search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    24 மணி நேரத்துக்குள் அரசு குடியிருப்பை காலி செய்ய மெகபூபா முப்திக்கு உத்தரவு
    X

    24 மணி நேரத்துக்குள் அரசு குடியிருப்பை காலி செய்ய மெகபூபா முப்திக்கு உத்தரவு

    • முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர் :

    ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தவர், மெகபூபா முப்தி. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான இவர்தான் காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்-மந்திரியும் ஆவார்.

    முதல்-மந்திரியாக இவர் பதவி வகித்தபோது அனந்த்நாக் மாவட்டத்தின் கனாபல்லில் உள்ள வீட்டுவசதி வாரியத்தில் இவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகும் இன்னும் அவர் அந்த குடியிருப்பை காலி செய்யவில்லை.

    எனவே அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    24 மணி நேரத்தில் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டு இருந்தது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. அனந்த்நாக் மாவட்ட துணை கமிஷனரின் உத்தரவின் பேரில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதைப்போல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களும் 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக தலைநகர் ஸ்ரீநகரில் அதிக பாதுகாப்பு நிறைந்த குப்கர் பகுதியில் மெகபூபா முப்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு வீட்டை (பேர்வியூ இல்லம்) காலி செய்யுமாறு கடந்த மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×