என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
- சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் உள்ள ரெயில் தடத்தில் விசாகா- ராயகாடா பயணிகள் ரெயில் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதே தண்டவாளத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரெயில் அதன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதில், பயணிகள் ரெயிலின் 3 பெண்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
தற்போது மேலும் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனால் உயரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து ரெயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ரெயிலில் பயணிகள் இருந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- கார் தாஜ் கிருஷ்ணா ஓட்டல் சந்திப்பு அருகே சென்றபோது போலீஸ் சீருடையில் பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்தனர்.
- பணப்பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.15 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.5 லட்சம் காணாமல் போனது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி போலீஸ்காரர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜவுளிக்கடை ஊழியர்களிடம் வழிப்பறி செய்துள்ளார்.
ஐதராபாத், பஷீர் பார்க்கை சேர்ந்தவர் பிரதீப் ஷர்மா (வயது 30). இவர் பேகம் பஜார், மெஹதி பட்டினத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அக்சய் என்பவர் ஜவுளிக்கடைகளில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரூ.20 லட்சத்துடன் பிரதீப் சர்மா, அக்சய், பிரதீப் சர்மாவின் டிரைவர் சங்கர் ஆகியோர் காரில் பஞ்ச குட்டாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக ரூ.20 லட்சத்துடன் புறப்பட்டு சென்றனர்.
கார் தாஜ் கிருஷ்ணா ஓட்டல் சந்திப்பு அருகே சென்றபோது போலீஸ் சீருடையில் பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்தனர்.
அதேபோல் போலீஸ் என எழுதப்பட்ட கார் அங்கு வந்து நின்றது. அப்போது போலீஸ் சீருடையில் வந்தவர்கள் தேர்தலையொட்டி வாகன சோதனை நடத்துகிறோம் என தெரிவித்தனர்.
காரை சோதனை செய்தனர். காரில் இருந்த பையில் ரூ.20 லட்சம் இருந்ததால் கருப்பு பணமா என விளக்கம் கேட்டு விட்டு கைராபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பிரதீப் சர்மா உட்பட 3 பேரையும் அழைத்துச் சென்றனர்.
பின்னர் பணப்பையை பிரதீப் சர்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றனர். பணப்பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.15 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.5 லட்சம் காணாமல் போனது. இதுகுறித்து பிரதீப் சர்மா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் போலீஸ் சீருடைகள் வந்து பணத்தை பறித்து சென்றதாக சந்தேகம் அடைந்தனர்.
மேலும் போலீசார் பணம் வழிப்பறி நடந்த இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது வழிப்பறிக்கு பயன்படுத்தியது கமிஷனர் அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டரின் கார் என தெரிய வந்தது. வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஆயுதப்படையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் என கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்தனர்.
மேலும் அவருடன் வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சந்திரபாபுநாயுடு சட்ட விரோத கைதை கண்டித்தும், உறங்கிக் கொண்டு இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கண்களை திறப்பதற்காக எனக் கூறி இன்று இரவு 7 மணிக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு சாலைகள், வீட்டு மாடிகள், பால்கனிகளில் நின்று 5 நிமிடங்கள் ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீகாகுளத்தில் காளி செட்டி என்பவர் தலைமையில் 50 மீட்டர் நீளம் உள்ள கருப்பு துணியை கையில் பிடித்தபடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன.
- ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று இரவு கோவில் நடை மூடப்பட்டது. சந்திர கிரகணத்தை ஒட்டி 6 மணி நேரம் முன்னதாக 7.05 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. நேற்று நள்ளிரவு 1.05 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்பட்டு 2.22 மணிக்கு நிறைவு பெற்றது.
இதையடுத்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன. பின்னர் 13 மணி நேரத்திற்கு பிறகு 3.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
திருப்பதியில் நேற்று 47,35 1 பேர் தரிசனம் செய்தனர். 23,836 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 3.03 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- நடைபாதையில் வரும் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின.
அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நேற்று ஏழுமலையான் கோவிலில் 63,404 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26,659 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு 7.05 மணிமுதல் நாளை அதிகாலை 3.15 வரை 8 மணிநேரம் கோவில் மூடப்படுகிறது. நாளை அதிகாலை பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் உள்ளது. நடைபாதையில் வரும் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- கர்நாடகவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட எந்த திட்டத்தையும் சித்தராமைய்யா செயல்படுத்தவில்லை.
- காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தது.
கர்நாடக பாணியில் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பெண்களுக்கு மாதம் ரூ.2,500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதல் மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக கர்நாடகா விவசாயிகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். கர்நாடக விவசாயிகள் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.
கர்நாடகவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட எந்த திட்டத்தையும் சித்தராமைய்யா செயல்படுத்தவில்லை.
அதேபோல்தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டார்கள் என முக்கியமான தொகுதிகளில் பதாகைகளை ஏந்தியும் வீடுகளாக துண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் பா.ஜ.க.வினர் இடையில் புகுந்து எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
இதனால் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு நிலவி வருகிறது.
