என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மின் தட வயர்களில் புதிய பாலிமர் இன்சுலேட்டர்களும் பொறுத்தப்பட்டது.
    • பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் 70 ஆயிரம் ச.அடி., பரப்பளவு கொண்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல், ஆகஸ்ட் 10-ந்தேதி வரை, சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறுகிறது.

    போட்டி நடைபெறும் பூஞ்சேரி "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கம் 70 ஆயிரம் ச.அடி., பரப்பளவு கொண்டது. ஆனால் கூடுதலாக 50 ஆயிரம் ச.அடி தேவை என்று இந்திய செஸ் கூட்ட மைப்பினர் தமிழக அரசிடம் கேட்டனர்.

    இதையடுத்து போட்டி நடைபெறும் அரங்கின் வடபகுதியில் இருந்த திறந்தவெளி கார் நிறுத்தம் பகுதியை, அரங்கமாக மாற்றிக் கொடுக்க அரசு ஒப்புக்கொண்டது.,

    உடனடியாக அங்கிருந்த 20 மரங்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து பிரமாண்டமான தற்காலிக விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் புதிய அரங்கத்திற்கு தேவையான மின்சார வசதிகள் தங்களிடம் இல்லை என அரங்கத்தின் நிர்வாகம் கூறியதால் தமிழக மின் வாரியம் ஆலத்தூர், பூஞ்சேரி துணை மின் நிலையங்களின் உயர் அழுத்த மின் தடத்தில் அரங்கம் அருகே புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டு பயன் பாட்டிற்கு வந்தது.

    24 மணி நேரமும் மின் தடங்கல் வராத வகையில், மின் தட வயர்களில் புதிய பாலிமர் இன்சுலேட்டர்களும் பொறுத்தப்பட்டது. இதை தினசரி கவனிக்க 10 க்கும் மேற்பட்ட சிறப்பு மின் பொறியாளர்களை மின்சார வாரியம் நியமித்துள்ளது.

    • மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விஞ்சியம்பாக்கம் ரெயில்வே கேட் அருகே பழுதடைந்த மின்கம்பம் ஒன்று உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம்பாக்கம் ரெயில்வே கேட் அருகே பழுதடைந்த மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை தாண்டிதான் ஈஸ்வரிநகர், மற்றும் செட்டி புண்ணியம். வடகால் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியும் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றக் கோரி பல முறை சிங்கப்பெருமாள் கோயில் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த பயனுமில்லையென்றும், ஆகவே மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுராந்தகத்தில் 2 செ.மீட்டர் மழையும் பெய்தன.
    • 2வது நாளாக நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தன.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளாக சிங்கப்பெருமாள் கோயில், புலிப்பாக்கம், நென்மேலி, பட்ரவாக்கம், வெங்கிடாபுரம், தென்மேல்பாக்கம், குன்னவாக்கம். உள்ளிட்ட பல இடங்களில் 2 -வது நாளாக. நேற்றும் நள்ளிரவு திடீரென மழை பெய்ய தொடங்கின சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் புரண்டோடின. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 24 செ.மீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 15.6 செ.மீட்டர் மழையும், திருப்போரூரில் 14.6 செ.மீட்டர் மழையும், செங்கல்பட்டில் 10.4 செ.மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 10.4 செ.மீட்டர் மழையும், செய்யூரில் 10 செ.மீட்டர் மழையும், தாம்பத்தில் 8 செ.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக மதுராந்தகத்தில் 2 செ.மீட்டர் மழையும் பெய்தன.

    • செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கூடுவாஞ்சேரி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் தனசேகர், வட்டார தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கூடுவாஞ்சேரி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் தனசேகர், வட்டார தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • பல்லவ சாம்ராஜ்ய பூமியில் அமர்ந்து நான் யோகா செய்ததை பெருமையாக உணர்கிறேன்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் 3 இடங்களில் யோகா பயிற்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலை 6 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் யோகா பயிற்சி தொடங்கியது. இதில் மத்திய சமூகநீதித்துறை மந்திரி நாராயணசாமி கலந்து கெண்டார். 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு பிரதமர் மோடி பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த யோகா நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பாரதிய ஜனதாகட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் மத்திய மந்திரி நாராயணசாமி பங்கேற்றார்.

