என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஒன்றிய பா.ம.க. அலுவலகம் திறக்கப்பட்டது.
    • ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் அருகே வி.கைகாட்டியில் பா.ம.க. ஒன்றிய அலுவலகம் திறப்பு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செம்மலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர் சக்திவேல், சங்கர்குரு, ரமேஷ் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்டச் செயலாளரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவருமான காடுவெட்டி ரவி கலந்து கொண்டு, தெற்கு ஒன்றிய பா.ம.க. அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ஒன்றிய செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கிளை நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தொடர்பு கொண்டால் தான் கிளை நிர்வாகிகள் உற்சாகமாக பாடுபடுவார்கள். பொறுப்பாளர்கள் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். தமிழகத்தில் பா.ம.க. ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் முதல்வராக அமர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என பேசினார்.

    • பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணையை கலெக்டர் வெளியிட்டார்
    • தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள், உணவு பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேநீர் கோப்கைள் மற்றும் பிளாஸ்டிக் டம்பளர், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக்குகள் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதார கேடு விளைவிக்க காரணமாக இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்று பொருட்களை பயன்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களான சணல்பை, துணிப்பை, காகித பைகள், பாக்கு மட்டைத்தட்டுகள், தென்னை, மரத்தலான கோப்பைகள், மரக்கரண்டிகள், பனை ஓலைகளால் ஆன பூஜை தட்டுகள் மற்றும் மண்பாண்டங்களால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் குடுவைகள், அகல்விளக்குகள், மண் சாடிகள், மண்சட்டி ஆகிய பிளாஜ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.

    • லாட்டரி சீட்டு விற்றவரை கைது செய்தனர்.
    • லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு ரோட்டுத் தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த ஒருவரை ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு ரோட்டு தெருவை சேர்ந்த விஜகுமார் என்பதும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


    • புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
    • வனத்துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரியலூா் :

    அரியலூா் பல்துறை வளாகத்தில், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வனத்துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதியதாக பணியில் சோ்ந்த 86 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தமிழக அரசின் உத்தரவின் படி, பல்வேறு துறைகளின் சாா்பில், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், அரியலூா் வனக்கோட்டம், வனச்சரகம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகா் முத்துமணி வனக்காப்பாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது துறைகளின் செயல்பாடுகள் மற்றும் சட்டத் திட்டங்கள், இயற்கை வனங்களை பாதுகாப்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சியளித்தனா்.

    • வாக்காளர்களை சந்தித்து குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.
    • பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

    அரியலூா் :

    அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட வாக்காளா்களை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் குறைகளைக் கேட்டறிந்தாா். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். எஸ் சிவசங்கா், போக்குவரத்துத் துறை அமைச்சா் பொறுப்பேற்றாா். இந்நிலையில், செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட நாகல்குழி, கீழமாளிகை, பரணம், இரும்புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் வாக்காளா்களைச் சந்தித்து நன்றி கூறினாா். தொடா்ந்து, பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

    • விபத்தை தடுக்க வேகத்தடைகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தின் வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக இந்த பகுதியில் உள்ள பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிதம்பரம்-திருச்சி 2 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் மண் ஏற்றப்பட்ட லாரி சென்றது. அதேநேரத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் ஒரு ேமாட்டார் சைக்கிளில், ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் வீரராகவன், ராகுல் காந்தி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் 2 புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து முத்துசேர்வாமடம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    • 252 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 6 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 252 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    • கடை வீதிக்கு ெசன்ற பெண் மாயமானார்.
    • அடிக்கடி குடும்பத்தகராறு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 30). இவரது மனைவி இளமதி(21). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி காலை இளமதி கோவிந்தபுத்தூர் கடைவீதிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால் இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து இளமதியை தேடி வருகிறார்."

    • மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் தனது உதவியாளருடன் தென்கச்சி பெருமாள் நத்தம் கொள்ளிடக்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி வழியாக மொபட்டில் 3 மூட்டைகளில் மணல் ஏற்றி வந்தவரை தடுத்து நிறுத்தினார். ஆனால் மொபட்டில் வந்தவர் மொபட்டையும், மணல் மூட்டைகளையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மணல் மூட்டைகளையும், மொபட்டையும் கைப்பற்றிய கிராம நிர்வாக அலுவலர், இது பற்றி விசாரித்தபோது மணல் கடத்தி வந்தவர் அண்ணங்காரன்பேட்டை பகுதியை சேர்ந்த குணாளன் (வயது 64) என்பது தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் போலீசில் அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 9-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. தா.பழூர் ஒன்றியத்தில் தென்கச்சிபெருமாள்நத்தம் ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் சாத்தம்பாடி ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள் ஆகியோருக்கு வாக்குச்சாவடியை தயார் செய்தல், வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஆவணங்கள் பராமரிப்பு, வாக்குப்பெட்டி பாதுகாப்பு, வாக்குச்சாவடி முகவர்களுக்கான உரிமைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் அளித்தார். தேர்தல் உதவியாளர் அபிமன்யு பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் ஒதுக்கீடு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் அலுவலகம் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையம் உள்ளது. தனியார் கணினி மையம் மூலமும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055879, 9499055880 என்ற தொலைபேசி எண்கள் மூலமும், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055877, 04329-228408 என்ற தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் புத்தகங்களை வாங்க போதிய ஆட்கள் வரவில்விலை
    • கண்காட்சி குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படவில்லை

    அரியலூர்:

    தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் 6-வது புத்தகக் கண்காட்சி அரியலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஜூன் 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இந்த கண்காட்சியில், நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சுமார் 83 அரங்குகளை அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். நாள் தோறும் இரவு எழுத்தாளர்களின் எழுச்சியுரை, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர். இந்த புத்தக் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு, நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில், இந்திய அணியில் இடம் பெற்ற அரியலூரைச் சேர்ந்த சந்தோஷ்க்கு புத்தகங்களை பரிசாக அளித்தனர்.

    இறுதி நாளில் புத்தக விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக இருந்ததது. ஒரு புத்தகம் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் கூட புத்தகங்களை வாங்க ஆளில்லை.

    அரங்கிற்கான நாள் வாடகை, தங்கும் ஊழியர்களுக்கான செலவுக்கு கூட புத்தகங்கள் விற்பனையாகவில்லை. இந்த கண்காட்சி குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படவில்லை. மேலும், அரங்கு வைத்திருப்பவர்களுக்கு போதிய வசதிகளும் செய்து தரப்படவில்லை. உணவுகள் கூட சரிவர வருவதில்லை. இந்தாண்டு நஷ்டத்துடன் செல்கிறோம் என்றனர்.

    ×