என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • ஸ்ரீசுதர்சன ஹோமம் மற்றும் விசேஷ கோ பூஜை நடக்கிறது.
    • இங்கு பக்தர்களின் நவக்கிரக தோஷங்கள் நீங்கவும் பரிகாரம் செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு அருகே உள்ள குமார வாடியில் புகழ்வாய்ந்த கோ ஆலயம் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று மக்கள் வாழ்வில் செல்வம் கொழிக்கவும், உடல் ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு மற்றும் மன நிம்மதி பெற ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டில் மக்களின் வாழ்வு வளம் பெறவும், அளவில்லாத செல்வம் பெருகவும் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது.

    மக்கள் உடல் பிணியில் இருந்து விடுபட்டு சுகாதாரமான, ஆரோக்கியமான, மன நிம்மதியான வாழ்வு பெற தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. இங்கு பக்தர்களின் நவக்கிரக தோஷங்கள் நீங்கவும் பரிகாரம் செய்யப்படுகிறது.

    இதற்காக ஸ்ரீசுதர்சன ஹோமம் மற்றும் விசேஷ கோ பூஜை நடக்கிறது. அனைத்து ஹோமங்களும் 15 -ந்தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

    ஹோமத்தில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • காரில் இருந்த கோவளம் மாதா கோயில் தெருவை சேர்ந்த வேம்புலி என்வரை போலீசார் கைது செய்தனர்.
    • சுமார் 25 கிலோ கடல் புழுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்போரூர்:

    கோவளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கூவத்தூர் பகுதிக்கு தடை செய்யப்பட்ட உவர் நீர் கடல் புழுக்கள் கடத்தப்படுவதாக திருப்போரூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருப்போரூர் வனச்சரகர் கல்யாண் தலைமையில் அதிகாரிகள் குமரேசன், பெருமாள் உள்ளிட்டோர் கிழக்கு கடற்கரைச் சாலை கோவளம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட உவர் நீர் கடல் புழுக்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து காரில் இருந்த கோவளம் மாதா கோயில் தெருவை சேர்ந்த வேம்புலி என்வரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி அவரது வீட்டில் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிவப்பு உவர் நீர் கடல் புழுக்களை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் சுமார் 25 கிலோ கடல் புழுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    தடை செய்யப்பட்ட இந்த வகையான உவர் நீர் கடல் புழுக்கள் கடற்பகுதியை ஒட்டி உள்ள முகத்துவாரம், கழிவேலி பகுதிகளில் அதிக அளவில் காணப்படும். மேலும் இறால் வளர்க்கும் நபர்கள் இதுபோன்ற உவர்நீர் கடல் புழுக்களை இறாலுக்கு கொடுப்பதினால் இறாலின் எடை அதிகமாகி அதை வெளிநாட்டிற்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தடைசெய்யப்பட்ட கடல் புழுக்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அதிவேகத்தில் சென்றதால் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • சரத்குமார் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகில் சாலையோரத்தில் இருந்த கற்கள் மீது ஏறியது.

    அதிவேகத்தில் சென்றதால் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் சரத்குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் தாறுமாறாக ஓடியபோது அவ்வழியே மற்ற வாகனங்கள் வராததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    சரத்குமார் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது.
    • பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள நாவலூரில் மதுக்கடை உள்ளது. இங்கு வந்த வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபாட்டில் கேட்டார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் அடைந்த ஊழியர் பரிசோதித்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மக்கடை ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது அந்த வாலிபர் தான் ஓட்டிவந்த ஷேர் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த ஆட்டோவை எடுக்க வந்தபோது மதுக்கடை ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது. பின்னர் அவரை தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளியான உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசனுடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எபினேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.

    கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரிவித்து உள்ளனர். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்தது எப்படி? எவ்வளவு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகில் சாலை யோரத்தில் இருந்த கற்கள் மீது ஏறியது.
    • கார் தாறுமாறாக ஓடிய போது அவ்வழியே மற்ர வாகனங்கள் வராததால் பெரிய அளவில் அசம்பா விதம் ஏற்படவில்லை.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகில் சாலை யோரத்தில் இருந்த கற்கள் மீது ஏறியது.

    அதிவேகத்தில் சென்ற தால் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் சரத்குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக காய மின்றி உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் தாறுமாறாக ஓடிய போது அவ்வழியே மற்ர வாகனங்கள் வராததால் பெரிய அளவில் அசம்பா விதம் ஏற்படவில்லை.

