என் மலர்
அரியலூர்
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயரழுத்த மின் பாதையில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கள்ளூர், கீழக்குளத்தூர், திருமானூர், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூர், கீழக்கவட்டான்குறிச்சி, கரைவெட்டிபரதூர், அண்ணிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழபாடி, கண்டிராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கோவிலூர், சின்னபட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், வைப்பூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- சேவை குறைபாடு காரணமாக
- மனுதாருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அரியலூர்:
செந்துறை வட்டம், மருவத்தூர் அருகேயுள்ள விழுப்பணங்குறிச்சியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்திரகாசன் (வயது 53). இவரது தந்தை கடந்த 1971 ஆம் ஆண்டு கிரைய ஆவணம் மூலம் பெற்ற நிலத்துக்கு தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தருமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செந்துறை வட்டாட்சியர் அலுவலத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்திருந்தார்.ஆனால் விண்ணப்பித்தின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால், அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செந்துறை வட்டாட்சியர் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரகாசன் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த வந்த நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் பட்டா மாற்றம் கோரி சந்திரகாசன் அளித்த விண்ணப்பத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் செந்துறை வட்டாட்சியர் எடுக்கவில்லை என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 மாதங்களுக்கு மேலாக எவ்வித பதிலையும் வழங்காமல் இருந்தது சேவை குறைபாடு.புகார்தாரர் சமர்ப்பித்த மனு மீது நான்கு வார காலத்துகுள் நடவடிக்கை மேற்கொண்டு அதனை அவருக்கு தெரிவிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு புகார்தாரர் பட்டா மாற்றம் கேட்டு மனு செய்த நாள் முதல் இந்த வழக்கு தாக்கல் செய்த நாள் வரை பணியாற்றிய செந்துறை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர்கள் புகார்தாரருக்கு ரூ 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அழகான பெண் குழந்தை பிறந்தது.
- ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது 36). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அப்போது பிச்சனூர் கிராமம் அருகே 108 ஆம்புலன்சிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முத்துக்குமரன் பிரசவம் பார்த்தார். பின்னர் தாயும், சேயும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
- குளிா்ந்த காற்றும் வீசியது.
- மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது
அரியலூா்:
அரியலூா் மாவட்டம் முழுவதும் சாரல் மழைபெய்தது. காலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் குளிா்ந்த காற்றும் வீசியது.
தமிழகத்தில் இரு நாள்கள் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அரியலூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழுா், திருமானூா், செந்துறை, ஸ்ரீபுரந்தான், பொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பிற்பகல் முதலே ஜில்லென்று சாரல் மழை பெய்தது. மேலும் குளிா்ந்த காற்றும் அவ்வப்போது வீசியதால் இதமான சூழல் காணப்பட்டது.
- ேநரில் சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும்
- வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூா்:
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவிக்கையில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி., தோ்ச்சி பெற்றவா்கள், பெறாதவா்கள், மேல்நிலைப்பள்ளிப் படிப்புத் தோ்ச்சி, பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து தொடா்ந்து புதுப்பித்து வந்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எனில், ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவா்கள் 31.12.2022 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து வகுப்பினருக்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். உரிய சான்றுகளுடன் 28.02.2023-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதிய விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
அரியலூர்
கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில்தான் அதிக விபத்துகள் நடைபெற்றுள்ளன. மேலும் இந்த ஆண்டு பிறந்து 8 நாட்கள்தான் ஆகிறது. இதில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் தடம் மறைவதற்குள் கடந்த 5-ந் தேதி பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் நடந்த விபத்தில் மதுரை மாவட்டத்தை சோ்ந்த 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் 4 நாட்களில் நடந்த 3 விபத்துகளில் 6 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதற்கு தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டி செல்வதும், லாரிகளை சாலையோரத்தில் நிறுத்துவதும், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்காமல் செல்வதும்தான் முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் நெடுஞ்சாலையில் சில பகுதிகளில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. விபத்துகளை தடுக்க போதிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எடுக்காததும் ஒரு காரணம் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சின்னாறு பகுதியில் மட்டும் லாரிகளை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் அந்த இடம் போதுமானதாக இல்லை என்றும், இதனால் சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது என்றும் டிரைவர்கள் கூறுகின்றனர். பெரம்பலூர் அருகே வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து செல்வதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம், போலீசாருடன் இணைந்து செய்தனர். ஆனால் அந்த பணி தற்போது கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை தேர்வு செய்து ஒதுக்கினால் தூக்க கலக்கத்தில் வரும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்ல ஏதுவாக இருக்கும். இதனால் சாலை விபத்துகளை தடுக்கலாம் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
- மருத்துவ உதவியாளர், டிரைவர்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற உள்ளது
- ஜெயங்கொண்டத்தில் நாளை நடக்கிறது
அரியலூர்
108 ஆம்புலன்சில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர்களுக்கான முதற்கட்ட நேர்முக தேர்வு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் மருத்துவ உதவியாளருக்கான, நேர்முக தேர்வுக்கு வருபவர்களின் வயது 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதல் உதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
அதேபோல் டிரைவர் பணிக்கு கட்டாயம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நேர்முக தேர்வு அன்று 24 வயது முதல் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். டிரைவர் உரிமம் தொடர்பான தகுதிகள் இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறையானது முதல் கட்டமாக எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு நடைபெறும். நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்களது கல்வித்தகுதி, டிரைவர் உரிமம், முகவரி சான்று, அடையாள சான்று ஆகியவைகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வருமாறு மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.
