என் மலர்
அரியலூர்
- 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- கோப்பைகள் வழங்கி பாராட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையாம்பாளையம் என்.ஆர். பப்ளிக் பள்ளியில் தண்டர் விளையாட்டு கழகம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி தலைமையேற்று நடத்தி வைத்தார். தண்டர் விளையாட்டு கழகம் நிறுவனர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராவணன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். போட்டியில் உடையார்பாளையம் என்.ஆர். பப்ளிக் ஸ்கூல் ஜெயங்கொண்டம் மாடர்ன் பி .எம். பப்ளிக் ஸ்கூல் அன்னை தெரசா பள்ளி ஜெயங்கொண்டம் உட்கோட்டை குறுக்கு ரோடு தா பலூர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனர் பொய்யாமொழி கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு கராத்தே மாஸ்டர் வினோத் பயிற்சி அளித்து போட்டி நடத்தினார்.
- 285 மனுக்கள் பெறப்பட்டன
- மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுலவர்முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வு
- பிரச்சினை ஏற்பட்டால் போலீசாரிடம் தெரிவிக்க அறிவுறுத்தல்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வெளி மாநிலத்திலிருந்து அடகு கடை ஜவுளி கடை இருசக்கர வாகன உதிரி பாகம் செல்போன் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் ஹோட்டலில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என உறுதி செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜ சோமசுந்தரம் தலைமையிலான உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஜெயங்கொண்ட பகுதியில் உள்ள அனைவரையும் தனியார் மண்டபத்தில் அலைத்து அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தனர் மேலும் ஏதேனும் பிரச்சினை இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் உங்களால் இந்த பிரச்சனையும் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சட்ட விதிகளை அறிவுறுத்தினர்.
- ஒரு வருடமாக நடைபெற்ற போட்டி நிறைவடைந்தது
- பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி மைதானத்தில்கீழக்குடியிருப்பு KKP-வாரியர்ஸ் அணியினர் நடத்திய தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து கிரிக்கெட் அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர். இத்தொடருக்கான முதல் பரிசு வென்ற திருமானூர்-FRESHஅணிக்கு, ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் பரிசினை பொன்பரப்பி-சத்ரியன்பிரதர்ஸ் அணி, 3-ம் பரிசினை சிலால்-DXஅணி, 4-ம் பரிசினை உடையார்பாளையம்-தமிழன்CC அணி பெற்றனர்.இவர்களுக்கு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் வைத்தி பரிசுகளை வழங்கினார். இத்தொடரானது கடந்த 2022- பொங்கல் அன்று துவங்கப்பட்டது.இந்தப் போட்டிக்கு பரிசுகள் வழங்கிய மாடர்ன் கல்வி குழுமம் எம் ஆர் சுரேஷ், கவுன்சிலர் ரங்கநாதன். எஸ் டி துரை மாதவன் தேவா பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும்கபடி குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம்
- அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது
அரியலூர்,
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினேயே அமல்படுத்த வேண்டும். ஊக்க ஊதியவுயர்வு வழங்கப்படுவதோடு காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினையும் உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அருேக ஜேக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வேல்முருகன்தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் மா.நம்பிராஜ், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச் சங்க மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.பஞ்சாபிகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கே.சேஷக்தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
- 2.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் ஊராட்சியில் காவல் நிலையம் அருகில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இவ்வலுவலகம் ரூ.2 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளம் 2453 சதுர அடியில் உதவி இயக்குநர் அறை, வரவேற்பு அறை, அலுவலக அறை, நகல் எடுக்கும் இயந்திர அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதல் தளம் 2453 சதுர அடியில் அலுவலக அறை, பதிவறை, சேமிப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக 365 சதுர அடியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடமும், 355 சதுர அடியில் இருச்சக்கர வாகனம் நிறுத்திமிடமும் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கு.சின்னப்பா, செயற்பொறியாளர்மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர்தேவேந்திரன், உதவி பொறியாளர்அட்ஷயா, திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர்சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 8ம் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்
- பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது
அரியலூர்,
பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு ஏற்படும் உடல் நோய்கள், மன நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வருகிற புதன்கிழமை வரும் 8ம் தேதி அன்று திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அனைத்து அரசு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, இயற்கை, யோகா மருத்துவ பிரிவு மருத்துவ முறைகளில் பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது!திருச்சி, கரூர், அரியலூர், ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரையிலும், பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஊரக சித்த மருத்துவமனைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் இச்சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும்.இம்முகாமில் தைராய்டு நோய், மாதாந்திர தீட்டு பிரச்சினை, சினைப்பை நீர்க்கட்டி, கருப்பை கட்டி, புற்றுநோய் கட்டி, குழந்தையின்மை, உடல் பருமன், மூட்டு வலி, இரத்த சோகை, சர்க்கரை நோய், இதய நோய், இரத்த கொதிப்பு நோய், ஆஸ்துமா, மார்பகக்கட்டி, மூலம், பெளத்திரம், முடி உதிர்தல், பொடுகு, வயிற்று புண்கள் போன்றவற்றிற்கு சிறப்பு ஆலோசனை மற்றும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும் என்று திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர்மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்சா.காமராஜ் தெரிவித்து உள்ளார்.
- வார சந்தை சாலையோரத்தில் நடைபெற்றதால் பாதிப்பு
- மாற்று இடம் வழங்காததால் குழப்பம்
அரியலூர்
அரியலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பஸ் நிலையம் இடிக்கப்படும் என்பதை அறிந்த பஸ் நிலையத்தில் கடை வைத்திருந்த கடைக்காரர்கள் சென்னை நீதிமன்றத்தில் வருகிற 15-ந் தேதி வரை இடிப்பதற்கு தடை ஆணை பெற்றனர். இந்த நிலையில் கடைக்காரர்களிடம் நகராட்சி சார்பில் மார்ச் மாதம் வாடகை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பஸ் நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வார சந்தையானது நேற்று முன்தினம் திடீரென நகராட்சியில் இருந்து இவ்வாரம் வார சந்தை செயல்படாது எனவும், இடிக்கப்படும் எனவும் அறிவித்தனர். உரிய காலத்தில் அறிவிப்பு வெளியிடப்படாததால் நேற்று பெரும்பாலான வியாபாரிகள் சந்தைக்கு கடை போட வந்திருந்தனர். கட்டிடம் இடிக்கப்படும் வார சந்தை செயல்படாது என தெரிந்ததை அடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் முறையிட்டனர். சந்தை இடிக்கப்பட்டது. ஆனால் மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை. சந்தைக்கான குத்தகை இம்மாத இறுதிவரை செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. சந்தைக்கும் இடம் எங்கே என தெரியவில்லை. தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான இடமும் எங்கே எனத் தெரியவில்லை என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வந்திருந்த வியாபாரிகள் சந்தைக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் போட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பெண்கள் அதிக அளவு கலந்து கொண்டு வடம் பிடித்தனர்
- இன்று தீர்த்த வாரி நடைபெறுகிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. உலக புராதன சின்னமாக விளங்கும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பிரம்மோத்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்காக விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி சாமிக்கு மகா அபிஷேக ஆராதனையும், யாகசாலை பூஜைகள், சாமி வீதிஉலா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து தேர் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சந்திரசேகர சுவாமி, சந்திரமவுலி தாயார், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். வீதி உலாவின்போது ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக அலுவலர் செந்தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்பட்டு ராஜவீதி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் இதன் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரியும், கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அரியலூரில் ரூ.7.80 கோடியில் மத்திய பேருந்து நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்குகிறது
- கடைகளை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக திகழும் அரியலூர் 2010 முதல் 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகின்றது. 18 வார்டுகளை கொண்ட நகராட்சியின் பரப்பளவு 7.62 சதுர கிலோ மீட்டர் ஆகும். 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இங்கு 1975-ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக் கப்பட்டது.சுமார் 25 பேருந்து வழித்தடங்களில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வரு–கின்றது. சுமார்30 கி.மீ. சுற்றளவு பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
48 ஆண்டுகால பழைய கட்டிடங்கள் என்பதால் மழைக்காலங்களில் பயணி கள் நனைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி வெயில் காலங்களில் ஒதுங்ககூட போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இங்கு சுமார் 60 கடைகள் ஏலம் விடப்பட்டாலும், 100 கடை–கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பய–ணிகள், பொதுமக்கள் நிற்கவோ, ஒதுங்கவோ மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே மத்திய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அரியலூ–ரில் மத்திய பேருந்து நிலை–யம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவ–டைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.இதற்கிடையே தற்போது பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் கடை–களை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட் டீஸ் வழங்கியுள்ளது. அது–வரையில் தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர்-திருச்சி பூறவழிச்சாலை தனியார் இடத்தில் செயல்படவுள்ளது. கட்டு–மான பணிகள் முடிந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும்.
