என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்பாத் தீ விபத்து"

    • ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட14 பேர் பலியாகினர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜோராபடக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

    கட்டடத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தீவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர்.
    • தீவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜோராபடக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட14 பேர் பலியாகினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தீவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஜார்க்கண்டின் தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்பாத் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×