- விபத்தில் குழந்தை உயிரிழந்தது.
- இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராசுவின் மகன் ஆதித்யா(வயது 17). இவர் அரியலூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது உறவினர் திருச்சி மாவட்டம் கல்லக்குடி மேலத்தெருவை சேர்ந்த இளவரசன் மகன் சந்தோஷ்(17). நேற்று ஒரு ஸ்கூட்டரில் ஆதித்யா, சந்தோஷ் ஆகியோர், ஆதித்யாவின் சித்தப்பா மகன் மித்ரனுடன்(3) ரெட்டிபாளையம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போட சென்றனர்.
குழந்தை சாவு மயிலாண்டகோட்டை கிராமத்தை கடந்தபோது ஸ்கூட்டரில் இருந்து மித்ரன் தவறி விழ முயன்றதாகவும், அவனை பிடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டருடன் 3 பேரும் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குழந்தை மித்ரன் பரிதாபமாக இறந்தது. மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- 100 நாள் வேலை குறித்து குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது
அரியலூர்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (100 நாள் வேலை) 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்தவதற்கும், அச்சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுவதில் ஏதேனும் குறைகள், புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் திருடுபோன 151 பவுன் நகை,20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன
- இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவரை துளையிட்டு நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த சங்கர்லால் என்பவரின் நகை அடகுகடையில், சுவரை துளையிட்டு மர்மநபர்கள் சிலர் 209 பவுன் நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் தேடப்பட்டனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தின்மலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(வயது35) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.
சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி பிரியா(26) மூலம், கர்நாடக மாநிலம் தும்கூர் கிராமத்தை சேர்ந்த தாசார் கட்டி(42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன.
அதே போல், செங்கல்பட்டு மாவட்டம் வைப்பன கிராமத்தை சேர்ந்த ராஜா(34), முருகன்(39) ஆகியோர் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அவர்களை அழைத்து வந்து விசாரித்ததில், ராஜாவி டமிருந்து 3 பவுன் நகைகள், திருட உபயோ கப்ப டுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் முருகனிடமிருந்து 42 பவுன் நகைகள் மீட்க ப்பட்டுள்ளன. இதையடுத்து ராஜா மற்றும் முருகன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த திருட்டு வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது
- அரியலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் 16 கொலை வழக்குகளில் 21 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்தார்
- 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றுள்ள 16 கொலை வழக்குகளில் தொடர்புடைய 21 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டள்ளனர் என மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 16 கொலை சம்பவங்களில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போக்ஸோ சட்டத்தில் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 186 பேரும், 10 பாலியல் வழக்குகளில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களி டமிருந்து ரூ.89 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சொத்து இழப்பு (பாரி) தொடர்பாக பதிவான 19 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.55 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடி க்கப்பட்டுள்ளன.அதேபோல், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பாலியல் குற்ற வாளிகள் 18 பேர், போதை பொருள் குற்றவாளிகள் 5 பேர், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்திய 10 பேர், சாராயம் காய்ச்சிய 5 பேர் என 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் மணல் கடத்தல் தொடர்பாக 127 வழக்குகள், லாட்டரி மோசடி தொடர்பாக 19 வழக்குகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 179 வழக்குகள், சூதாட்டம் விளையாடியதாக 25 வழக்குகள், கஞ்சா விற்பனை செய்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.67,66,010 மதிப்பில் குட்கா, ரூ.5, 25,898 மதிப்பில் கஞ்சா பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.
- ஜெயங்கொண்டத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
- கருத்தரங்கில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துதுறை, அரியலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் பிரியா, சமூகப்பணியாளர் வைஷ்ணவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் முத்துபிரபாகரன் ஆகியோர் புகையிலைப் பொருட்களை புகைக்க மாட்டேன், உட்கொள்ள மாட்டேன், குடும்பத்தினரிடம் நண்பர்களிடம் புகையிலை பற்றிய தீங்கை தெரிவிப்பேன், பயன்படுத்த வேண்டாம் என்று ஊக்குவிப்பேன் என்று ஒவ்வொரு தலைப்பிலும் விரிவுரையாக பேசி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக நர்சிங் கல்லூரி பேராசிரியர் ஆம்பிசா வரவேற்றார். இறுதியில் நர்சிங் டியூட்டர் மீனாட்சி நன்றி கூறினார்.






