என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- 2022-ம் ஆண்டில் பாதுகாப்பு படையுடனான மோதலில் 172 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
- இதில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகளும் அடங்குவர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் 93 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 42 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
அதில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர். 35 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர். 22 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆகும்.
கடந்த ஆண்டை காட்டிலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. 100 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதில், 74 பேர் லஷ்கர் அமைப்பில் இணைந்தனர். பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 360 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் 29 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
- பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கண்ணிவெடி குவியலை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலைக்கு முயற்சி செய்தது. இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் காஷ்மீரில் சிட்ரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் காரில் ஊடுருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் ஒரு வாகனத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
பயங்கரவாதிகளை உயிருடன் பிடிக்க பாதுகாப்பு படையினர் முதலில் முயற்சி செய்தனர். ஆனால் பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
காலை 7.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. 8.30 மணி அளவில் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து சுடுவது நின்றது.
அதன்பிறகு அந்த வாகனத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.
- இந்தியப் பகுதிக்குள் ஊடுருவவும், ஆயுதங்களை கடத்தவும் பயங்கரவாதிகள் தீவிரமாக உள்ளனர்.
- ஊரி ஹத்லங்கா பகுதியில் ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகர் :
காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடப்பதாகவும், ஏராளமான ஆயுதங்களை குவிக்க முயல்வதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பல திடீர் தாக்குதல்களையும், தேடுதல் நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஊரி ஹத்லங்கா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
அவற்றில், 8 ஏ.கே.74 துப்பாக்கிகள், 24 ஏ.கே.74 துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 560 ஏ.கே.74 தோட்டாக்கள், 12 சீன கைத்துப்பாக்கிகள், 24 சீன கைத்துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 244 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 9 சீன கையெறிகுண்டுகள், 5 பாகிஸ்தான் கையெறிகுண்டுகள், 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று பொறிக்கப்பட்ட 81 பலூன்கள், பாகிஸ்தான் பெயருடன் 5 செயற்கை இழை சாக்குப்பைகள் ஆகியவை அடங்கும் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும், அவர்களின் ஆயுத, வெடிபொருட்கள் இருப்பும் வெகுவாக குறைந்துள்ளன. எனவே இந்தியப் பகுதிக்குள் ஊடுருவவும், ஆயுதங்களை கடத்தவும் பயங்கரவாதிகள் தீவிரமாக உள்ளனர்.
ஆனால் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு தங்கள் பகுதிக்கு திரும்பியிருக்கலாம்' என்று அவர் கூறினார்.
பாரமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் ஏற்கனவே இந்த ஆண்டு நடத்தப்பட்ட 8 தேடுதல் நடவடிக்கைகளில் பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன், போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- அனந்த் நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில் அரசு ஆசிரியர் இக்பால் ஷேக் மற்றும் டெய்லர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.
பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காஷ்மீரில் ஏற்கனவே பல இடங்களில் சோதனை நடத்தியது. இது தொடர்பான வழக்கும் பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வது தொடர்பான வழக்கில் காஷ்மீர், டெல்லியில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், குல்காம், பெக்ரம் போரா, சோபரே, அவந்தி போரா, ஜம்மு ஆகிய பகுதியிலும் டெல்லியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அனந்த் நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில் அரசு ஆசிரியர் இக்பால் ஷேக் மற்றும் டெய்லர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
புல்வாமாவில் உள்ள ராஜ்போரா கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் அஹ்சன் மிரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
- இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
- பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சோபியான் மாவட்டம் சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர்.
- ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது.
ஜம்மு:
ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக பிரிவினைவாதம், ஊழலால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகளை மறுத்தது. பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தானால் அந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது.
பிரதமர் மோடி 370வது பிரிவை ரத்து செய்து, இந்த பகுதியில் அமைதி, முன்னேற்றம் மூலம் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது. இங்குள்ள அதன் அனுதாபிகள் பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை அழிக்க முயன்றனர். இருப்பினும் தற்போது நிலைமை மாறிவிட்டது.
குடும்ப அடையாள எண் வழங்கும் நடவடிக்கை குறித்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது ஜம்மு காஷ்மீரில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும். ஜம்மு காஷ்மீரில் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர். முந்தைய காலத்தில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் எப்படி அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்? பிரிவினைவாதிகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்பட்டது?
