என் மலர்
ஆந்திர பிரதேசம்
- இந்த கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை ஒன்று உள்ளது. இதற்கு தனி சன்னதியும் இந்த கோவிலில் அமைந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகவும் தொன்மையான மற்றும் பழமையான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலின் வளாகத்தில் வீடுகள் அமைப்பு போன்று ஓட்டுக் கற்களை வரிசையாக அடுக்கி வைத்து செல்கின்றனர். இதுபற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-
மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இங்கு வரக்கூடிய பக்தர்கள் சொந்தமாக வீடுகட்ட வேண்டும்.
தங்களது சொந்த வீடு கனவு இல்லம் ஆசை நிறைவேற மங்களநாதரிடம் பிரார்த்தனை செய்து வளாகத்தில் கற்களால் வீடுகட்டி வேண்டிக்கொள்கின்றனர். பலருக்கு வீடுகட்டும் ஆசையும் நிறைவேறி உள்ளதால் அதன் நம்பிக்கையில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போன்று அடுக்கி வைத்து செல்கின்றனர்.
இவர் அவர் கூறினார்.
- சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
- சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, 'திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த தகவலை வைத்து, சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
ஆனால் இந்த தகவல் வதந்தி என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்தி லட்டு காப்புரிமை பெறப்பட்டது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் நீரிழிவு நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சர்க்கரை இல்லாத லட்டு வழங்கினால், பின்னர் வேறு ஏதாவது காரணத்தை வைத்து வேறு சில பக்தர்கள் வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
- லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது.
- சாமியை பல மைல்கள் தூரத்திலிருந்து தரிசிக்க வரும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும், ஸ்ரீவாரி சேவாவினரும் கர்ப்பக்கிரகம் அருகே வரும்போது அவசர அவசரமாக தள்ளி விடுகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது.
ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
திருப்பதியை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறும்போது:-
சாமியை பல மைல்கள் தூரத்திலிருந்து தரிசிக்க வரும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும், ஸ்ரீவாரி சேவாவினரும் கர்ப்பக்கிரகம் அருகே வரும்போது அவசர அவசரமாக தள்ளி விடுகின்றனர். அவர்களுக்கு பொறுமையே இருப்பதில்லை.
இதுகுறித்து கேட்டால் "நீ யாரிடம் வேண்டுமாலும் புகார் செய்" என திமிராக பதிலளிக்கின்றனர். இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பக்தர்களை தள்ளி விடக்கூடாது என பல முறை எச்சரித்துள்ளோம். ஆயினும் சிலர் அதுபோல் கடிந்து நடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து மீண்டும் அவர்களிடம் எச்சரிக்கை செய்யப்படும் என தர்மா கூறினார்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் திருப்பதி கோவில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.140.34 கோடியாக பதிவாகி உள்ளது.
இந்த மாதத்தில் 1.05 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகி உள்ளது. 22.22 லட்சம் பக்தர்கள் சாமியை தரிசித்துள்ளனர்.
10.85 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் உற்சவர் மலையப்பசாமி.
- மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கருடவாகன சேவை நடக்கிறது.
பவுர்ணமி தினமான நேற்றிரவு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடந்தது . இதை முன்னிட்டு, உற்சவர் ஏழுமலையான் சர்வ நிலையில், அலங்கார திருக்கோலம் பூண்டு கோவிலிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.
அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சாமிக்கு தீப, நைவேத்திய சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கருடவாகன சேவை நடந்தது .
பவுர்ணமி கருட சேவையொட்டி திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சாமி தரிசனத்திற்காக இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
அதனை தாண்டி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 27-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இந்த விழாவில் கருட சேவை இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந் தேதி பிரமோற்சவ விழா தொடங்குகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 300 பஸ்கள் மலைப்பாதை யில் இயக்க திட்டமி டப்பட்டுள்ளது.
திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பஸ் இயக்கப்பட உள்ளது .
இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி அளித்துள்ளார்.
ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பஸ் இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த பஸ்களை இயக்கும் நிர்வாக பொறுப்பு மெகா என்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 36 இருக்கைகள், குளிர்சாதன வசதி. கண்காணிப்பு கேமரா தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை இந்த பஸ் இயக்க முடியும்.
வருகிற 25-ந் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பஸ்கள் வர உள்ளன. ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந் தேதி பிரமோற்சவ விழா தொடங்குகிறது.
அப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கஉள்ளார்.அன்று இந்த எலக்ட்ரிக் பஸ்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 64,292 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,641 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்துக்கு 18 மணி நேரமாகிறது.