    சரத்குமார் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுக்கடை ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது அந்த வாலிபர் தான் ஓட்டிவந்த ஷேர் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரிவித்து உள்ளனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள நாவலூரில் மதுக்கடை உள்ளது. இங்கு வந்த வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபாட்டில் கேட்டார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் அடைந்த ஊழியர் பரிசோதித்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மதுக்கடை ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது அந்த வாலிபர் தான் ஓட்டிவந்த ஷேர் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த ஆட்டோவை எடுக்க வந்தபோது மதுக்கடை ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது. பின்னர் அவரை தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளியான உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசனுடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எபினேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.

    கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரிவித்து உள்ளனர். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்தது எப்படி? எவ்வளவு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜி.எஸ்.டி.சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
    • தலையில் பலத்த காயம் அடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மாமல்லபுரம்:

    சிறுசேரி, பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்(வயது26). இவர் நேற்று இரவு நண்பர்களான செல்வா(26), வினோத்குமார்(30) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்றார்.

    மறைமலைநகர், ஜி.எஸ்.டி.சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த செல்வா, வினோத்குமார் ஆகியோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    • கொலையில் தொடர்புடைய பாக்கியலட்சுமியின் நண்பர் சங்கர் மற்றும் கோவில் பூசாரி வேல்முருகன் தலைமறைவாகி விட்டனர்.
    • கைதான பாக்கியலட்சுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவளத்தில் உள்ள சாமியார் வேல்முருகனை விசாரணைக்காக பழவந்தாங்கல் போலீசார் அழைத்து சென்று உள்ளனர்.

    திருப்போரூர்:

    சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் ஜெயந்தன்(வயது29). இவர் சென்னை விமான நிலையத்தில் உள்ள தாய்லாந்து விமான நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி சொந்த ஊரான விழுப்புரத்துக்கு செல்வதாக சகோதரியிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார். இதில் விமான நிறுவன ஊழியர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த செம்மாளம்பட்டியில் உள்ள தனது காதலியான பாக்கியலட்சுமியை பார்க்க சென்றபோது அங்கு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமியை போலீசார் கைதுசெய்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. விபசார அழகியான பாக்கியலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் ஜெயந்தன் அவரை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து இருப்பதும் பின்னர் ஒரே ஆண்டில் அவர்கள் பிரிந்து சென்றதும் தெரிந்தது.

    ஆனாலும் ஜெயந்தன், பாக்கியலட்சுமியை தொடர்ந்து குடும்பம் நடத்த அழைத்து உள்ளார். சம்பவத்தன்றும் ஜெயந்தன் காதலியான பாக்கியலட்சுமியை சந்திக்க சென்ற போது தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது பாக்கியலட்சுமி அதே பகுதியை சேர்ந்த நண்பரான சங்கர் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்து உள்ளார். பின்னர் ஜெயந்தன் உடலை துண்டு, துண்டாக வெட்டி எரித்து உள்ளனர். எரியாத உடல்பாகங்களை கட்டைப்பை மற்றும் சாக்கில் கட்டி 2 முறை கோவளம் பகுதிக்கு பாக்கியலட்சுமி எடுத்து வந்து உள்ளார்.

    பின்னர் கோவளத்தை சேர்ந்த கோவில் பூசாரியான வேல்முருகனின் உதவியுடன் ஜெயந்தனின் எரிந்த தலை மற்றும் உடல் பாகத்தை மூட்டையில் கட்டி கோவளத்தில் உள்ள பூமிநாத கோவிலை ஒட்டிய குட்டையில் வீசி சென்று இருப்பது தெரிந்தது.

    இந்த கொலையில் தொடர்புடைய பாக்கியலட்சுமியின் நண்பர் சங்கர் மற்றும் கோவில் பூசாரி வேல்முருகன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஜெயந்தனின் உடல்பாகங்களை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். நேற்று மதியம் ஜெயந்தன் உடல் பாகங்கள் வீச்ப்பட்ட குட்டையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடினர். அப்போது ஒரு மூட்டையில் இருந்த 3 பிளாஸ்டிக் பைகளில் எரிந்த நிலையில் இருந்த ஜெயந்தனின் தலை மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. அதனை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயந்தனின் உடல் பாகங்கள் வீசப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக பாக்கியலட்சுமியை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    கோவில் பூசாரி வேல்முருகன் போலீசார் விசாரணைக்கு சென்று விட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்து உள்ளது.

    கைதான பாக்கியலட்சுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவளத்தில் உள்ள சாமியார் வேல்முருகனை விசாரணைக்காக பழவந்தாங்கல் போலீசார் அழைத்து சென்று உள்ளனர். அப்போது சென்னைக்கு பாக்கியலட்சுமி வரும்போது தனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது அழகில் மயங்கி கொலைக்கு உதவினேன். என்னிடம் கொடுத்த ஜெயந்தனின் உடல் பாகத்தை குட்டையில் வீச யோசனை கூறினேன். உடலை மீட்க உதவி செய்வதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வேல்முருகனை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதன் பின்னர் வேல்முருகன் தலைமறைவாகி விட்டார்.

