என் மலர்tooltip icon

    திரிபுரா

    • திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது.
    • இதனால் உள்துறை மந்திரி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானத்தில் சென்றார்.

    இந்நிலையில், திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா சென்ற விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    • பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதை பாஜக அரசுதான் புரிந்து கொண்டது.
    • அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது.

     அகர்தலா:

    திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் பிரதமரின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    பல தசாப்தங்களாக, சந்தர்ப்பவாத அரசியலை கடைபிடிக்கும் கட்சிகளால் ஆளப்பட்டு வந்ததால் திரிபுரா மாநிலம் அதன் முக்கியத்துவத்தை, வளர்ச்சியை இழந்து இருந்தது. இதனால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த மாதிரியான சித்தாந்தம், இந்த மாதிரியான (அரசியல் கட்சிகளின்) மனநிலையால் பொதுமக்களுக்கு நன்மை செய்ய முடியாது. எதிர்மறையை எவ்வாறு பரப்புவது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும், எந்த நேர்மறையான வளர்ச்சித் திட்டங்களும் அவர்களிடம் இல்லை.

    அதிகார அரசியலால் நமது பழங்குடி சமூகம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சியின்மை வருத்தம் அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், தேர்தல் மற்றும் வன்முறை சம்பவங்களின் போது மட்டுமே பேசப்பட்டு வந்தன. பாஜக இந்த அரசியலை மாற்றியுள்ளது, பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதைப் பாஜக அரசுதான் புரிந்து கொண்டது. அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது.

    தற்போது இரட்டை எஞ்சின் அரசின் முயற்சியால், வடகிழக்கு பகுதியில் சர்வதேச வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக திரிபுரா மாறி வருகிறது. ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவதில் திரிபுரா முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் திரிபுரா குறித்து இன்று விவாதிக்கப்படுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக தூய்மைப் பிரச்சாரத்தை திரிபுரா மக்கள்தான் ஒரு பொது இயக்கமாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாக, இந்தியாவின் தூய்மையான மாநிலமாக திரிபுரா வந்துள்ளது. திரிபுர சுந்தரி அன்னையின் ஆசியுடன், திரிபுராவின் வளர்ச்சிப் பயணம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.

    • வீட்டிற்கு வெளியே இருந்த குழியை சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது உடல்கள் கிடைத்தன
    • சிறுவனை கைது செய்து விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    அகர்தலா:

    திரிபுராவின் தலாய் மாவட்டம், கமல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட துரை ஷிப் பாரி கிராமத்தில் ஒரு வீட்டிற்கு வெளியே இருந்த குழியில் உடல் ஒன்று கிடந்து உள்ளது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றினர்.

    மேலும், வீட்டிற்கு வெளியே இருந்த குழியை சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது 3 உடல்கள் கிடைத்து உள்ளன. மொத்தமுள்ள 4 உடல்களில் 3 பேர் பெண்கள், ஒருவர் ஆண். அவர்கள் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்.

    இதுபற்றி கமல்பூர் காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் கூறும்போது, 'இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில் அதே குடும்பத்தில் உள்ள 15 வயது சிறுவன் படுகொலைகளை செய்த விவரம் தெரிய வந்துள்ளது. சிறுவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்' என்றார்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பாதல் தேப்நாத் (வயது 70), சுமிதா தேப்நாத் (வயது 32), சுபர்னா தேப்நாத் (வயது 10) மற்றும் ரேகா தேப் (வயது 42) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். படுகொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திரிபுராவில் ஜே.பி. நட்டா தலைமையில் பேரணி நடைபெற்றது.
    • இதில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

    இதற்கிடையே, திரிபுராவின் மேற்கு மாவட்டமான குமுல்வங்கில் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பிரசார பேரணி நடைபெற்றது.

    இந்நிலையில், பேரணியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் பா.ஜ.க தொண்டர்கள் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பா.ஜ.க. தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    • திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • திருபுரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 365 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருபுரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 365 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முதல்வர் மாணிக் சாஹா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் முற்றிலும் ஆரோக்கியமாகவும், எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாகவும் இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல்.
    • மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அகர்தலா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

    திரிபுராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா செங்கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அம்மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ஆசிஷ் குமார் சாஹா தெரிவித்துள்ளார்.

    மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. மோதலுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பாஜக  ஆதரவாளர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக திரிபுரா தகவல் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், திரிபுராவில் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் எங்களுடன் உள்ளனர். இந்த தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. அந்த குண்டர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் மந்திரி மாணிக் ஷா 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • அகர்தலா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    அகர்தலா:

    திரிபுரா சட்டசபைக்கான 4 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

    இதில், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட முதல் மந்திரி மாணிக் ஷா டவுன் பர்தோவாலி தொகுதியிலும், மலினா தேப்நாத் ஜுபராஜ்நகர் தொகுதியிலும், ஸ்வப்னா தாஸ் (பால்) சுர்மா தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

    திரிபுராவின் தலைநகராக உள்ள அகர்தலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுதீப் ராய் பர்மன் வெற்றி பெற்றார் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ×