என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • நிலத்தின் உரிமையாளர்கள் சாக்கு மூட்டையில் பிணத்தை கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிவித்தனர்.
    • கணவன் மனைவி பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம்சித்தூர் அடுத்த புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனி (வயது 25).இவரது மனைவி பீரம்மா (20). கணவன் மனைவி இருவரும் காக்காவேரி பள்ளியில் உள்ள மாந்தோப்பில் வேலை செய்து வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த 7-ந் தேதி செட்டிபேட்டையில் உள்ள மாந்தோப்பில் வசித்து வரும் பீம்மாவின் சகோதரி சித்தம்மா வீட்டிற்கு சென்றனர். பின்னர் இரவு கணவன், மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    இந்நிலையில் மறுநாள் வீட்டிற்கு சென்றுவிட்டார்களா என கேட்பதற்காக சித்தமா தனது மாமா முனி செல்போனிற்கு போன் செய்தார்.

    போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சித்தம்மா சகோதரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    பல்வேறு இடங்களில் தேடியும் சகோதரியும் அவரது கணவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சித்தம்மா புங்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஏர்ரகாணி பள்ளி என்ற இடத்தில் சாக்கு மூட்டையில் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் புங்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மதுசூதன் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையில் இருந்தவர்களின் உடல்களை மீட்டனர். உடல்கள் சிதைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து முனி பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அதிலிருந்து சிம்மை வைத்து இறந்தவர் முனி அவரது மனைவி பீரம்மா என போலீசார் கண்டுபிடித்தனர்.

    இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் விவசாய நிலங்களை சுற்றிலும் சிலர் மின்வேலி அமைத்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த வழியாக வந்தவர்கள் மின் வேலியில் சிக்கி இறந்து இருக்கலாம்.

    மின் வேலியில் சிக்கி இறந்ததை மறைப்பதற்காக நிலத்தின் உரிமையாளர்கள் சாக்கு மூட்டையில் பிணத்தை கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிவித்தனர்.

    கணவன் மனைவி பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதியில் 67,687 பேர் தரிசனம் செய்தனர்.
    • ரூ 3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் நடைபாதையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் இலவச நேர ஒதுக்கிட்டு டிக்கெட் வழங்க வேண்டுமென பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் 2,083-வது படியில் காளி கோபுரம் அருகே அலுவலகம் அமைத்து தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர்.

    தினமும் அதிகாரிகள் நடந்து சென்று டிக்கெட் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இதையடுத்து அலிப்பிரியில் நடைபாதை இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து இன்று காலை முதல் பக்தர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றனர்.

    இலவச தரிசன டிக்கெட் பெற்று செல்லும் பக்தர்கள் 1,240-வது படி அருகே அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து கொண்டு நேர ஒதுக்கீடு பெற்று தரிசனத்திற்கு செல்ல வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள் இந்த வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப திருமலை யாத்திரையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

    திருப்பதியில் நேற்று 67,687 பேர் தரிசனம் செய்தனர். 25,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
    • கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.

    இந்த மலையில் யானை, மான், சிறுத்தை, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மரங்களின் இலைகள் உதிர்ந்தும், புற்கள் காய்ந்தும் சருகாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கைலாசகிரி மலை, பரத்வாஜ் தீர்த்தம், முக்கந்தி கோவில் அருகே சமூக விரோதிகள் மது குடித்துள்ளனர். பின்னர் மழையில் இருந்த சருகுகளுக்கு தீ வைத்து உள்ளனர்.

    தீ மளமளவென மலை முழுவதும் பரவியது. இதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர். இரவு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பல ஏக்கரில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமானது.

    தீயணைப்பு துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தினர். கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.

    எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகிறது.
    • திருப்பதியில் பக்தர்கள் சுமார் 40 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை கொண்டு வந்து ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.

