search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2½ லட்சம் கள்ளநோட்டுடன் இரண்டு வாலிபர்கள் கைது
    X

    ரூ.2½ லட்சம் கள்ளநோட்டுடன் இரண்டு வாலிபர்கள் கைது

    • பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது.
    • பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள நாவலூரில் மதுக்கடை உள்ளது. இங்கு வந்த வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபாட்டில் கேட்டார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் அடைந்த ஊழியர் பரிசோதித்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மக்கடை ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது அந்த வாலிபர் தான் ஓட்டிவந்த ஷேர் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த ஆட்டோவை எடுக்க வந்தபோது மதுக்கடை ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது. பின்னர் அவரை தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளியான உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசனுடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எபினேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.

    கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரிவித்து உள்ளனர். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்தது எப்படி? எவ்வளவு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×