என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க ேவண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- கூட்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ் பண்பாட்டுப்பேரமைப்பு கூட்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நல்லப்பன் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள், கடந்தாண்டு புத்தகத் திருவிழா வரவு செலவு குறித்து பேசினார்.இந்த கூட்டத்தில், வரும் ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் அரியலூரில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில், அரியலூரில் 6 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடத்தி வரும் தமிழப் பண்பாட்டுப் பேரமைப்பையும், பப்பாசி யையும் இணைத்துக் கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்துவது, புத்தகத் திருவிழாவில் அமைச்சர் உதயநிதியை அழைப்பது, பேரமைப்பு சார்பில் இனி வரும் காலங்களில் கருத் தரங்கு, கலைநிகழ்ச்சி, போட்டிகள் உள்ளிட்டவைகள் நடத்துவது,அரியலூர் அல்லது ஜெயங்கொண்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் புலவர் இளங்கோவன், பொருளாளர் புகழேந்தி, செய்தித் தொடர்பாளர் தமிழ் களம் இளவரசன், நிர்வாகிகள் சிவக்கொழுந்து, செந் துறை அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ரூ. 3 லட்சம் மதிப்பிலான பைக்குகள் பறிமுதல்
- இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மகிமைபுரம் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் விசாரணையில் அவர் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 26) என்பதும், அவர் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவரது நண்பரான மதனத்தூர் காலனி தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரிய வந்தது.இதனையடுத்து ராஜ்குமார், தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 5 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
- எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
- இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாவட்ட துணைச் செயலாளருமான ராமஜெயலிங்கம் தலைமையில் திருச்சி சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக அண்ணா சிலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தி.க.கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய தலைவர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் தமிழ் சேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் சின்னராஜா, சுந்தர் மற்றும் இளையபாரதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
- தே.மு.தி.க. அலுவலகத்தில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அரியலூர்
திராவிட கழக தலைவர் பெரியார், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆர், ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாநில பொறுப்பாளர் தனக்கோடி மருதவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன், நகரச் செயலாளர் கூத்தாண்டம் கார்த்திக் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அமைப்புச் செயலாளர் கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராமஜெயவேல் தலைமையில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
- நோயாளிகளுக்கு உயர்தரமான சிறப்பான சிகிச்சையினை தொடர்ந்து வழங்க சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை–களின் சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண–சரஸ்வதி முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலை–மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஜெயங் கொண்டம், மேலக்குடி–யிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜெயங் கொண்டம் தெற்கு மற்றும் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து, சரியான நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி குழந்தைக–ளுக்கு தொடர்ந்து சரியான நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஜெயங் கொண்டம் ஆதிதிரா–விடர் நல மாணவி–யர் விடுதியினை பார்வையிட்டு, விடுதியின் அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். மேலும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு, மருத்துவ–மனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். சிகிச்சை பெற வருகை தந்த நோயாளிகளிடமும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு உயர்தரமான சிறப்பான சிகிச்சையினை தொடர்ந்து வழங்கவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவு–றுத்தினார். மேலும், ஆண்டி–மடம் ஊராட்சி ஒன்றியம், விளந்தை அரசினர் பெண் கள் உயர்நிலைப் பள்ளி–யில் ரூ.6.77 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணி–களை பார்வையிட்டு, கட்டுமான பொருட்களின் தரம், பணிகள் ஆரம்பித்த நாள், பணி முடிவடையும் நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்ட–றிந்து ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை தரமான முறையில் விரை–வாக கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆண்டிம–டம் வட்டாட்சியர் அலுவல–கத்தினை பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமக்கக்கப்பட்டு வரும் பதிவே–டுகள் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் களை தொடர்ந்து விரை–வாக வழங்கவும் அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவல–கத்தினை பார்வையிட்டு, பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பிற பணிகள் குறித்து கேட்ட–றிந்து ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கான அத்தி–யாவசிய பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும் அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தி–னார். மேலும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தா–மணி ஊராட்சி மன்ற அலுவ–லகத்தினை பார்வையிட்டு, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, கீழ சிந்தாமணி நடுத்தெருவில் ரூ.9.29 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கால் வாய் அமைத்தல் பணியை–யும், மேல சிந்தாமணி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பயனா–ளிகளையும் பார்வை–யிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசின் திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சம்மந்தப்பட்ட அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தினார்.
- கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
- அவர்களிடமிருந்த 1கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று சந்தேகம் ஏற்படுவது போல் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். விசாரணை செய்ததில் கல்லாத்தூர் கிராமம் இந்திரா நகரை சேர்ந்த மேகநாதன் மகன் அகிலன் (வயது21) என்பது தெரியவந்தது. இவருடைய நண்பர் ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் கார்த்திக் (23) ஆகிய இருவரும் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 1கிலோ 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- பயிற்சி அளிக்க தடகள வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும்
அரியலூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதி உதவியில் தொடக்க நிலை தடகளம் பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. விளையாடு இந்திய மாவட்ட மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதிற்கு உட்பட்ட தடகளம் வீரர், வீராங்கனைகளில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், தற்போது அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தடகளம் விளையாட்டில் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயற்சி கட்டணம் மட்டுமே வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தர பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் www.sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் வருகிற 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கார் மோதி முதியவர் பலியானார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கோமான் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன்(வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் சுருதிமன்னன் (50). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சிதம்பரம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பையன் உயிரிழந்தார். சுருதிமன்னன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கரூர் மாவட்டம் வச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆசைத் தம்பி மகன் கிருபா(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Ariyalur News : Attempt to kill the driver
அரியலூர் :தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம் மகன் ஆனந்த்(வயது 38). இவர் சொந்தமாக கழிவு நீர் ஊர்தி வைத்து வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை அகற்றும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் அம்மாசத்தித்திலிருந்து தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் சென்று கொண்டிருந்தபோது அத்தனேரி பஸ் நிறுத்தம் அருகில் சிலர் கழிவுநீர் அகற்றும் வாகனத்தை தடுத்து லிப்ட் கேட்டுள்ளனர். காலை நேரத்தில் யாரோ லிப்ட் கேட்கிறார்களே என்று ஆனந்த் வாகனத்தை மெதுவாக இயக்கியுள்ளார். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பெரிய வாளை எடுத்து ஓங்கி டிரைவர் ஆனந்த் தலையில் வெட்ட வந்துள்ளனர். அதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஆனந்த் லாவகமாக தலையை நகர்த்திக் கொண்டார். இதில் அவரது விலா பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அவருக்கு விலா பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு அதற்கு ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் ஆனந்த் கொடுத்த புகாரில் அவரை வெட்ட வந்தது கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் சரவணா நகரை சேர்ந்த சந்திரன் மகன் அசோக் (30) என்று குறிப்பிட்டுள்ளார். அசோக் ஆனந்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அசோக் மற்றும் அவருடன் 3 பேர் சேர்ந்து ஆனந்த் கழிவுநீர் ஊர்தியை ஓட்டி வரும் பாதையில் காத்திருந்து அவரை கொலை செய்ய முயன்றதாக அவரது புகாரில் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கொலை செய்ய முயன்ற அசோக் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.
- நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- குறைதீர் கூட்டம்
அரியலூர்:அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள நத்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ச.கலைவாணி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள்:அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும்போது, அதிக விலைக்கு உரம் விற்கப்பட்டு வரும் தனியார் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியில் மாமூல் பெறும் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் பேசும் போது, தூத்தூர் - வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கை கதவணையுடன் கூடிய தடுப்பணை, பாலம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே பொய்யூர் பகுதியில் தடுப்பனைக் கட்டுவதை கால தாமதம் இல்லாமல் கட்டி முடிக்க வேண்டும்.ராயம்பரம், நக்கம்பாடி ஆகிய ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரியில் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே சுண்டக்குடிக்கு கிழக்கேவைப்பூருக்கு வரை அடந்துள்ள வேலிகருவ முள்செடிகளை அகற்றி மருதையாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானியத்தில முந்திரி கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்துறை தாலுக்கா விவசாயிகளுக்கு உளுந்துக்கான காப்பீடு தொகை மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையினை பெற்று தரவேண்டும் என்றார்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி,அவைகைளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது
- அரசு பள்ளி மாணவர்கள் திறன் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்
அரியலூர்:அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் தனியார் மண்டபத்தில் பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.இந்நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்,அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இதுபோன்ற திறன் போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் தயக்க உணர்வை போக்க முடியும். மேலும், நேர்முக தேர்வுகளில் கலந்துகொள்ளும் பொழுது தன்னம்பிக்கையுடன் அதனை எதிர்கொள்ளலாம். எனவே, அனைத்து மாணவர்களும் இதுபோன்ற திறன் போட்டிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் பங்குபெற உள்ள மாணவ, மாணவியர்களின் போக்குவரத்து வசதிக்கு எனது சார்பில் தேவையான வசதி ஏற்படுத்தி தரப்படும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு எனது சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.முன்னதாக, அரியலூர் அண்ணாசிலை அருகில் அம்பாலயம் - அரியலூர் மாவட்ட அனைத்து மாற்றுத்தினாளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சர்வேதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா பேரணியை துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்படும் எனவும் மாற்றுத்திறனாளிகளிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- நியாயவிலை கடைகள் பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
- இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி சென்று, பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருள்களின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நகல் குடும்ப அட்டை, மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் ஆகியவற்றை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண் மாற்றம் செய்தல் மற்றும் குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள தங்களது பகுதிகளிலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல், குடும்ப தலைவர் புகைப்படம் மற்றும் குடியிருப்பிற்கான ஆவணங்களுடன் இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகள் பற்றி அறிய மற்றும் புகார்களுக்கு 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார். இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






