என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு- டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
- சந்தேகத்திற்கு இடமாக காணப்படும் நபர்களை உடனடியாக துப்பாக்கி முனையில் பிடித்து விசாரிப்பார்கள்.
- ரிசார்ட் ஹாலில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியபிரியா தலைமையில் நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை.28 முதல், ஆகஸ்ட் 10வரை நடைபெறுகிறது., இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுப்பது எப்படி? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தின் அருகே உள்ள ரிசார்ட் ஹாலில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியபிரியா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக செங்கல்பட்டு எஸ்.பி சுகுனாசிங், டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், உள்ளிட்ட போலீஸ் பாதுகாப்பு குழுவினர் போட்டி நடைபெறும் வளாகம், வீரர்களின் கார்கள் நிறுத்தும் பகுதி, நுழைவு வாயில், வெளியே செல்லும் பகுதி ஆகியவற்றை, ரிசார்ட்டின் பேட்டரி வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் செஸ் வீரர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி? என்பது குறித்து பேசப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் அடுக்கு அரங்கத்தின் வளாக நுழைவு வாயில் பகுதியில் கமாண்டோ படை வீரர்கள், செஸ் வீரர்களின் வாகனம், அவர்களின் அடையாள அட்டை போன்றவற்றை சோதணை செய்து உள்ளே அனுப்புவர்.
இரண்டாவது அடுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் அந்த வாகனம் முழுவதையும் வெடிகுண்டு சோதனை செய்த பின்னர் கார்பார்க்கிங் பகுதிக்கு அனுப்பி வைத்து பின்னர் பாதுகாப்புடன் பேட்டரி வாகனத்தில் அரங்கத்திற்கு அழைத்து செல்வார்கள்.
மூன்றாவது அடுக்கு ஆயுதப்படை வீரர்கள் 24மணி நேரமும் அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் நவீன துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபடுவதுடன், சி.சி.டி.வி கேமராக்களை கண்காணித்து வருவார்கள். சந்தேகத்திற்கு இடமாக காணப்படும் நபர்களை உடனடியாக துப்பாக்கி முனையில் பிடித்து விசாரிப்பார்கள்.
இது போன்ற மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு எங்கெல்லாம் "பாய்ண்ட்" வைக்கலாம் என்பது குறித்து டி.ஐ.ஜி சத்யபிரியா போலீசாருடன் ஆலோசனை நடத்தி வரைபடம் தயாரிக்க அறிவுறுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்