அரியலூர் நகரில் நவீன வசதிகளுடன் மத்திய பேருந்து நிலையம் அமைக் கப்படுவதற்கு பொது–மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நக ராட்சி நிர்வாகம் சார்பில் கேட் டுக்கொள்ளப்பட்டு உள் ளது. அரியலூர் நகரில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு அரியலூர் நகரரை அழகுபடுத்தும் பணியிலும் நகராட்சி நிர் வாகம் ஈடுபட்டுள்ளது.மத்திய பேருந்து நிலை–யத்தின் கட்டுமான பணி–களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. வாரசந்தை பூதிய கட்டுமான பணிகளும் தொடங்கியுள்ளதால் அங்கு பழைய கட்டிடங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி துவங்கியது.
- ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
- வேலை செய்த வீட்டின் உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே–யுள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திக் (வயது 30). திருமணமாகாத இவர் கழுவந்தோண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் பெயிண் டிங் வேலை செய்து கொண் டிருந்தார். அப்போது வீட் டின் மேலே சென்ற மின் கம்பி உரசி–யதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதா–பமாக உயிரிழந்தார்.இது குறித்து ஜெயங் கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஜெயங்கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற் கிடையே உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட் டதாக கூறப்ப–டுகி–றது.இந்நிலையில் கார்த்திக் கின் உடலை உடற்கூராய்வு செய்து உடனடியாக உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் அவர் பணி செய்த வீட்டு உரிமையாளரிடம் நஷ்டஈடு பெற்று வழங்க வேண்டும். அந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம மக்கள், உறவினர்கள் ஜெயங் கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஜெயங் கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ–குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடு–பட்டவர்களிடம் பேச்சு–வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் உறவினர்கள் கலைந்து சென்ற–னர். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் கழு–வந்தோண்டி கரைமேடு பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ஆண்டிமடத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
- 114 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1,2,3ம் வகுப்பு கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி குறுவள மைய அளவில் ஆண்டிமடம் வட்டார வள மையம் மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் முனியம்மாள், சந்திரலேகா ஆகியோர் பயிற்சி பற்றிய கருத்துக்களை வழங்கினர்.
பயிற்சியில் கற்றல் விளைவுகள் குறித்தும், கற்றல் விளைவை நோக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கற்றல் விளைவில் ஆசிரியர்களின் பங்கு, கற்றல் விளைவு மொழிப்பாடல் பிற பாடங்கள் வேறுபாடு போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.ஆண்டிமடம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சுரேஷ், அலெக்ஸ் மேரி செலஸ்டின், பெரியதத்ததூர் மையத்தில் சத்தியபாமா, அனிதா, மரிய அடைக்கலம், ஆண்டிமடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரமேஷ், இமாகுலேட் மேரி, சியாமாளா, அய்யூர் மையத்தில் அகிலா, பவுல் ஜெயக்குமார், கலைஞானக்கதிர், வாரியங்காவல் குருவளமைய பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர் உத்திராபதி, டேனியல் மோகன்ராஜ், ஸ்டெல்லா மேரி, அழகாபுரம் மையத்தில் ஆசைத்தம்பி, ராணி, ஆரோக்கியமேரி, மருதூர் மையத்தில் பயிற்றுனர் கார்த்திகேயன், மணிகண்டன், தோமினிக் ஜெயக்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இதில் 114 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.






