search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைத்திருவிழா  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
    X

    கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

    • கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது
    • அரசு பள்ளி மாணவர்கள் திறன் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்

    அரியலூர்:அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் தனியார் மண்டபத்தில் பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.இந்நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்,அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இதுபோன்ற திறன் போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் தயக்க உணர்வை போக்க முடியும். மேலும், நேர்முக தேர்வுகளில் கலந்துகொள்ளும் பொழுது தன்னம்பிக்கையுடன் அதனை எதிர்கொள்ளலாம். எனவே, அனைத்து மாணவர்களும் இதுபோன்ற திறன் போட்டிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் பங்குபெற உள்ள மாணவ, மாணவியர்களின் போக்குவரத்து வசதிக்கு எனது சார்பில் தேவையான வசதி ஏற்படுத்தி தரப்படும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு எனது சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.முன்னதாக, அரியலூர் அண்ணாசிலை அருகில் அம்பாலயம் - அரியலூர் மாவட்ட அனைத்து மாற்றுத்தினாளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சர்வேதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா பேரணியை துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்படும் எனவும் மாற்றுத்திறனாளிகளிடம் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×