- மகள் கர்ப்பமாக உள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த தந்தை மகளை அறையில் அடைத்து தாயின் கண் முன்னே உலக்கையால் தாக்கினார்.
- மாணவி வலியால் அலறி துடித்தார். இருப்பினும் கல் நெஞ்சம் படைத்த அவரது தாய் மகளை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தாடே பத்ரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். சிறுமி தாடி பகுதியில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார்.
அப்போது மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். மேலும் தேர்வில் தோல்வி அடைந்தார். மாணவியும் வாலிபரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனர். இதனால் மாணவி 3 மாதம் கர்ப்பமானார்.
மாணவி கர்ப்பமாக உள்ளது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகளை அறையில் அடைத்து தாயின் கண் முன்னே உலக்கையால் தாக்கினார்.
மாணவி வலியால் அலறி துடித்தார். இருப்பினும் கல் நெஞ்சம் படைத்த அவரது தாய் மகளை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மகள் இறந்து விட்டதாக கூறியதைக் கேட்ட அவரது பெற்றோர்கள் கதறி துடித்தனர். மகள் மீது இருந்த ஆத்திரத்தில் அவசரப்பட்டு அடித்து கொலை செய்து விட்டதாக புலம்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த தாடே பத்ரி போலீசார் வந்து மாணவியின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1994-லிருந்து பாலாபூர் விநாயகர் கோவிலில் லட்டு ஏலம் நடைபெற்று வருகிறது.
- கடந்த ஆண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போனது.
திருப்பதி:
ஐதராபாத்தை அடுத்துள்ள பாலாபூரில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளில், பிரசாதமாக 21 கிலோவில் லட்டு செய்து விநாயகருக்குப் படைப்பது வழக்கம்.
சுத்தமான நெய், உலர் பழங்களைச் சேர்த்துச் செய்யப்பட்ட லட்டின் மேலே தங்க முலாம் பூசப்பட்டு, வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
பின்னர், அந்த லட்டு ஏலம் விடப்படும். அந்தப் பகுதி மக்களுக்கு இந்த லட்டு பிரசாதத்தைச் சாப்பிட்டால் வளமாக வாழலாம் என்ற நம்பிக்கையிருப்பதால், இந்த லட்டை ஏலம் எடுப்பதற்குப் பக்தர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
1994-லிருந்து பாலாபூர் விநாயகர் கோவிலில் இந்த லட்டு ஏலம் நடைபெற்று வருகிறது. முதல் ஏலத்தை 450 ரூபாய்க்கு எடுத்த கோலனு மோகன் ரெட்டி, தொடர்ந்து 5 வருடங்கள் இந்த லட்டு ஏலத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதன் பிறகு, அவர் செழிப்பாக வாழத் தொடங்கியதால், பாலாபூர் மக்களிடையே லட்டும் ஏலமும் பிரசித்தி பெற்றுவிட்டது.
ஒவ்வொரு வருடமும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அதிக ஏலத்துக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ஆண்டும் பாலாப்பூர் விநாயகர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட லட்டு தயார் செய்யப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியதும் லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது. முதலில் ரூ.1,116 என ஏலம் தொடங்கியது.
இறுதியில் கணேஷ் உற்சவர் கமிட்டி உறுப்பினரான லட்சுமி ரெட்டி என்பவர் அந்த லட்டு பிரசாதத்தை ரூ.24.60 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். அப்போது அமைச்சர்கள் சபிதா இந்திரா ரெட்டி, தல சானி ஸ்ரீநிவாஸ் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு இந்த கோவிலில் விநாயகருக்கு படைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போனது.
- ஆந்திராவில் லோன் ஆப் மூலம் பணம் பெற்றவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் மிரட்டி வருவதால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
- நேற்று முன்தினம் தம்பதி தற்கொலை செய்தனர். தற்போது மேலும் ஒரு மாணவர் உயிர் பறிபோய் உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், தாட்சே பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் வெங்கட் சிவா (வயது 20). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
அவசர தேவைக்காக லோன் ஆப் மூலம் ரூ.4000 கடன் வாங்கி இருந்தார். கல்லூரி முடிந்தவுடன் தாட்சே பள்ளியில் உள்ள ஓட்டலில் பகுதி நேரமாக வேலை செய்து இதுவரை ரூ.16 ஆயிரம் செலுத்தி உள்ளார்.
இருப்பினும் மேலும் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என லோன் ஆப் கும்பல் வெங்கட் சிவாவை மிரட்டி வந்தனர்.