    இதைத்தொடர்ந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 கலைஞர்களுக்கு தங்க தாமரை விருதை மத்தியமந்திரி நாராயணசாமி வழங்கினார்.

    ஆவடியில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்டவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் மத்திய ரிசர்வ் காவல்துறை துணைத்தலைவர் எம்.தினகரன், மத்திய பயிற்சி காவல் துணைத்தலைவர் கேவல்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து யோகா கலை நிபுணர் வினோத் கூறும்போது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 58நாடுகளில் தொடங்கப்பட்ட இந்த யோகா தற்போது 183 நாடுகளில் கடைபிடிக்கபடுகிறது. உடல் நலத்தை பாதுகாக்க யோகா முக்கிய பங்காற்றுகிறது. யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    பல்லவ சாம்ராஜ்ய பூமியில் அமர்ந்து நான் யோகா செய்ததை பெருமையாக உணர்கிறேன்.

    அ.தி.மு.க வில் ஒற்றை தலைமை என்பது அவர்களது கட்சி நிலைப்பாடு. நாங்கள் தலையிடவோ,கருத்து சொல்லவோ விரும்பவில்லை. எல்லாம் நாளை மறுநாள் சரியாகி விடும். அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும். எங்களது கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை கிராமம், கிராமமாக அதிகரித்து வருகிறது.

    "அக்னிபாத்" இராணுவ திட்டம் பற்றி எதிர் கட்சிகள் தவறாக மக்களிடம் திணிக்கிறார்கள். இளைஞர்களை முன்புபோல் பொய் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் நன்றாக படித்து புரிந்து வருகிறார்கள். எனவே அக்னிபாத் திட்டம் மோடி நினைத்ததை விட எழுச்சி அடையும். இராணுவமும் பலமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செஸ் ஒலிம்பியாட் சுடர் ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்படவுள்ளது.
    • செஸ் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாமல்லபுரம், பூஞ்சேரியில் இன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

    இந்த ஆய்விற்கு பின், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    44-வது செஸ் ஒலிம்பியாட் இதுவரை எந்த நாட்டிலும் இதுபோன்ற போட்டி நடத்தப்படவில்லை என உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிரதமர் 19.06.2022 அன்று டெல்லியில் இப்போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். இந்த ஒலிம்பிக் சுடர் 75 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் போட்டி நடைபெறுகின்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து வழங்கப்படவுள்ளது.

    இப்போட்டிக்காக சர்வதேச தரத்திலான 52-ஆயிரம் சதுர அடி பரப்பிலான நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கெனவே உள்ள 22- ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கமும் நவீனப்படுத்தப்படுகிறது. இதில் விளையாட்டு வீரர்களுக்காக 500 செஸ் போர்டுகள் அமைக்கப்படவுள்ளது. இப்போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. மின் வாரியம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் பணிகளை மேற்கொள்ள 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்துள்ளார்.

    இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 4 அணிகள் , பிற நாடுகளிலிருந்து 227 அணிகள் பங்கேற்கவுள்ளன. வீரர்களின் நலன் கருதி சுகாதாரமான உயர்தர நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை மூலம் மேற்கொளப்படும்.

    தமிழ்நாடு முதலமைச்சர், இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 15 நாட்களுக்கான ரூபாய் 2 இலட்சம் காப்பீடு வசதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • தினமும் மாலை நேரத்தில் பூங்கா இயக்குனர் அலுவலகம் அருகே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஏற்கனவே ஒப்பந்த பணியாளர்கள் முறையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தல்

