என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
- கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
- அவர்களிடமிருந்த 1கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று சந்தேகம் ஏற்படுவது போல் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். விசாரணை செய்ததில் கல்லாத்தூர் கிராமம் இந்திரா நகரை சேர்ந்த மேகநாதன் மகன் அகிலன் (வயது21) என்பது தெரியவந்தது. இவருடைய நண்பர் ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் கார்த்திக் (23) ஆகிய இருவரும் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 1கிலோ 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.






