என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டம் வட்டிக்கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்ற முயன்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டத்தில் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் வட்டி கடை நடத்தி வருபவர் லாது லால் ஜெயின் மகன் அணில் ஜெயின் (வயது 33). இவரது கடையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த மகாதேவன் மகன் துரை (63) என்பவர் அடிக்கடி பொருட்களை அடமானமாக வைத்து பணம் பெற்று செல்வார். பின்னர் மீட்டு செல்வார். இதேபோல் சம்பவத்தன்று துரை மற்றும் அவரது நண்பர்களான சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த குப்புசாமி மகன் தர்மலிங்கம் (70), அரியலூர் கணபதி நகரை சேர்ந்த அழகு முத்து மகன் சரவணன் (51) ஆகிய மூவரும் சேர்ந்து 4 ஜோடி கொலுசுகளை வெள்ளி கொலுசு என கூறி அடமானம் வைத்து பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த வெள்ளி கொலுசுகளை சோதனை செய்து பார்த்தபோது அது வெள்ளி கொலுசுகள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அணில் ஜெயின் வெள்ளி கொலுசு என கூறி ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த துரை, தர்மலிங்கம், சரவணன் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உடையார்பாளையத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
- கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பா ளையம் திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த கண்ணன் மனைவி வனிதா(வயது34). இவருக்கும் கழுமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சுதாகர்(30), தர்மலிங்கம் மனைவி ஜெயக்கொடி, செந்தில் மனைவி பழனி யம்மாள் ஆகியோ ருக்கும் இடப்பி ரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வனிதா இடத்திற்கு வந்த சுதாகர் அடைத்திருந்த கம்பி வேலியினை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து ள்ளார். இது குறித்து உடையா ர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.
- அரியலூர்: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது
- ஜூன் 20ம் தேதி நடக்கும் என்று கலெக்டர் அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூன் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு புல் நொறுக்கும் கருவி வழங்கப்பட உள்ளது
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின், தீவன அபிவிருத்தி திட்டம் – மூலம் புல் நொறுக்கும் கருவி, 50 சதவீதம் மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நொறுக்கும் கருவி 40 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 50 சதவிகிதம் அரசு மானியத்திலும், 50 சதவிகிதம் பயனாளிகள் பங்குத்தொகை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் இதுவரை எந்த திட்டத்திலும் அரசு மானியத்தில் புல் நொறுக்கும் கருவி பெறாதவர்களாக இருக்கவேண்டும். மேலும் 0.25 ஏக்கர் நிலத்தில் தீவனபுல் பயிரிட்டு இருக்கவேண்டும். குறைந்தது 2 பசு அல்லது எருமை வளர்க்கும் விவசாயிகளுக்கு மின்சார புல் நொறுக்கும் கருவி வழங்கப்படும். பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், அலைபேசி எண், ஆதார் எண் தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறுகிறது
- 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், தளவாய் கிராமம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 24ந்தேதி காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி. பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனையும் கட்டணமின்றி செய்து கொள்ளலாம். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறுப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயர்வேத மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். எனவே, இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரிய லூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யின் முதல்வர் முத்து கிரு ஷ்ணன், பொது சுகாதார துணை இயக்குநர் செந்தி ல்குமார், துணை இயக்கு நர்கள்இளவரசன், சுதாகர், வருவாய் கோட்டாட்சி யர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தண்ணீர் கேட்ட மகளுக்கு தவறுதலாக அமிலத்தை கொடுத்த தாய்
- மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அரியலூர் சிறுமி பரிதாப சாவு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட கோ.கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருடைய மனைவி தீபா (வயது32). இவர்களுக்கு ஆதனா, அகல்யா (8) ஆகிய 2 மகள்கள். ஆதிஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளது.இதில் சிறுமி அகல்யாவுக்கு கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக புதுச்சேரி, சென்ைன, தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 30-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அகல்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது தாகம் என கூறியதால் சிறுமியின் தாயார் தீபா, படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் இருந்து ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.சிறுமி அதனை குடித்தபோது அருகில் இருந்த செவிலியர் அது தண்ணீர் அல்ல, நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் (ஒரு வகை அமிலம்) என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை வார்டுக்கு சிறுமி அகல்யாவை மாற்றம் செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து ஆஸ்பத்திரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "டயாலிசிஸ் அறையில் செவிலியர்கள் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்ததன் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் எங்கள் மகளை இழந்துவிட்டோம்" என்றனர். சம்பவம் பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "டயாலிசிஸ் அறையில் செவிலியர்கள் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்ததன் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் எங்கள் மகளை இழந்துவிட்டோம்" என்றனர். சம்பவம் பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.சிறுமியின் உயிரிழப்பு குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:- சிறுமிக்கு நிரந்தர சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருந்தது. இதனால், பல இடங்களில் சிகிச்சை பெற்றிருக்கிறார். மதுரையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும், வாரம் இருமுறை ஹீமோ டயாலிசிஸ் செய்யப்பட்டது. முதற்கட்டமாக சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில், மூளையில் ரத்தக்கசிவு காரணமாகவும் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. இருப்பினும் அனைத்து உறுப்புகளும் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன. அதன் அறிக்கை வந்த பின்னர் முழுமையாக தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கிருத்திகையையொட்டி வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தார். வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வள்ளி, தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது. இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தர நாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலிலும், கோடாலி கருப்பூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் உள்பட தா.பழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
- மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இளமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் வைரம் (வயது 67), கூலி தொழிலாளி. அதே பகுதியில் வசிக்கும் அப்பாதுரை மகன் ராமநாதன் (64). இவர் தனக்கு தரவேண்டிய பணத்தை மூதாட்டி வைரத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமநாதன் மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டி வைரம் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் ராமநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளிக்கல்வி-வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார்
அரியலூர் மாவட்டத்தில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சேருவதற்கான சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி கூறியதாவது:- கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான சாதிச்சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய் சான்று மற்றும் தேவையான இதர சான்றுகள் பெரும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட 6 ஒன்றியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நல்லதொரு அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான சான்றுகளை பெற்று பயனடைய வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அதன்படி சிறப்பு முகாம்கள் ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர் ஒன்றியத்தில் அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, செந்துறை ஒன்றியத்தில் செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தா.பழூர் ஒன்றியத்தில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதனை பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், முகாமிற்கு வரும் மாணவர்கள் தங்களுடைய தேவையான ஆவணங்களை (ஆதார்கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள்) உடன் எடுத்து வர வேண்டும். இம்முகாம் சிறப்பாக நடைபெறும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தி விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்தார்
- இந்திய வீராங்கனை சர்வாணிகாவை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிகா (வயது 8) என்ற மாணவி ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற மாபெரும் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்று உலகளவில் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சாதனை படைத்த இந்திய வீராங்கனை சர்வாணிகா தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்திய வீராங்கனை சர்வாணிகாவை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் பகுதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி, மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து கோவிவில் பிரகார உலா நடைபெற்றது. மேலும் சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர், திருத்துளார் அருளுடைய நாதர், வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர் உள்ளிட்ட சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- மேலும் போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 13 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீரசோழபுரம் அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அறிவழகன் (வயது 59) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 13 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.






