என் மலர்
ராஜஸ்தான்
- ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று விமர்சித்தார்.
- மத்திய மந்திரி கஜேந்திரசிங் சவுகாலா மீது ராஜஸ்தான் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் ராஜஸ்தானின் சித்தோர்கரில் நடந்த பா.ஜனதா பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று விமர்சித்தார். மேலும் மாநிலத்தில் ராமராஜ்ஜியத்தை நிறுவ மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே முதல்-மந்திரி அசோக் கெலாட்டை அவதூறாக பேசியதாக மத்திய மந்திரி கஜேந்திரசிங் மீது காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான சுரேந்திர சிங் ஷெகாவத் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு எதிராக இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மத்திய மந்திரி கஜேந்திர சிங் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். பா.ஜனதா பேரணியில் அவர் பேசும்போது மத உணர்வுகளை தூண்ட முயன்றார் என்றார்.
இதையடுத்து மத்திய மந்திரி கஜேந்திரசிங் சவுகாலா மீது ராஜஸ்தான் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
- நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.
- பாஜகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என அசோக் கெலாட் விமர்சனம்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் தகுதிவாய்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை வழங்குவதற்காக 'பணவீக்க நிவாரண முகாம்கள்' நடத்தப்படுகின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்க, 10 மக்கள் நலத் திட்டங்களில் ஏழை, எளிய மக்களை இணைக்கவும், உடனடி பலன்களை வழங்கவும் இந்த முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் அசோக் கெலாட் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
அவ்வகையில் இன்று ஹனுமன்கர் மாவட்டம் ரவாஸ்தர் நகரில் உள்ள முகாமை பார்வையிட்ட முதல்வர் கெலாட், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-
பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் எதையாவது சொல்கிறார், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை. நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் (மோடி) கூறினார். இப்போது நீங்கள் (மோடி) இரண்டு முறை நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள். ஏன் சட்டம் இயற்றப்படவில்லை?
மோடியின் ஆட்சியில் விமர்சிப்பவர் துரோகி. விமர்சித்தால் சிறைக்கு செல்வீர்கள். அவர்கள் (பாஜக-வினர்) நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.
நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. வாழ்வின் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. சோனியா காந்தி என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நான் மூன்று முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளேன். மத்தியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 43 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.
பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 52 ரன்னும், ருதுராஜ் 47 ரன்னும் எடுத்த னர். ராஜஸ்தான் தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
இந்த இலக்கு சராசரியை விட அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டு கொடுத்து விட்டோம்.
ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருந்தது. இதனால் அவர்களுக்கு நிறைய ரன்கள் கிடைத்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் எட்ஜ் ஆகி பவுண்டரிகளாக சென்றன.
இது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சராசரிக்கு அதிகமான இலக்கு என்பதால் நாங்கள் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை.
பதிரானா பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பதை இலக்கு பிரதிபலிக்கவில்லை. ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்தார். இறுதி கட்டத்தில் ஜுரலும் நன்றாக விளையாடினார்.
ஜெய்ப்பூர் மைதானம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். எனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விசாகப்பட்டினத்தில் அடித்ததன் மூலம் எனக்கு 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஜெய்ப்பூரில் 183 ரன்கள் விளாசினேன். அது எனக்கு மேலும் ஒரு ஆண்டு விளையாட வாய்ப்புக்கு வழிவகை செய்தது.
இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது தோல்வியை (8 ஆட்டம்) சந்தித்தது. ராஜஸ்தான் 5வது வெற்றியை பெற்றது. இந்த தோல்வி மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி 3வது இடத்துக்கு சரிந்தது.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 202 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சென்னை 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். ஜாஸ் பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஷிவம் துபே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ருதுராஜ் 47 ரன்னில் அவுட்டானார். மொயீன் அலி, ஜடேஜா தலா 23 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில், சென்னை அணி 170 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் 5வது வெற்றியைப் பதிவு செய்தது.
- லாரிகளில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
- உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பிசானேரியில் இருந்து சன்கோருக்கு டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. பார்மர் மாவட்டம் அல்புரா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிரே மற்றொரு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் லாரிகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த லாரிகளில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்டனர்.
- போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் உள்ள துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU)நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மகேந்திர டாமோர் கூறுகையில், "துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியின் என்ஐசியு வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
தீயணைப்புப் பாதுகாப்பு அதிகாரி பாபுலால் சவுத்ரி கூறுகையில், "புதிதாகப் பிறந்த குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் குழுவுடன் மூன்று வாகனங்களுடன் சென்றேன். புகை சூழ்ந்து போதிலும் தீயை அணைத்து, குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினோம்," என்று அவர் கூறினார்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
- 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 21 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 29 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களும், ஜோஸ் பட்லர் 40 ரன்களும், தேவ்தட் படிக்கல் 26 ரன்களும், ரியான் பராங் 15 ரன்களும், அஷ்வின் 3 ரன்களும், சஞ்சு சான்சன் 2 ரன்களும் எடுத்தனர். அஷ்வின் மற்றும் ரியான் பராங் ஆகியோர் ஆட்டத்தை இழக்கவில்லை.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய லக்னோ 154 ரன்கள் எடுத்தது.
- தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார்.
ஜெய்ப்பூர்:
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 21 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 29 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.
- அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இந்த ரெயில் இயக்கப்படும்.
- இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் துவக்க நாளான இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. நாளை முதல் வழக்கமான சேவை தொடங்க உள்ளது. நாளை முதல் அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு 5 மணி 15 நிமிடங்களில் இந்த ரெயில் சென்றடையும். தற்போது அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடைகிறது.
இந்த ரெயில், ராஜஸ்தானின் புஷ்கர், அஷ்மீர் ஷரிப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதுடன், இப்பகுதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
- அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார்.
- சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது.
2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பதவி, கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது. அதில் இருந்தே அவருடன் சச்சின் பைலட் மோதி வருகிறார். இந்த மோதல் போக்கு, கட்சித்தலைமையின் தலையீட்டால் அவ்வப்போது சற்றே தணிவதும், பின்னர் மீண்டும் அனல் வீசுவதும் தொடர்கிறது.
இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார். அத்துடன் முந்தைய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி 11-ந் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
இதற்காக அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா எச்சரிக்கை விடுத்தார். மாநில அரசுக்கு எதிரான இத்தகைய போராட்டம், கட்சி விரோத நடவடிக்கை, கட்சியின் நலன்களுக்கு எதிரானது என எச்சரித்தார்.
ஆனாலும் சச்சின் பைலட் அதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜெய்ப்பூரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க போர் நினைவுச்சின்னமான 'ஷாகீத் ஸ்மாரக்'கில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்.
வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடந்த இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டி நடவடிக்கை போல 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான தொலைநோக்குப்பார்வை வீடியோவை அசோக் கெலாட் அதிரடியாக வெளியிட்டார்.
இந்த வீடியோவில் அவர், " 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தானை முன்னணி மாநிலமாக ஆக்குவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இந்தக் கனவை நனவாக்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளாகவும், இந்த ஆண்டும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிவித்து இருக்கிறேன்" என கூறி உள்ளார். தான் அமல்படுத்தி உள்ள சிரஞ்சீவி சுகாதார காப்பீடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், ரூ.10 லட்சம் விபத்துக்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்திருப்பது, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவருக்கும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. அவ்வப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது உண்டு. அப்போது எல்லாம் கட்சி மேலிடம் இருவரையும் சமரசம் செய்து வைத்து வருகிறது.
இந்த மோதலின் உச்சகட்டமாக அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தற்போதைய அரசு தவறி விட்டது என்றும் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய வேண்டியது காங்கிரசின் கடமை என்றும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சச்சின் பைலட் தெரிவித்தார்.
அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி மேலிடம் எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
தான் அறிவித்தபடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று சச்சின் பைலட் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டத்தில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த மூத்ததலைவர் போராட்டத்தில் குதித்து உள்ளது காங்கிரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்து உள்ளது.
- ராஜஸ்தான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
- இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கெலாட் கூறுகையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணிகளை கவனித்து வருகிறேன். லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பா.ஜ.க.வை சேர்ந்தவரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியான வசுந்தரா ராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.






