மதுரை மாநாட்டுக்கு செல்வதற்காக 10 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    எனவே கழக நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து, மதுரை மாநாட்டை வரலாற்று வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, செல்போன் திருட்டு நடைபெற்றது.
    • மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை.

    கோவை ரேஸ்கோர்ஸ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன் (40). இவர் திருப்பூரில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் துணை வணிகவரி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் திருப்பூரில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தார்.

    பின்னர் காந்திபுரத்தில் இருந்து டவுன் பஸ்சில் உப்பிலிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ரேஸ்கோர்சில் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அங்குள்ள இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, அவரின் அருகே மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடி விட்டது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

    • மாநகராட்சி பகுதியில் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களும் கண்காணிக்கப்பட உள்ளன.
    • கட்டிடங்களின் உயரத்தை அளவீடு செய்யும் வகையிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சி பகுதிகளில் வரைபட அனுமதியை மீறி கட்டப்பட் டுள்ள கட்டிடங்களை டிரோன் காமிராக்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என முதல்கட்டமாக கிராஸ்கட் சாலை பகுதியில், தனியார் அமைப்பின் பங்களிப்புடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதில், பல கட்டிடங்கள் விதிகளை மீறி கூடுதல் அளவுகளுடன் கட்டியதும், சில கட்டிடங்கள் வீடு கட்டுவதற்கான உரிமம் பெற்றுக் கொண்டு வணிக ரீதியாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கட்டிடத்துக்கு உரிய வரி பெறப்பட்டு,அதன் பிறகு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகராட்சி பகுதியில் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. குறிப்பாக உயரமான கட்டிடங்கள் அனுமதி பெற்ற அளவுகளில் கட்டப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறியவும் கட்டிடங்களின் உயரத்தை அளவீடு செய்யும் வகையிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த டிரோன் மூலம் கட்டிடங்களின் அளவு, வரை படம் உள்ளிட்டவற்றை கண்காணித்து குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால், அவற்றை எளிதில் கண்டறிய முடியும்.அனுமதி பெற்ற அளவுக்கு மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதற்கு உண்டான வரிவிதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • கோவையில் 6.89 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
    • இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடந்தது.

    முதல், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 1401 முகாம்களில் இதுவரை ஆனைமலையில் 42,731, அன்னூரில் 43,509, கோவை வடக்கில் 16,0160, தெற்கில் 75,409, கிணத்துக்கடவில் 23,346 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    அதேபோல், மதுக்கரை யில் 61,827, மேட்டுப்பா ளையத்தில் 58,072, பேரூரில் 76,025, பொள்ளாச்சியில் 62,306, சூலூரில் 73,300, வால்பாறையில் 12577 விண்ணப்பங்கள் என மொத்தம் 11 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இம்முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் சில கார ணங்களால் விண்ணப்பப் படிவம் பெறாமலும், சில குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பப் படிவம் பெற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களில் சமர்ப்பிக்காமலும் இருப்பது தெரியவந்தது.

    முதல்வரின் உத்தர வின்படி வருவாய்த் துறையின் கீழ், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும், ஏற்கெனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்களும் பதிவு செய்ய 3 நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. அதன்படி விண்ணப்பத்தை பதிவு செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

    இன்றும், நாளையும் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக் கொள்ளலாம்.ஏற்கெனவே முதல், இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் அதே இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    விண்ணப்பப் படிவங்கள் பெறாத குடும்ப அட்டை தாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளித்து பயனடையலாம் என கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • மாணவியை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
    • போலீசார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகும். நான் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறேன்.

    காரமடை அருகே எனது உறவினர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் தான் நான் கல்லூரியில் தங்குவதற்கு பாதுகாவலராக இருந்து வருகிறார். என்னை ஊருக்கு அழைத்து செல்வது, திரும்ப கல்லூரியில் கொண்டு வந்து விடுவதும் அவர் தான்.

    எனது சொந்த ஊர் ஊட்டி என்பதால் அடிக்கடி அங்கு செல்ல முடியாது. இதனால் நான் காரமடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வார இறுதிநாட்களில் சென்று விடுவேன். அங்கு 2 நாட்கள் தங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்து விடுவேன்.

