என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது உயிருக்கு ஆபத்து உள்ளது- பாதுகாப்பு கோரி சந்திரபாபு நாயுடு கடிதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எனது உயிருக்கு ஆபத்து உள்ளது- பாதுகாப்பு கோரி சந்திரபாபு நாயுடு கடிதம்

    • விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
    • சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் இருக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அதனால் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×