    செங்கல்பட்டு:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வகையில் பூங்கா நிர்வாகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பூங்காவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 6-ந்தேதி முதல் தொடர்ந்து தினந்தோறும் மாலை நேரத்தில் பூங்கா இயக்குனர் அலுவலகம் அருகே கோஷங்களை எழுப்பி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பூங்காவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டத்தின்போது உடனடியாக தனியாரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பூங்கா நிர்வாகம் ரத்து செய்து ஏற்கனவே ஒப்பந்த பணியாளர்கள் முறையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி.
    • தனியாக வருபவர்களை நோட்டமிட்டு கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட டி.டி.சி நகரை சேர்ந்த கார்த்திக், தைலாவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய 2 பேரை இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இரவு நேரங்களில் தனியாக வருபவர்களை நோட்டமிட்டு கத்தி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கார்த்திக் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சந்தேகத்திற்கு இடமாக காணப்படும் நபர்களை உடனடியாக துப்பாக்கி முனையில் பிடித்து விசாரிப்பார்கள்.
    • ரிசார்ட் ஹாலில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியபிரியா தலைமையில் நடைபெற்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை.28 முதல், ஆகஸ்ட் 10வரை நடைபெறுகிறது., இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுப்பது எப்படி? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தின் அருகே உள்ள ரிசார்ட் ஹாலில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியபிரியா தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக செங்கல்பட்டு எஸ்.பி சுகுனாசிங், டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், உள்ளிட்ட போலீஸ் பாதுகாப்பு குழுவினர் போட்டி நடைபெறும் வளாகம், வீரர்களின் கார்கள் நிறுத்தும் பகுதி, நுழைவு வாயில், வெளியே செல்லும் பகுதி ஆகியவற்றை, ரிசார்ட்டின் பேட்டரி வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஆலோசனை கூட்டத்தில் செஸ் வீரர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி? என்பது குறித்து பேசப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முதல் அடுக்கு அரங்கத்தின் வளாக நுழைவு வாயில் பகுதியில் கமாண்டோ படை வீரர்கள், செஸ் வீரர்களின் வாகனம், அவர்களின் அடையாள அட்டை போன்றவற்றை சோதணை செய்து உள்ளே அனுப்புவர்.

    இரண்டாவது அடுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் அந்த வாகனம் முழுவதையும் வெடிகுண்டு சோதனை செய்த பின்னர் கார்பார்க்கிங் பகுதிக்கு அனுப்பி வைத்து பின்னர் பாதுகாப்புடன் பேட்டரி வாகனத்தில் அரங்கத்திற்கு அழைத்து செல்வார்கள்.

    மூன்றாவது அடுக்கு ஆயுதப்படை வீரர்கள் 24மணி நேரமும் அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் நவீன துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபடுவதுடன், சி.சி.டி.வி கேமராக்களை கண்காணித்து வருவார்கள். சந்தேகத்திற்கு இடமாக காணப்படும் நபர்களை உடனடியாக துப்பாக்கி முனையில் பிடித்து விசாரிப்பார்கள்.

    இது போன்ற மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு எங்கெல்லாம் "பாய்ண்ட்" வைக்கலாம் என்பது குறித்து டி.ஐ.ஜி சத்யபிரியா போலீசாருடன் ஆலோசனை நடத்தி வரைபடம் தயாரிக்க அறிவுறுத்தினார்.

    • ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மதுராந்தகம்:

    ராணுவத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை யில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். அவர்கள் ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கேயே அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாய்கள் புள்ளி மானை விரட்டி விரட்டி கடித்தன.
    • மானை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் புதுப்பட்டி நம் பக்கிங்காம் பகுதி தைல மர காட்டுக்குள் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்தது.

    இதனை கண்ட 5-க்கும் மேற்பட்ட நாய்கள் புள்ளி மானை விரட்டி விரட்டி கடித்தன. இதில் பலத்த காயம் அடைந்த மான் உயிருக்கு போராடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றினர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் திருக்கழுகுன்றம் வனத்துறை அதிகாரிகளுடன் விரைந்து வந்து காயத்துடன் இருந்த மானை மீட்டனர்.

    அந்த மானை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

    • சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது.
    • வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலை சாலை விரிவாக்கப்பணிக்கு இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று கோவிலை அகற்ற அதிகாரிகள் சென்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கோவிலுக்கான மாற்று இடத்தை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தருவதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து கோவிலை நாளை(இன்று) அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் கோவிலை இடிக்காமல் அதிகாரிகள் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் பவானி அம்மன் கோவிலை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர்.

    இதுபற்றி அறிந்ததம் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×