    இதனால் திருமலை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்து வந்தது. மேலும் மாசு ஏற்பட்டு வந்ததால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தடை விதித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பிரசாத பைகளுக்கு பதிலாக மக்கும் தன்மை கொண்ட பைகள் மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க இலவச பஸ்களுக்கு பதிலாக பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரானிக் பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    தேவஸ்தானம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் சில பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அங்குள்ள குழாய்களில் தண்ணீர் குடிப்பதை கண்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டை அறவே ஒழிப்பதற்காக காப்பர் வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்டீல் வாட்டர் பாட்டிலை பக்தர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    ரூ.200 வரை பாட்டில் விற்பனை செய்யப்பட்டுகிறது. ரூ.50 டெபாசிட் செய்தாலும் பாட்டில் வழங்குகின்றனர். இதற்காக தனியாக கவுண்டர்கள் அமைத்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகிறது. இதனால் பக்தர்கள் சுமார் 40 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை 71,782 பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் 3.28 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    சனிக்கிழமை 85,450 பக்தர்கள் மூலம் 4. 21 கோடி உண்டியல் வசூலானது. ஞாயிற்றுக்கிழமை 86,129 பக்தர்கள் மூலம் ரூ.4.86 கோடியும், திங்கட்கிழமை 69,781 பக்தர்கள் மூலம் ரூ.5.16 கோடி என கடந்த 4 நாட்களில் ரூ.17.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • இந்த உற்சவம் 16-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • விழாவில் 19 நாட்களுக்கு உபய சமர்ப்பணம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவரை தவிர வைணவ ஆச்சாரியார்களுக்கோ அல்லது ஆழ்வார்களுக்கோ தனிச் சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார் கோவில் கூட, கீழே திருச்சானூரில் உள்ளது. வராகசாமி, ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு அருகில் தான் உள்ளார். ஆனால், அதற்கு ஒரே ஒரு விதி விலக்கு வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் மட்டுமே.

    அவரை வடமாநிலங்களில் 'பாஷ்யங்கார்' என்று அழைக்கின்றனர். மேலும் 'விஷிஷ்டா தைவத்யா சித்தபரம் மீமாம்சா' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை புத்தகத்தின் பெயரை 'ஸ்ரீபாஷ்யம்' என மாற்றியதால் பகவத் ராமானுஜரை 'பாஷ்யங்கார்' என்று வைணவர்கள் அழைத்து வந்தனர்.

    பாஷ்யங்கார் எனப்படும் ராமானுஜர் ஹோலி வைசாக மாதத்தில் ஆருத்ரா நட்சத்திரத்தில் பிறந்தார். ராமானுஜர் திருமலைக்கு வந்து காடு திருத்தி, வீதி அமைத்து திருவிழாக்களை நடத்த ஏற்பாடு செய்தார். அதில் இருந்து தான் திருமலை நகரம் தோன்றியது. இன்னும் திருமலையில் ராமானுஜர் வீதி உள்ளது.

    திருச்சி ஸ்ரீரங்கம் பெரிய கோவிலின் நடைமுறைகளை திருமலைக்கும் கொண்டு வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாட ஏற்பாடு செய்தார். இதுதவிர பல்வேறு திருப்பணிகளை செய்தார். ஆகையால் தான் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ராமானுஜரை போற்றி வருகிறது.

    அவரை போற்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் பாஷ்யங்கார் உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் 19 நாட்களுக்கு உபய சமர்ப்பணம் நடக்கிறது. ராமானுஜர் பிறந்த வைசாக மாதத்தில் வரும் ஆருத்ரா நட்சத்திரத்தையொட்டி பாஷ்யகார் சாத்துமுறை வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

    பாஷ்யங்கார் சாத்துமுறையையொட்டி மாலை சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பிறகு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியும், மற்றொரு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் பாஷ்யகாரும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன் பிறகு கோவிலின் உள் விமானப் பிரகாரத்தை வலம் வருகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பாஷ்யங்கார் சன்னதியில் சாத்துமுறை உற்சவம் நடக்கிறது. அதில் ஜீயர் சுவாமிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

    • பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.
    • சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் புல்லெட்டி குரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இந்த கிராமத்தில் விஜயவாடாவை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தேவாலயம் நடத்தி வருகிறார். 17 வயது சிறுமி அடிக்கடி தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்று வந்தார்.

