ஆந்திராவில் காதலனால் கர்ப்பமான சிறுமியை உலக்கையால் அடித்து கொன்ற தந்தை

மகள் கர்ப்பமாக உள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த தந்தை மகளை அறையில் அடைத்து தாயின் கண் முன்னே உலக்கையால் தாக்கினார்.மாணவி வலியால் அலறி துடித்தார். இருப்பினும் கல் நெஞ்சம் படைத்த அவரது தாய் மகளை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஆந்திராவில் காதலனால் கர்ப்பமான சிறுமியை உலக்கையால் அடித்து கொன்ற தந்தை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தாடே பத்ரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். சிறுமி தாடி பகுதியில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார்.

அப்போது மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். மேலும் தேர்வில் தோல்வி அடைந்தார். மாணவியும் வாலிபரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனர். இதனால் மாணவி 3 மாதம் கர்ப்பமானார்.

மாணவி கர்ப்பமாக உள்ளது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகளை அறையில் அடைத்து தாயின் கண் முன்னே உலக்கையால் தாக்கினார்.

மாணவி வலியால் அலறி துடித்தார். இருப்பினும் கல் நெஞ்சம் படைத்த அவரது தாய் மகளை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகள் இறந்து விட்டதாக கூறியதைக் கேட்ட அவரது பெற்றோர்கள் கதறி துடித்தனர். மகள் மீது இருந்த ஆத்திரத்தில் அவசரப்பட்டு அடித்து கொலை செய்து விட்டதாக புலம்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த தாடே பத்ரி போலீசார் வந்து மாணவியின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com