- இஸ்ரோ கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாராசூட் அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளது.
- மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிவி-டி1 என்ற சோதனை ராக்கெட் மூலம் விண்கலம் கடந்த 21-ந்தேதி விண்ணில் ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது.
இதனை தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் அதிக சோதனை பணிகளை இஸ்ரோ வரிசைப்படுத்தி உள்ளது. குறிப்பாக, இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டால் (ஐ.ஐ.எஸ்.யு) வடிவமைத்து உருவாக்கப்பட்ட 'வியோமித்ரா' என்ற 'பெண்' ரோபோ எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதைக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட இருக்கிறது.
இதில் குறிப்பாக, இஸ்ரோ கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாராசூட் அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஏர்-டிராப் டெஸ்ட் (ஐஏடிடி) மற்றும் பேட் அபார்ட் டெஸ்ட் என்ற 2 அறிவியல் சோதனைகள் செய்யப்பட உள்ளது.
அடுத்து வரும் 4 சோதனைகளில் டி.வி-டி2 ராக்கெட் சோதனை 2-வதாக இருக்கும். ஏற்கனவே அனுப்பிய டிவி-டி1 ராக்கெட் போல் இல்லாமல், டிவி-டி2 ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்த உடன், விண்கலத்தின் அணுகுமுறையை அறிந்து கொள்வதற்கு மீண்டும் நிலைப்படுத்துவதற்கான ஒரு கட்டுப்பாட்டு அமைப்பையும் கொண்டிருக்கும்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது. இது எதிர்காலத்தில் சாத்தியமாகும். அத்துடன், டிவி-டி1 ராக்கெட்டில் இருந்து கடலில் உப்பு நீரில் விழுந்த விண்கலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா? இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இதை மீண்டும் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் வகுத்து வருகிறோம். இதற்காக விண்கலத்தை திறந்து சுத்தம் செய்து என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் பொருத்தமான சோதனைத் திட்டத்திற்கு அதை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படும் '2040-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது உட்பட, இந்தியாவிற்கான லட்சிய விண்வெளிப் பயண இலக்குகளில் முதன்மையானது ககன்யான் ஆகும்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.
- ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் ராம் கோபால் வர்மா பதிவிட்டார்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாடு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்கோபால் வர்மா நேற்று காலை ராஜமுந்திரி ஜெயில் முன்பாக காரில் சென்று கொண்டு இருந்தார்.
திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.
பின்னர் ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். படத்திற்கு கீழே இல்லை@ஒய்.எஸ். ஜெகன் உள்ளே இல்லை என பதிவு செய்து இருந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
ஜெயில் வாயில் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராம் கோபால் வர்மா ஜெயில் வாயில் அருகே செல்லாமல் மெயின் ரோட்டில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததாக தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக அவர் செல்பி எடுத்ததால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
- சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் இருக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அதனால் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
- அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர்.
- நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் பஸ் நிலையம் ரெயில் நிலையம் உள்ள இடங்களில் கூட்டல் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் பக்தர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடி வருகின்றனர்.
திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விமலா குமாரி டி.எஸ்.பி. ரவிக்குமார் மற்றும் போலீசார் பக்தர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
வாலிபர்கள் தமிழகத்தில் நெய்வேலியை சேர்ந்த வேலு, ராஜேந்திரன் என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 65 கிராம் எடையில் தங்க நகைகள் இருந்தன.
நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.
- டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.
- பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார்.
திருப்பதி:
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் 'மாற்றி யோசி' என வித்தியாசமாக தசரா பண்டிகை கொண்டாடி உள்ளனர்.
விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான டொட்டி பாபு ஆனந்த். இவர் தெற்கு மண்டல் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி வார்டு 31-ல் தசரா பண்டிகையை கொண்டாடினர்.
அப்போது டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.
பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார். அவர் தெருவில் நின்று கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் கூவி கூவி அழைத்து உயிருள்ள கோழி மற்றும் குவாட்டர் சரக்கை கைகளில் திணித்து தசரா பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த கோழி, மது விவகாரம் ஆந்திரா அரசியலில் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.
- நன்கொடை வழங்குவோர் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர்.
- அன்னப் பிரசாத திட்டத்துக்கு தினமும் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகளும் பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் இலவசமாக உணவு உண்டு வருகின்றனர். மேலும் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள், பஸ் நிலையம், மாதவம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக நன்கொடை வழங்குவோர் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர். இந்நிலையில், விலைவாசி உயர்வால் அன்னதான நன்கொடை ரூ.38 லட்சமாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் சிற்றுண்டிக்காக ரூ.8 லட்சம் மற்றும் மதிய மற்றும் இரவு உணவுக்காக தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அன்னப் பிரசாத திட்டத்துக்கு தினமும் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