    சிறுமியிடம் நைசாக பேசிய பாதிரியார் பணம் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் வயிறு பெரியதாக தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பாதிரியாரிடம் கேட்டபோது சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    நிறை மாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி அமலாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என எண்ணிய பாதிரியார் பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

    இந்த விஷயம் குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவிக்ககூடாது என சிறுமியை மிரட்டி உள்ளார். குழந்தையை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை சிறுமியின் உறவினர்களுக்கும் மற்றும் பிரச்சனை நடத்தும் நபர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கும் கொடுத்தார்.

    இந்நிலையில் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து கலெக்டர் ஹிமான்ஷி சுக்லாவிடம் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க அமலாபுரம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    போலீசார் தலை மறைவாக உள்ள பாதிரியாரை தேடி வருகின்றனர்.

    • திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 1715-ம் ஆண்டு பூந்தி தயாரித்து படையிலிடப்பட்டு வந்தது.
    • 1940-ம் ஆண்டு பூந்திக்கு பதிலாக லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனத்திற்கு செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 1715-ம் ஆண்டு பூந்தி தயாரித்து படையிலிடப்பட்டு வந்தது.

    பின்னர் அதிக அளவில் பூந்தி தயாரித்து 1803 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். அதனை தொடர்ந்து 1940-ம் ஆண்டு பூந்திக்கு பதிலாக லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பக்தர்களுக்காக தயார் செய்யப்படும் லட்டுகளில் ஏலக்காய், கல்கண்டு, முந்திரி, திராட்சை, பச்சை கற்பூரம், குங்குமப்பூ, சர்க்கரை கலவை மற்றும் பச்சைப்பயறு மாவு ஆகியவற்றைக் கொண்டு மிகவும் கவனமாகவும் தரமாகவும் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

    தினமும் 4 முதல் 4½ லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில மாதங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கூடுதலாக லட்டுகளை தயாரிக்க வெளிநாடுகளில் இருந்து ரூ.50 கோடி மதிப்பில் பூந்தி தயாரிக்கும் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    தினமும் சராசரியாக தரிசனத்திற்கு வரும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு 1 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    தேவஸ்தான ஊழியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லட்டுகள் தரமாக இருந்ததாகவும் தற்போது எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் லட்டுகள் தரம் குறைந்து காணப்படுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:-

    எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் லட்டுகளும் தரமானதாக தான் உள்ளது. லட்டுக்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக தனியாக தேவஸ்தான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    திருப்பதி தேவஸ்தானம் மூலம் தினமும் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மாதத்திற்கு ஒரு கோடி லட்டுகள் என 12 மாதத்திற்கு 12 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 69,782 பேர் தரிசனம் செய்தனர். 27,552 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
    • மீனவர்கள் இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

    அமராவதி:

    ஆந்திர அரசு வங்காள விரிகுடா கடலில், மாநில பிராந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க 2 மாத காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தள்ளது. இறால் உள்ளிட்ட மீன் இனங்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (61 நாட்கள்) 2 மாத காலம் இந்த தடை அமல்படுத்தப்படும். இந்த ஆண்டும் இதற்கான தடை உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மீனவர்கள் வரும் 15-ந்தேதி முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது.

    "மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது அதிக அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    மீனவர்கள், இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

    • போஸ்டர்களில் ஜெகன் அண்ணா எங்கள் நம்பிக்கை என்ற போஸ்டர்களை வீட்டு சுவர்கள் தனியார் கட்டிட சுவர்களில் ஒட்டி வருகின்றனர்.
    • 4 ஆண்டுகளில் வளர்ச்சியின்மையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் இடையே போஸ்டர் யுத்தம் ஏற்படுள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சியின் சாதனைகள் குறித்து போஸ்டர்களில் ஜெகன் அண்ணா எங்கள் நம்பிக்கை என்ற போஸ்டர்களை வீட்டு சுவர்கள் தனியார் கட்டிட சுவர்களில் ஒட்டி வருகின்றனர்.

