என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் பிரசாரம்
    X

    தெலுங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் பிரசாரம்

    • கர்நாடகவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட எந்த திட்டத்தையும் சித்தராமைய்யா செயல்படுத்தவில்லை.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தது.

    கர்நாடக பாணியில் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பெண்களுக்கு மாதம் ரூ.2,500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதல் மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக கர்நாடகா விவசாயிகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். கர்நாடக விவசாயிகள் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கர்நாடகவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட எந்த திட்டத்தையும் சித்தராமைய்யா செயல்படுத்தவில்லை.

    அதேபோல்தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டார்கள் என முக்கியமான தொகுதிகளில் பதாகைகளை ஏந்தியும் வீடுகளாக துண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் பா.ஜ.க.வினர் இடையில் புகுந்து எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.

    இதனால் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×