என் மலர்
ஜார்கண்ட்
- மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திருட்டு கண்டுபிடிப்பு
- ஆயுதங்களுடன் நிலக்கரி திருடர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான்பாத்:
ஜார்க்கண்ட் மாநிலம் தான்பத் மாவட்டத்தில் நிலக்கரி திருடும் கும்பலை தடுத்தபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்மரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெனிதிஹ் நிலக்கரி சேமிப்பு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் நிலக்கரியை திருடுவதை பார்த்தனர். அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், நிலக்கரி திருட்டை தடுத்தனர். அப்போது நிலக்கரி திருடர்கள் திடீரென தாக்கத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 திருடர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதங்களுடன் நிலக்கரி திருடர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை முன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஆஜரானார்
- உண்மைகளை கண்டறியாமல் பரபரப்பு தகவல்களை வெளியிடக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற து. அங்கு சட்டவிரோதமாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து ஊழல் அரங்கேறி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, பச்சுயாதவ், பிரேம் பிரகாஷ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில், முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து விசாரணை தேதி 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நேற்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
- சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முதல்-மந்திரி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா மனு அளித்து இருந்தது. இதையடுத்து ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது.
சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முதல்-மந்திரியின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்து இருந்தது. கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட சோதனையில் மிஸ்ராவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11.88 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.5.34 கோடி பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் கைதானார்.
மேலும் மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஹேமந்த் சோரனின் பாஸ்புக் மற்றும் அவர் கையெழுத்தட்ட சில காசோலைகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பங்கஜ் மிஸ்ரா தனது கூட்டாளிகள் மூலம் ஹேமந்த் சோரனின் தொகுதியில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது.
பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத்திடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பி உள்ளது.
ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு நாளை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- 43 ஆண்டுகள் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
- இரானிக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கவுரவித்துள்ளது.
ஜாம்ஷெட்பூர் :
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாம்ஷெட் ஜே.இரானி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவர் 'இந்தியாவின் உருக்கு மனிதர்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இரானி, கடந்த 1936-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் கோர்ஷெட் இரானி-ஜீஜீ தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை நாக்பூரிலேயே முடித்தார். 1960-ம் ஆண்டு, இங்கிலாந்தில் ஷெபீல்டு பல்கலைக்கழகத்தில் உலோகவியல் படித்தார். அதில் பிஎச்.டி. பட்டமும் பெற்றார்.
பின்னர், இங்கிலாந்திலேயே ஒரு இரும்பு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 1968-ம் ஆண்டு இந்தியா திரும்பி, டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார். 43 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இரானிக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கவுரவித்துள்ளது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
- சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே இன்று காலை 6.45 மணிக்கு அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது.
அந்த ரெயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. இதனால் ரெயில் பெட்டிகளில் இருந்த நிலக்கரிகள் தண்டவாளத்தில் சிதறி கிடக்கிறது.
இதுபற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரதாப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினோத் குமார் கிராம மக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டார்.
- பிரதாப்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பர்வா கோச்வா கிராமத்தில் மண்ணில் புதைந்து சிறுமி உள்பட 4 பேர் புதைந்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தங்கள் குடிசைகளின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணியின்போது நிலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
ராஞ்சியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதாப்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பர்வா கோச்வா கிராமத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி சிறுமி உள்பட 4 பேர் மண்ணில் புதைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து, பிரதாப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினோத் குமார் கிராம மக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டார்.
இதில், நான்கு பேரும் மண்ணில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு பிரதாப்பூர் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் முனக் குமாரி (18), ஆர்த்தி குமார் (15), பிங்கி குமார் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நான்காவது நபர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
- உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதில் இருந்தால் அதை செய்யுங்கள்.
- சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன் கூறியதாவது:
சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன்.

எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்தால், எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறேன். சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய இந்திய அணி 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.
தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது.
பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும்.
இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஹென்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோர் அரை சதமடித்தனர்.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. டி காக் 5 ரன்னில் அவுட்டானார். மலான் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹென்ரிக்சுடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதம் கடந்தனர்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், கிளாசன் 30 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும், பார்னெல் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பாஹிமர் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 41 பேர் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் பக்தர்கள். இவர்கள் பீகாரின் கயாவில் இருந்து ஒடிசாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
29 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
- டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
இந்த நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (25-ந்தேதி) மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்தனர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்பு விடைபெற விரும்புகிறேன் என்று டோனியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
- இதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 50 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பஸ், தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் உள்ள பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.