இப்போது நடக்கும் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்கள், முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு பணிகளில் ஆள் தேர்வுகள் கேள்விக்குள்ளானபோது, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பால் அது விசாரிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான 15,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
- நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்களிக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளுக்கான மாநாட்டில் பிரதமர் அலுவலகத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பலவேறு சலுகைகளை வழங்கி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் கட்டண சலுகை, மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிப்பு, ஓய்வூதியம் அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான 15,000 பணியிடங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் நிரப்பப்பட்டுள்ளன. இது மோடியின் ஆட்சியில் மட்டுமே சாத்தியமானது. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்களிக்க வேண்டும்.

இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் போது அவர்களின் பங்களிப்பும் பொன்னான வார்த்தைகளில் எழுதப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த 1600க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல சட்டங்களும் திருத்தப்பட்டன. சில சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது அவர்கள் அப்பாவி பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 2 ஏ.கே. 74 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள், போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர் :
ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தவர், மெகபூபா முப்தி. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான இவர்தான் காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்-மந்திரியும் ஆவார்.
முதல்-மந்திரியாக இவர் பதவி வகித்தபோது அனந்த்நாக் மாவட்டத்தின் கனாபல்லில் உள்ள வீட்டுவசதி வாரியத்தில் இவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகும் இன்னும் அவர் அந்த குடியிருப்பை காலி செய்யவில்லை.
எனவே அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
24 மணி நேரத்தில் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டு இருந்தது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. அனந்த்நாக் மாவட்ட துணை கமிஷனரின் உத்தரவின் பேரில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதைப்போல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களும் 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
முன்னதாக தலைநகர் ஸ்ரீநகரில் அதிக பாதுகாப்பு நிறைந்த குப்கர் பகுதியில் மெகபூபா முப்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு வீட்டை (பேர்வியூ இல்லம்) காலி செய்யுமாறு கடந்த மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- குக்கர் வெடிகுண்டு மூலமாக மிகப்பெரிய சதி திட்டத்துக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
- குக்கர் வெடிகுண்டு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் பகுதி போலீசாரும், ராணுவத்தினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராணுவத்தில் செயல்பட்டு வரும் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர், காவல்துறையினருடன் இணைந்து கூட்டாக மேற்கொண்ட இந்த அதிரடி சோதனையில் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர் வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
ஷோபியான் பகுதியில் இமாம் சாஹிப் என்ற இடத்தில் ராணுவ படையினர் இந்த குக்கர் குண்டை கண்டு பிடித்தனர்.
இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் குக்கரை திறந்து பார்த்த போது அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்து வெடிகுண்டை செயல் இழக்க செய்தனர்.
குக்கர் வெடிகுண்டு மூலமாக மிகப்பெரிய சதி திட்டத்துக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. குக்கர் வெடிகுண்டு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் ராணுவ படையினர் வெடிகுண்டை கண்டு பிடித்து செயல் இழக்க வைத்ததால் மிகப்பெரிய நாசவேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்து சிதறி சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் குக்கர் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மினி பஸ்சை மறித்து போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மினி பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக 613 வாக்குசாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
- வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 872 பேர் அதிகரித்துள்ளனர்.
ஜம்மு:
நாட்டின் வட எல்லையான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொண்டு வர தேர்தல் ஆணையமும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் மற்றும் நீக்கும் பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை ஜம்மு-காஷ்மீரின் இணை தேர்தல் அதிகாரி அனில் சல்கோத்ரா வெளியிட்டு பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்கள் 83 லட்சத்து 59 ஆயிரத்து 771 பேர். இவர்களில் 42 லட்சத்து 91 ஆயிரத்து 687 பேர் ஆண்கள். 40 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர் பெண்கள். 184 பேர் இதர பிரிவினர். மொத்த வாக்காளர்களில் 57 ஆயிரத்து 253 பேர் மாற்று திறனாளிகள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக 613 வாக்குசாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 872 பேர் அதிகரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் இப்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது. இவை முடிந்த பின்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
அதன் முன்னேற்பாடாகவே இப்போது வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர்.
- எல்லையில் பாகிஸ்தானியர் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஜம்மு:
காஷ்மீரில் உள்ள ஜம்மு மாவட்டம் அரினா செக்டர் பகுதி வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றார்.
காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து வந்ததால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.
இதேபோல சம்பா மாவட்டம் ராம்கர் செக்டார் அருகே ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.
எல்லையில் பாகிஸ்தானியர் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.






