என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாறுமாறாக ஓடிய கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- வாலிபர் உயிர் தப்பினார்
    X

    தாறுமாறாக ஓடிய கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- வாலிபர் உயிர் தப்பினார்

    • அதிவேகத்தில் சென்றதால் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • சரத்குமார் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகில் சாலையோரத்தில் இருந்த கற்கள் மீது ஏறியது.

    அதிவேகத்தில் சென்றதால் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் சரத்குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் தாறுமாறாக ஓடியபோது அவ்வழியே மற்ற வாகனங்கள் வராததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    சரத்குமார் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×