என் மலர்
அரியலூர்
- வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- சினிமா பார்த்து வீட்டிற்கு வரும்போது விபரீதம்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து சிலால் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் எழிலரசன். இவர் தனது நண்பர்கள் பரத், ரிஷிபாலன், சுதாகர் ஆகியோருடன் ஜெயங்கொண்டம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் ரோட்டில் சிலால் வால் பட்டறை அருகே அவர்கள் வந்த வாகனத்தை மாற்றிக் கொண்டு அவரவர் வீட்டிற்கு புறப்பட தயாரான நிலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் எழிலரசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் எழிலரசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். மேலும் இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெருவை சேர்ந்த ராஜாராமன் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
அரியலூர்:
அரியலூரிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சார்பில் நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு தலைமை வகித்தார். குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் மயிலாடுதுறை சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்து பேசினார்.
தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர்அகோர மூர்த்தி, அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எந்தவித முறைகேடுகளும் நடைபெறா வண்ணம் விவசாயிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை கவனமுடன் சரிபார்த்து, நெல்லின் தரம், ஈரப்பதம் முதலிவற்றை தரவாக ஆய்வு செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அறிவிப்பு பலகை மற்றும் புகார் பெட்டியையும் மக்கள் பார்வையில்படும் படி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் நெல்கொள்முதல் நிலைய மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வீடு இல்லாத மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அரியலூர், திருமானூர், செந்துறை ஒன்றியங்களில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு குடிமனைப்பட்டாவும், இலவச வீட்டு மனையும் வழங்கிட வேண்டும். அரசு தரிசு புறம்போக்கு மடம், கோயிலுக்கு சொந்தமான இடங்களை வகை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் வீடுகளை இடித்து தள்ளிய தமிழக அரசு, தரிசு புறம்போக்கு இடங்களை கண்டறிந்து ஏழை, ஏளிய மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் பட்டா வழங்கி, வீடு கட்டி கொடுக்க வேண்டும். இலவச வீட்டு மனை வேண்டி கடந்த 1995-2002 வரை மனு அளித்த மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றிய செயலர் அருணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், கந்தசாமி, திருமானூர் ஒன்றிய செயலர் புனிதன், செந்துறை வட்டச் செயலர் அர்ச்சுணன், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
- ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த 3 பேர் மீட்கப்பட்டனர்.
- ஆடு மேய்க்க சென்றுவர்கள்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அருகே உள்ள அணைக்குடி கிராமத்தையொட்டி கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்நிலையில் அணைக்குடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(வயது 41), ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஆறுமுகம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளி ராமநாதபுரம் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குண்டப்பன் மகன் ராசுகண்ணன்(47) ஆகிய 3 பேரும், கடந்த சனிக்கிழமை மாலை தஞ்சை மாவட்டம் கொள்ளுமாங்குடியில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று அவர்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்த்துள்ளனர். மேலும் அணைக்குடி கிராமத்திற்கு அவர்கள் ஆடுகளை ஓட்டி வந்தனர். அப்போது இரவு நேரமானதால் ஆடுகள் திசை மாறிவிடும் என்பதாலும், உடல் சோர்வின் காரணமாகவும் ஆடு மற்றும் குட்டிகள் என 490 ஆடுகளை கொள்ளிடம் ஆற்றின் திட்டில் பட்டி அடைத்து கட்டியுள்ளனர்.இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள அதிக அளவு உபரி நீரால் திட்டை சுற்றி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திட்டில் இருந்து ஆடுகளை ஓட்டி வர முடியாமல் திட்டிலியே தங்கிவிட்டனர். நேற்று முன்தினம் அண்ணாமலை அருகில் உள்ள தனது அணைக்குடி கிராமத்திற்கு வந்து சமைப்பதற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி 1.25 ஆயிரம் கன அடி நீர் சென்றதாலும், அவர்கள் தங்கியிருக்கும் நடுத்திட்டு பகுதியில் தண்ணீர் அதிகமாக செல்வதாலும் அச்சமடைந்த அவர்களது உறவினர்கள், 3 ேபரையும் மீட்க வேண்டும் என்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 8 பேர் கொண்ட குழு கொள்ளிடம் இளந்தங்காடு நடுத்திட்டு பகுதிக்கு சென்று சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, 3 பேரையும் பத்திரமாக படகு மூலம் மீட்டு அணைக்குடி பொன்னாற்று வாய்க்கால் வழியாக முனீஸ்வரன் கோவில் அருகே கரைக்கு கொண்டு வந்தனர். அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
- ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 71). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ரவி(44) உள்பட 5 மகன்கள் உள்ளனர். தந்தை- மகன்களுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி அவரது முந்திரி தோட்டத்தில் டிராக்டரை எடுத்து கொண்டு உழவுப்பணி செய்ய சென்றுள்ளார். அப்போது தந்தை, மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ரவி முந்திரிக்கட்டையால் தாக்கியதில் ராஜகோபால் காயமடைந்தார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்."
- சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
இதில் ஆண்டிமடம் அருகே உள்ள மேலக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், சுடுகாட்டிற்கு செல்லும் புதுப்பாதையினை, சிலர் பட்டா அவர்களின் பெயரில் இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர். அரியலூர் குருவிக்காரன் காலனியை சேர்ந்த ராமராஜன் அளித்த மனுவில், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி போக்குவரத்து துறை அமைச்சரால் 34 நபர்களுக்கு கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்த லிங்கத்தடிமேடு அருகே பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்களது நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவில்லை. உடனடியாக ஒதுக்கீடு செய்தால் நாங்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
அரியலூர்
பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி(வயது 36). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சில் அவர் பணியில் இருந்தார். அரியலூரில் இருந்து அந்த பஸ் புறப்பட்டபோது 7 பேர் ஏறி, அந்த பஸ்சில் ஏறி கீழப்பழுவூருக்கு டிக்கெட் பெற்றனர். பின்னர் கீழப்பழுவூர் பஸ் நிலையம் வந்தவுடன் அவர்களை பஸ்சில் இருந்து இறங்குமாறு கண்டக்டர் பாரதி கூறியுள்ளார். அதில் 3 பேர் மட்டும் கீழே இறங்கியநிலையில், மற்ற 4 பேரும் இறங்க மறுத்து பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது சட்டையை பிடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இது குறித்து அவர் கீழப்பழுவூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நெய்வேலியை சேர்ந்த மணியின் மகன் அசோக்(30), சக்கரவர்த்தியின் மகன் பழனி(41), ராஜேந்திரனின் மகன் சதீஷ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்து, அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
- மது பாட்டில்களில் போதை மாத்திரைகளை கலந்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தூத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை தலைமையிலான போலீசார் குருவாடி, மாத்தூர், காமரசவள்ளி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோமான் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சட்டநாதன்(வயது 42) என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை விற்றதை அறிந்து, அவரை கைது செய்து, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது ஒரு மது பாட்டில் மட்டும் மூடி திறந்து மதுவின் அளவு குறைவாக இருந்துள்ளது. அதனை பரிசோதித்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிக லாபம் பெற டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வந்து பாதி மதுவிற்கு பதிலாக தண்ணீரில் போதை மாத்திரைகளை கலந்து, அதனை சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
- 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
- 2021-22-ம் கல்வி ஆண்டில் படித்தவர்கள்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டில் 10-வகுப்பு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு கடந்த மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் மாதம் 24-ந் தேதி வழங்கப்பட்டு மேல் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டு பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் தேர்வு துறையினரால் பள்ளிகளுக்கு கடந்த 13-ந் தேதி வழங்கப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று வழங்கப்பட்டது.
"
- மாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 54). இவர் 8 கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டின் வெளியே கட்டி இருந்த 2 மாடுகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசில் நித்தியானந்தம் புகார் அளித்தார். இந்தநிலையில் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் ரோட்டில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வண்டியில் 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் சென்றனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் சூரக்குடி கிராமத்தில் 2 மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, கடலூர் மாவட்டம் கிளிமங்கலத்தை சேர்ந்த ஆனந்த் (25), பாலச்சந்திரன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."
- மதுவிற்ற பெண் தப்பி ஓடினார்
- போலீசார் தேடி வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்த பெண்ணை போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அங்கு கிடந்த 10 மதுபாட்டில்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பிய ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.






