என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
- நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
அரியலூர்:
அரியலூரிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சார்பில் நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு தலைமை வகித்தார். குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் மயிலாடுதுறை சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்து பேசினார்.
தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர்அகோர மூர்த்தி, அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எந்தவித முறைகேடுகளும் நடைபெறா வண்ணம் விவசாயிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை கவனமுடன் சரிபார்த்து, நெல்லின் தரம், ஈரப்பதம் முதலிவற்றை தரவாக ஆய்வு செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அறிவிப்பு பலகை மற்றும் புகார் பெட்டியையும் மக்கள் பார்வையில்படும் படி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் நெல்கொள்முதல் நிலைய மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






