search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு- மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது
    X

    ரெயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தபோது எடுத்தபடம்


    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு- மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது

    • ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மதுராந்தகம்:

    ராணுவத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை யில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். அவர்கள் ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கேயே அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×