பஞ்சாப்பில் பரபரப்பு - பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடிப்பு

பஞ்சாப்பில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.
பஞ்சாப்பில் பரபரப்பு - பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடிப்பு
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தது நினைவிருக்கலாம்.

பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com