என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது.
    • ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

    16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ல் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னும், அதர்வா தாயீட்19 ரன்னிலும், ஷிகர் தவான் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இதனால் பஞ்சாப் அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ரன்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 49 ரன்னும், ஷாருக் கான் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக தேவ்தட் படிக்கல் 51 ரன்களும், யாஷவி ஜெய்ஸ்வால் 50 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மியர் 46 ரன்களும், ரியான் பராக் 20 ரன்களும், சஞ்சு சாம்சன் 2 ரன்களும் எடுத்தனர். ஜோஸ் பட்லர் ரன் எடுக்காமல் அவுட்டானார். துருவ் ஜூரல் 10 ரன்களும், டிரெண்ட் பவுல்ட் ஒரு ரன் எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றிப்பெற்றது. 

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
    • பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர்.

    அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

    கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 48 ரன்களில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    தொடர்ந்து, அதர்வா டைட் 55 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களும், சாம் குரான் 11 ரன்களும், ஷாருக்கான் 6 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் சஹார் ரன்கள் எடுக்கவில்லை.

    இதன் முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

    • அமிர்தசரஸ் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • விமானம் அமிர்தசரஸ் வந்து இறங்கியதும் ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

    அமிர்தசரஸ்:

    துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜலந்தரை சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற பயணி இருந்தார்.

    குடிபோதையில் இருந்த அவர் விமான பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து விமான பணிப்பெண் அவர் மீது புகார் அளித்தார்.

    இதுகுறித்து அமிர்தசரஸ் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் அமிர்தசரஸ் வந்து இறங்கியதும் ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

    • பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக இந்து சுரக்சா அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் அவதூறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.
    • மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

    சண்டிகா்:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக இந்து சுரக்சா அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் இந்த அவதூறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.

    இந்த வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. ஜூலை 10-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் சமீபத்தில் மரணமடைந்துள்ளார்.
    • கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    சண்டிகர்:

    இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, வரும் 12-ம் தேதி 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் கூறியிருந்தது.

    இந்நிலையில், கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

    • பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தது. இந்நிலையில், பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பஞ்சாப் போலீசார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடிப்பில் சம்பவத்தில், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • பஞ்சாப்பில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தது நினைவிருக்கலாம்.

    பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அமிர்தசரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது. நேற்று இதன் அருகே உள்ள ஹெரிட்டேஜ் தெருவில் மர்ம பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது.

    இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற பீதி பொதுமக்கள் மத்தியில் நிலவியது. ஆனால் இது குண்டு வெடிப்பு அல்ல. ஒரு ஓட்டலில் கியாஸ் கசிவால் ஏற்பட்டது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் நேற்று சம்பவம் நடந்த ஹெரிடேஜ் தெருவில் மீண்டும் மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடிச்சத்தம் அருகில் உள்ள பகுதிக்கும் கேட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வெடித்த மர்மபொருள் என்னவென்று தெரியவில்லை. அதன் மாதிரியை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் ஒருவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அமிர்தசரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
    • என் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எல்லாவற்றையும் ஏவி விடுகிறார்கள்.

    சண்டிகார் :

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    என் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எல்லாவற்றையும் ஏவி விடுகிறார்கள். எப்படியாவது, 'கெஜ்ரிவால் ஒரு திருடன், அவனும் ஊழலில் ஈடுபட்டுள்ளான்' என்று நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.

    நான் பிரதமர் மோடிக்கு சொல்லிக் கொள்கிறேன். நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கூட என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.
    • 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

    டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்னும், மேத்யூ ஷார்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. லிவிங்ஸ்டோன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 82 ரன்னும், ஜிதேஷ் சர்மா 27 பந்தில் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், கேரமரன் கிரீன் 23 ரன்களும் எடுத்தனர்.

    திம் டேவிட் 19 ரன்களுடன், திலக் வர்மா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

    இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 18.5 ஓவரில் 216 ரன்கள் எடுத்து மும்பை அணி ஆட்டத்தை கைப்பற்றியது.

    • டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் 214 ரன்களை குவித்தது.

    மொகாலி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்னும், மேத்யூ ஷார்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. லிவிங்ஸ்டோன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 82 ரன்னும், ஜிதேஷ் சர்மா 27 பந்தில் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

    • பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், மதியம் 1.30 மணிக்கு மேல் பீக் லோட் (மின்சாரம்) தொடங்கும்.
    • அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையைச் செய்து முடிப்பதால், இந்த முடிவு சாமானிய மக்களுக்கும் பயனளிக்கும்.

    பஞ்சாப் மாநில அரசின் புதிய அலுவலக நேரம் நேற்று (மே, 2ம் தேதி) முதல் செயல்பட தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். பொதுவாக பஞ்சாப் மாநில அரசுத் துறைகளின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 2 மணிவரை செயல்பட்டன.

    இந்த புதிய அலுவலக நேரம் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மாநில அரசு ஊழியர்கள் உள்பட பலருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

    மேலும் அவர், கோடை காலத்தில் அலுவலக நேர மாற்றம், மின் தேவையின் சுமையை குறைக்கும் என்றார். பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், மதியம் 1.30 மணிக்கு மேல் பீக் லோட் (மின்சாரம்) தொடங்கும் என்றும், மதியம் 2 மணிக்கு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டால், பீக் லோட் 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க உதவும் என்றும் முதல்வர் கூறினார்.

    பகலில் வெப்பமான காலநிலையின் உச்ச நேரம் தொடங்கும் முன், அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையைச் செய்து முடிப்பதால், இந்த முடிவு சாமானிய மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் முதல்வர் கூறினார்.

    இதைதவிர, ஊழியர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என்பதால் இது அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    ×