என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- ஜி.எஸ்.டி.சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
- தலையில் பலத்த காயம் அடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாமல்லபுரம்:
சிறுசேரி, பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்(வயது26). இவர் நேற்று இரவு நண்பர்களான செல்வா(26), வினோத்குமார்(30) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்றார்.
மறைமலைநகர், ஜி.எஸ்.டி.சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த செல்வா, வினோத்குமார் ஆகியோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story