    எனது உறவினர் வீட்டில் அவருடன், அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரரும் இருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி நான் கல்லூரியில் இருந்து எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்தேன்.

    அன்று இரவு உறவினரின் மைத்துனர் கணேசன், குளிர்பானம் வாங்கி வந்து என்னை குடிக்குமாறு கூறினார். நான் செல்லும் நேரங்களில் எல்லாம் அவர் இதுபோன்று குளிர்பானம் வாங்கி தந்ததால் நானும் மறுப்பு தெரிவிக்காமல் அதனை வாங்கி குடித்தேன்.

    குடித்த சில நிமிடங்களில் எனக்கு சோர்வு ஏற்பட்டு என்ன நடப்பது என்றே தெரியாமல் மயங்கி விட்டேன். அந்த சமயம், அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.மறுநாள் காலை எனது அறையில் இருந்து அவர் ஓடியதை பார்த்த நான், கண்விழித்த பின்பு இதுகுறித்து அவரிடம் கேட்டேன்.

    ஆனால் அவர் அதற்கு இதனை யாரிடமாவது தெரிவித்தால் என்னையும், என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நானும் பயந்து போய் இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நான் எனது சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து எனது தாய் என்னை ஊட்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியான எனது தாய், என்னிடம் விசாரித்தார்.

    அப்போது நான் எனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பெற்றோரிடம் கூறி விட்டேன். அதன்பின்னர் நாங்கள் அங்கிருந்து கோவைக்கு வந்து விட்டோம். தற்போது நான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.

    என்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    • வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    • வனத்துறையினர் பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை யானை நடமாடி வந்தது.

    இந்த யானை அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வந்தது. ஆனால் இதுவரை மனிதர்கள் எவரையும் அந்த யானை தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை.

    எனினும் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதற்காக 2 கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியை மேற்கொண்டனர். ஆனால் யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் பாகுபலி யானை வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாட தொடங்கியது.

    மேலும் யானையின் வாயில் காயம் இருப்பததால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவிக்கவே, வனத்துறையினர் மருத்துவ குழுவினர் மற்றும் 2 கும்கி யானைகளுடன், பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக யானையை தேடும் பணியை தொடங்கினர்.

    தொடர்ந்து யானையை கண்காணித்த போது, வாயில் ஏற்பட்ட காயம் குணமாகி வந்து தெரிய வரவே சிகிச்சை அளிப்பதற்கான கட்டாயம் ஏற்படவில்லை என மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் அறிக்கை வெளியிட்டனர்.

    மேலும் யானையின் நடமாட்டம் குடியிருப்பை ஓட்டிய பகுதிகளுக்குள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் காணப்படுகிறது.

    நேற்றிரவு பாகுபலி யானை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வனப்பகுதியில் ஒருபுறம் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல கம்பீரமாக ரோட்டை கடந்து சென்றது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேட்டுப்பா ளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    இதனையடுத்து பாகுபலி யானை சாவகாசமாக சாலையை கடந்து சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்த பாகுபலி யானை இன்று காலை மீண்டும் சமயபுரம் ஊருக்குள் சாவகாசமாக உலா வந்தது.

    இரண்டு மாதங்கள் ஆகியும் தனது வழித்தடத்தை மறக்காமல் மீண்டும் அதே பாதையில் சமயபுரம் வழியாக மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் வன ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • ஜமுனா கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை.

    கோவை கவுண்டம்பாளையம் டிவி. எஸ் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி ஜமுனா (வயது 55). இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார்.

    அப்போது கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார். இந்த நேரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் ஜமுனாவிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.இந்த நிலையில் ஜமுனா கல்லூரிக்கு வந்தார்.

    அப்போது அவரிடம் சக ஊழியர்கள், ஏன் செயின் அணிந்து வர வில்லை என்று கேட்டு உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமுனா கழுத்தில் தொட்டு பார்த்தார். அப்போது தான் அணிந்திருந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×