    ஜெயந்தனின் உடல் குட்டையில் வீசப்பட்ட பிறகு சுமார் 20-வது நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு உள்ளது. விபசார அழகியின் அழகில் மயங்கி கோவில் பூசாரியும் இந்த கொலைக்கு உதவி செய்து சிக்கி உள்ளார்.

    தலைமறைவான பூசாரி வேல்முருகன் மற்றும் பாக்கியலட்சுமியின் நண்பர் சங்கர் ஆகியோரை பிடிக்க தென்சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சிக்கியதும் இந்த கொலையில் மேலும் பல பரபரப்பு தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் தற்போது கொலைவழக்கு பதிவு செய்து உள்ளனர். பழவந்தாங்கல், பொன்னமராவதி, கோவளம் என 3 போலீசாரும் இந்த வழக்கை விசாரித்ததால் கொலை வழக்கு பதிவது எந்த போலீஸ் நிலையம் என்பது இழுபறியாக இருந்தது. தற்போது பழவந்தாங்கல் போலீசார் ஒரு மாதத்துக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான பாக்கியலட்சுமியை போலீசார் விசாரணை முடிந்து சிறையில் அடைத்தனர்.

    • தலைமறைவாக இருந்த சதீஷை திருப்போரூர் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
    • போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 55) இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    நேற்று இவருடைய பேத்திக்கு பெயர் வைக்கும் விழா நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் இரவு 10 மணி அளவில் தேவராஜ் மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

    இதற்கிடையே அப்பகுதியில் உள்ள மனைப்பிரிவில் தேவராஜ் பலத்த ரத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவராஜ் இறந்து போனார்.

    இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் தேவராஜை கொலை செய்தது அதே பகுதி மடம் தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 28) என்பது தெரிய வந்தது. நேற்று இரவு விழாவுக்கு வந்த சதீஷ் மது அருந்த தேவராஜை அழைத்துச் சென்றுள்ளார்.

    அதே பகுதியில் உள்ள தனியார் மனைப்பிரிவு அமைந்துள்ள இடத்துக்கு சென்ற இருவரும் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் சதீஷ் போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருந்த கல்லால் தேவராஜை தாக்கி கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    தலைமறைவாக இருந்த சதீஷை திருப்போரூர் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய நடுக்குப்பம் பகுதியில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    ஆந்திரா மாநிலம் உக்காட்டுபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடரமணா (வயது.33). இவர் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் பழைய நடுக்குப்பம் பகுதியில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் பூங்காவில் 2021-ம் ஆண்டு சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி நிறுத்தப்பட்டது.
    • கோடை விடுமுறைதான் வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கியமான சுற்றுலா சீசன் ஆகும்.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது வழக்கம்.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் பூங்காவில் 2021-ம் ஆண்டு சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்று பரவலின் போது 2021-22 கால கட்டத்தில் பல மிருகங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தன. 2021-ம் ஆண்டு 4 சிங்கங் கள், 3 புலிகள், ஒரு சிறுத்தை ஆகியவை இறந்தன.

    2022-ம் ஆண்டு ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு சிறுத்தை உள்ளிட்ட 4 விலங்குகள் இறந்தன. இவற்றில் 2 சிங்கங்கள் மிகவும் ஆரோக்கியமான சிங்கங்கள் ஆகும்.

    இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது.

    இந்நிலையில் வண்ட லூர் உயிரியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிங்கம் சவாரி மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று பார்வையாளர்கள் எதிர்பாார்த்து காத்திருந்தனர். இதையடுத்து பொது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வண்லூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி கோடை விடுமுறையின் போது தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைதான் வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கியமான சுற்றுலா சீசன் ஆகும். எனவே சிங்கம் சவாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது
    • மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள புராதன சின்னங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைகல் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அருகில் சென்று பார்த்து ரசிக்க, மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கிறது. ஒரு இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்று அனைத்து பகுதிகளையும் பார்வையிடலாம்.

    ஆனால் தொல்லியல்துறை வழிப்பாதையில் கலங்கரை விளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் அமைந்து இருப்பதால் அதையும் பார்க்கலாம் என கருதி சுற்றுலா பயணிகள் சென்றால் அனுமதிப்பது கிடையாது.

    இதற்கு கப்பல் போக்குவரத்து துறையினர்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    தற்போது கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மத்திய அரசின் இரு துறைகளும் ஒரே கட்டணத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    ×