என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாருக்கு பாராட்டு
- அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது
- மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் சான்றிதழ்களை வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிப்புரிந்த காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் இணையக் குற்ற வழக்குகளை விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்த இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான காவல்துறையினருக்கும், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமாருக்கும், திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்த ஜெயங்கொண்டம் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேலுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், வெகுமதியையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி , துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் கணேஷ், ரவிச்சந்திரன், வெங்கடேசன் , சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






