search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காட்டாங்கொளத்தூர் அருகே சாலை விரிவாக்க பணிக்கு பவானி அம்மன் கோவில் இடிப்பு- பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
    X

    பவானி அம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்ட போது எடுத்தபடம்


    காட்டாங்கொளத்தூர் அருகே சாலை விரிவாக்க பணிக்கு பவானி அம்மன் கோவில் இடிப்பு- பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

    • சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது.
    • வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலை சாலை விரிவாக்கப்பணிக்கு இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று கோவிலை அகற்ற அதிகாரிகள் சென்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கோவிலுக்கான மாற்று இடத்தை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தருவதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து கோவிலை நாளை(இன்று) அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் கோவிலை இடிக்காமல் அதிகாரிகள் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் பவானி அம்மன் கோவிலை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர்.

    இதுபற்றி அறிந்ததம் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×