search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasundhara Raje Scindia"

    • ஜனநாயக நாட்டில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்.
    • அசோக் கெலாட்டுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின்னர் மூத்த தலைவர்களின் சமரச பேச்சு காரணமாக பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இதுபற்றி தற்போது ஜோத்பூரில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசியபோது, 2020-ம் ஆண்டு தனது ஆட்சியை கவிழ்க்க உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர் சதி செய்தனர். இதற்காக எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு பணம் வினியோகிக்கப்பட்டது.

    ஆனால் அப்போது எனது ஆட்சி காப்பாற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி வசுந்துரா ராஜே சிந்தியா மற்றும் முன்னாள் சபாநாயகர் கைலாஷ் மேக்வால், எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா ஆகியோரே காரணம், எனது ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை யாரும் திரும்ப வாங்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, என்று கூறியிருந்தார்.

    முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியதை வசுந்துரா ராஜே சிந்தியா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அசோக் கெலாட்டுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனை சமாளிக்க அவர் என்னை பற்றி தவறான கருத்துக்களை கூறிவருகிறார்.

    அவரது ஆட்சியை காப்பாற்ற நான் உதவி செய்ததாக அவர் பொய் கூறுகிறார். ஜனநாயக நாட்டில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அப்படியிருக்க ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியே, எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கியதாக கூறியுள்ளார். அவரிடம் தான் உள்துறை இலாகா உள்ளது. அவர் உடனே அந்த எம்.எல்.ஏ. க்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜஸ்தானில் நடந்த குதிரை பேரத்திற்கு பின்னணியில் அசோக் கெலாட்டே இருந்தார். அவர் தான் இதற்கு மூளையாக செயல்பட்டார். ஆனால் பாரதிய ஜனதா ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுப ட்டதில்லை, இனியும் ஈடுபட போவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×