வெங்கட் சிவாவின் செல்போனில் இருந்த அவரது நண்பர்களின் செல்போனுக்கு வெங்கட் சிவா மோசடி பேர்வழி, பிராடு என எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பினர்.
இதனால் மனவேதனை அடைந்த வெங்கட் சிவா இது குறித்து தனது தந்தைக்கு தெரிவித்தார்.
அவர் பணத்தை தயார் செய்து தருகிறேன் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என மகனுக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும் நேற்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த வெங்கட் சிவா அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தாட்சேபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட் சிவா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திராவில் லோன் ஆப் மூலம் பணம் பெற்றவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் மிரட்டி வருவதால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் தம்பதி தற்கொலை செய்தனர். தற்போது மேலும் ஒரு மாணவர் உயிர் பறிபோய் உள்ளது.
லோன் ஆப்புகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டினரிடையே ஆன்மீகச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், திருவிழாவின்போது நடைபெறும் வாகன சேவைகள் பற்றி பலருக்கு தெரியாது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவார்.
முதன்முதலாக 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா தேசிய சுற்றுலா காலண்டரில் சேர்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் 'நிகழ்வுகள் மற்றும் திருவிழா' பிரிவின் கீழ் 'திருமலை பிரம்மோத்சவலு' என பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டினரிடையே ஆன்மீகச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சுற்றுலா கோட்ட மேலாளர் (திருப்பதி) கிரிதர் ரெட்டி கூறுகையில்:-
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், திருவிழாவின்போது நடைபெறும் வாகன சேவைகள் பற்றி பலருக்கு தெரியாது.
இப்போது மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த நிகழ்வை அங்கீகரித்திருப்பதால், விழா பற்றிய விரிவான விளக்கம் இணையதளத்தில் குறிப்பிடப்படும், மேலும் அதிகமான வெளிநாட்டினர் திருப்பதி வருவதை ஊக்குவிக்கும் என்றார்.
திருப்பதி எம்.பி மட்டிலா குருமூர்த்தி, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதி தேசிய சுற்றுலா காலண்டரில் திருமலை மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி பிரம்மோத்ஸவங்களின் அட்டவணையை சேர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெங்கடேஸ்வரனுக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
- வெங்கடேஸ்வரலுவிடம் அவரது தம்பி தன்னை ஆபாசமாக திட்டியதாக மனைவி புகார் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 34). இவரது தம்பி ஏடு கொண்டலு (32). இருவரும் ஜீப் டிரைவர்களாக வேலை செய்து வந்தனர்.
வெங்கடேஸ்வரனுக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். ஏடு கொண்டலவுக்கு திருமணம் ஆகாததால் தனது தாய் ரமணம்மாவுடன் வசித்து வந்தார்.
பூர்வீக சொத்து பிரிப்பது சம்பந்தமாக அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் வெங்கடேஸ்வரலு வீட்டில் இல்லாத போது நிலம் பிரிப்பது சம்பந்தமாக வெங்கடேஸ்வரலு மனைவிக்கும், அவரது தம்பி ஏடு கொண்டலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏடு கொண்டலு ஆபாசமாக திட்டி உள்ளார்.
வீட்டிற்கு வந்த வெங்கடேஸ்வரலுவிடம் அவரது தம்பி தன்னை ஆபாசமாக திட்டியதாக மனைவி புகார் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு தனது தம்பியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று மாலை வேலை முடித்துவிட்டு டிபிரந்தகம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஏடு கொண்டலு மீது வெங்கடேஸ்வரலு காரை ஏற்றினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட ஏடு கொண்டலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏடு கொண்டலுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரலூவை கைது செய்தனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கல்யாணி அணை அருகே உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- பயிற்சிக்குச் சென்ற 4 தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கல்யாணி அணை அருகே உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானமும், மாநில அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிப்பதற்காக போலீஸ் பயிற்சி பள்ளிக்குச் சென்றனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பயிற்சிக்குச் சென்ற 4 தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொற்று பாதித்த 4 பேருக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் நேற்று 69,115 பேர் தரிசனம் செய்தனர்.31,762 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.93 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
- அக்டோபர் 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.
- நவம்பர் 8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும்.
இதனால், அன்று கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.
அதேபோல் நவம்பர் மாதம் 8-ந்தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே நவம்பர் மாதம் 8-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும்.
இதனால், அன்று கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.
இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு ேகட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது






