என் மலர்tooltip icon

    அரியலூர்

    • கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா நடைபெற உள்ளது
    • கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள ஆடித்திருவாதிரை விழாக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.கூட்டத்துக்கு கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து பேசுகையில், மாமன்னர் ராசேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 12-ம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் பெருவடையார் கோவிலில் கொண்டாடப்படவுள்ளது. விழாவின் போது, பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் . மேலும் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் விரிவான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினர்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அரியலூர் மக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • 381 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 381 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் 106 கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது
    • சோதனையில் புகையிலை போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 106 கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.வி.கைகாட்டி பகுதி மற்றும் அரியலூர் தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் புகையிலை போன்ற போதை வஸ்துகள் விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் 9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • இலையூர் கிராமத்தில் மது குடிப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் பணத்தை பறித்து சென்றார்
    • குடிப்பதற்காக பணம் பறித்து சென்ற வாலிபர் கைது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம் சாலையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவர் அவரது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது வாகனத்தில் வந்த ஒரு வாலிபர், மது குடிப்பதற்கு பணம் கேட்டு கத்தியை காட்டி சூரியபிரகாஷை மிரட்டியுள்ளார். மேலும் பணம் தர மறுத்த சூரியபிரகாஷை தாக்கி, அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து சென்றார். இதனால் சூரியபிரகாஷ் சத்தம் போட்டார். அதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த பஜருல்லா மகன் முகமது யாசிக் (20) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் மீது கார் மோதிய விபத்தில் மாடு வியாபாரி பலியாகினார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் அருகே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ராமச்சந்திரன் (வயது 55) என்பவர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோதிய வேகத்தில் காரும் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்தவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அரியலூரில் இரண்டாவது நாளாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது
    • ஏராளாமான இளைஞர்கள் பங்கேற்பு

    அரியலூர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 726 பேர் பங்கேற்றனர். 2-வது நாளான நேற்று 890 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 785 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 1,600 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டவைகளில் உடற்தகுதி தேர்வு நடந்தது. ஓட்டத்தில் 270 பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 5-ந்தேதியுடன் இந்த பணிகள் நிறைவடைகிறது.

    • அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் சான்றிதழ்களை வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிப்புரிந்த காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் இணையக் குற்ற வழக்குகளை விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்த இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான காவல்துறையினருக்கும், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமாருக்கும், திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்த ஜெயங்கொண்டம் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேலுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், வெகுமதியையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி , துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் கணேஷ், ரவிச்சந்திரன், வெங்கடேசன் , சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் உரிய காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
    • தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

    கூட்டுறவுத்துறை நிர்வாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடைகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் வழங்கப்படுவதில்லை.ஒரு மூட்டை 50 கிலோ என்றால் சாக்கினுடைய எடையும் சேர்த்து 60 கிலோ இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மூட்டைகளில் குறைவான அளவே தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதை நிறை செய்வதற்கு பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்து வருகின்றார்கள். நியாய விலைக் கடைகளுக்கு காலம் தாழ்த்தி பொருள்களை அனுப்புவதினால், பொதுமக்களுக்கு சிக்கல்களும் சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன.பொது விநியோகத் திட்டத்தினை ஆய்வு செய்வதற்கு ஆட்சியர்கள், அமைச்சர்கள், கூட்டுறவுத் துறை செயலாளர்கள், மாவட்ட இணைப் பதிவாளர்கள் என 21 அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும், ஆய்வுகள் அதிகரித்து இருப்பதை தவிர சரியான எடையில் பொருள்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை.

    எனவே தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நியாய கடைகளுக்கு உரிய காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல எடை குறைவாக வழங்காமல் இருப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.எடை குறைவாக பொருளேகளை வழங்கிவிட்டு அதற்குப் பிறகு ஆய்வு செய்து, இருப்பு குறைவு என்று பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடிய நிலை நாடு முழுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விசயத்திலும் தமிழக முதல்வர் தலையீட்டு தீர்வு காணவேண்டும் என்றார்.

    • ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78 கோடியில் 10 புதிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, அமைச்சர்  அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், கோட்டப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள் திருச்சி) வடிவேல், நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் உத்தண்டி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை நபார்டு உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் சரவணன், உதவி பொறியாளர் ராஜா, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர்கள் விக்னேஷ், திரு.முரளிதரன், ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலூர் துணை சுகாதார நிலையத்துக்கு பகுதி நேர மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கோவிலூர் துணை சுகாதார நிலையத்துக்கு பகுதி நேர மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கோவிலூர், திரௌபதியம்மன் கோயில் அருகிலுள்ள நீர்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக இருப்பதினால், வேறு இடத்தில் போர்வெல் போட்டு நல்ல குடிநீர் வழங்க வேண்டும்.தஞ்சாவூர் -ஆண்டிபட்டாக்காடு கிராமம் வரை கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். மோசமான நிலையில் உள்ள கோவிலூர் - ஆண்டிபட்டாக்காடு சாலையை சீரமைத்து தரவேண்டும். கோவிலூர் துணை சுகாதார நிலையத்துக்கு பகுதி நேர மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனகூட்டத்துக்கு அக்கட்சி நிர்வாகி நல்லதம்பி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கருணாநிதி, கருப்பையன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் வேல்முருகன் தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய துணைச் செயலர் கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் கட்சியின் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினார். ஒன்றியச் செயலர் கனகராஜ் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். முடிவில் கட்டுமான சங்க மாவட்ட செயலர் ஜீவா நன்றி கூறினார்.

    • நியாயவிலைக் கடைகளில் அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • சுத்தம், சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தல்

    அரியலூர்,

    உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக் கடைகளை கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. இந்த திடீர் ஆய்வில் உடையார்பாளையம் வட்டம், த.பொட்டகொல்லை கூட்டுறவு நியாய விலைக்கடை, தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நியாய விலைக்கடை ஆகிய நியாய விலைக் கடைகளை பார்வையிட்டு பொருள் இருப்புப் பதிவேடு, பொருள் விநியோகப் பதிவேடு, மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, வரவு, இருப்பு, விற்பனை குறித்த விவரங்கள், விற்பனைப் புத்தகம், நியாய விலைக்கடை திறக்கும் நேரம், உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நியாய விலைக்கடை பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து சரியான நேரத்திற்கு விநியோகிக்கவும், பொருட்கள் இருப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை நேரில் பார்வையிட்டு சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், த.மேலூர் அங்கன்வாடி மையத்தினைப் பார்வையிட்டு பதிவேடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் அங்கன்வாடி மையத்தினைத் தொடர்ந்து தூய்மையாக பராமரிப்பதுடன், குழந்தைகளுக்கு உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து தயாரித்து வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் தி துரை, வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டு உள்ளது
    • நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல்

    பெரம்பலூர்,

    அரியலூர் மாவட்ட மின் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் நிர்வாக காரணங்களுக்காக பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் பிரிவு அலுவலகம் மற்றும் மருதையான் கோவில் பிரிவு அலுவலகம் ஆகியவற்றுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.இதன்படி மருதையான் கோவில் பிரிவு அலுவல கத்துக்கு நகரம், மங்கலம், குறிஞ்சிப்பாடி, ஆதனூர், கரம்பியம், மதுராகுடிக்காடு, பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி ஆகிய கிராமங்களும், கொளக்கா நத்தம் பிரிவு அலுவல கத்துக்கு கீழ் நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர், ஜமீன் பேரையூர், பி.கூத்தூர், பிலிமிசை, கொட்டரை, ராமலிங்கபுரம், ரகலாபாத், ஜமீன் ஆத்தூர், பாலம்பாடி ஆகிய கிராமங்களும் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன.அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றம்எனவே மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தேவைகளுக்கு கொளக்காநத்தம் பிரிவு உதவி மின் பொறியாளர் 9445853665, சிறுவாச்சூ உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் - 9445853645 மற்றும் மருதையான் கோவில் பிரிவு உதவி மின் பொறியாளர் - 9445853686, குன்னம் உபகோட்டம் செயற்ெபாறி யாளர் - 9445853648 ஆகியோைர தொடர்பு கொள்ளலாம் என மின்வாரி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×