    ஆளுங்கட்சிக்கு எதிராக ஜனசேனா கட்சியை சேர்ந்தவர்கள் உன் மீது நம்பிக்கை இல்லை ஜெகன்.எங்கள் நம்பிக்கை பவன் என்று போஸ்டர் அடித்து ஆளும் கட்சியினர் எங்கெங்கு போஸ்டர் ஒட்டி இருக்கிறார்களோ அந்த பகுதிகளில் அவர்களுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

    ஜனசேனா கட்சியின் திருப்பதி தொகுதி பொறுப்பாளர் கிரண் ராயல் மற்றும் நகரத் தலைவர் ராஜா ரெட்டி மற்றும் ஜனசேனா கட்சியினர் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஆளும் கட்சியினருக்கும் ஜனசேனா கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜனசேனா கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டரில் 4 ஆண்டுகளில் தலைநகரை உருவாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    மாநிலத்தை திவால் நிலைக்கு கொண்டு செல்லும் அரசின் மீது நம்பிக்கை இல்லை. பவன் கல்யாணயால் மட்டுமே மாநிலத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என அச்சடிக்கப்பட்டு இருந்தது.

    இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் புதிய கட்டிடங்கள் மற்றும் புதிதாக வர்ணம் தீட்டப்பட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டி வருவதால் சுவர்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றன.

    எங்களால் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் இருக்கிறோம். இங்கு நடப்பவைகளை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 4 ஆண்டுகளில் வளர்ச்சியின்மையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    போஸ்டர் ஓட்டுவதன் மூலம் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. இதனால் ஆளும் கட்சிக்கு எந்த பயனும் கிடையாது என தெரிவித்தனர்.

    ஆளுங்கட்சியினருக்கும் ஜனசேனா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள போஸ்டர் யுத்தம் ஆந்திராவில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 250 ஏக்கர் விவசாய நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு முரளி கிருஷ்ணா தானமாக வழங்கினார்.
    • கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், மலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகளை வழங்குவதாக விவசாயி உறுதி அளித்தார்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவருக்கு திருப்பதி மாவட்டம் டெல்லி அடுத்த பொத்தே கொண்டாவில் 90 ஏக்கர் விவசாய நிலமும், டக்குவோலுவில் 160 ஏக்கர் என மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் விளைநிலம் உள்ளது.

    இந்த 250 ஏக்கர் விவசாய நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு முரளி கிருஷ்ணா தானமாக வழங்கினார்.

    நேற்று முரளி கிருஷ்ணா ஆந்திர தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி, திருப்பதி கலெக்டர் வெங்கட்ரமண ரெட்டி, தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோர் முன்னிலையில் நிலத்திற்கான ஆவணங்களை ஒப்படைத்தார்.

    தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் தானே விவசாயம் செய்து கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், மலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

    இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் வசதி, நிலத்தின் வரைபடங்கள், பத்திரப்பதிவு மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினர்.

    நிகழ்ச்சியில் திருப்பதி உதவி கலெக்டர் பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் மலோலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பத்மாவதி தாயாருக்கு வழங்கிய புடவை தீப்பெட்டியில் அடங்கக்கூடிய வகையில் உள்ளது.
    • ரூ.45 ஆயிரம் மதிப்பில் 5 கிராம் எடையுள்ள தங்க சரிகை புடவையையும் பக்தர் வழங்கினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சிரிசில்லாஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ நல்ல விஜய் என்ற பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கும், திருமலை திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும் பட்டு புடவை தானமாக வழங்கினார்.

    அவர் பத்மாவதி தாயாருக்கு வழங்கிய புடவை தீப்பெட்டியில் அடங்கக்கூடிய வகையில் உள்ளது.

    மேலும் ரூ.45 ஆயிரம் மதிப்பில் 5 கிராம் எடையுள்ள தங்க சரிகை புடவையையும் வழங்கினார்.

    ஸ்ரீபத்மாவதி ஓய்வு இல்லத்தில் தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி முன்னிலையில் வழங்கினார்.

    திருப்பதியில் நேற்று 86,129 பேர் தரிசனம் செய்தனர். 28,094 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.

    16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடியது. தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 13 ரன்களும், மயங்க் அகர்வால் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பின்னர் ராகுல் திரிபாதி , மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர். ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.

    தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில்17.1 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 145ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி 74ரன்கள் , மார்க்ரம்37 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.

    ×