என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • கோட்டீஸ்வர ராவ் பிடுகு ரல்லாவில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கோட்டீஸ்வர ராவ் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், பல்நாடு மாவட்டம், குட்டி கொண்டா பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வர ராவ், சுகுணா தம்பதியினரின் மகன் கோட்டீஸ்வரலு (வயது 16).

    இவர் பிடுகு ரல்லாவில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் படித்து கொண்டிருந்த கோடீஸ்வர ராவுக்கு திடீரென மூச்சு திணறல், உடல் வியர்த்து கொட்டியது.

    அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். மாணவனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நெஞ்சு வலியால் மாணவன் இறந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அலறி அடித்துக்கொண்டு வந்து மகனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், குர்ஜாலா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்தன. கடைசி நாள் தேர்வு முடிந்ததும் மாணவி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சிறுமியிடம் தாகேபள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் நாக பாபு நைசாக பேச்சு கொடுத்தார். சிறுமியை ஏமாற்றி அங்குள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இது குறித்து அவரது குடும்பத்தினர் பிடுகுரல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகபாபுவை கைது செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்து மனமுடைந்த நாகபாபுவின் மனைவி அனுஷா விஷம் குடித்தார். வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அனுஷாவை மீட்டு தாகேபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த ரெட்டி 2019-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
    • கொலை வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் மற்றொரு உறவினரான ஓ.எஸ்.பாஸ்கர ரெட்டியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    புதுடெல்லி:

    ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த ரெட்டி 2019-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் மற்றொரு உறவினரான ஓ.எஸ்.பாஸ்கர ரெட்டியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. கடப்பா தொகுதி எம்.பி.யான அவினாஷ் ரெட்டியின் தந்தைதான் ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி ஆவார். இதனால் இந்த கைது ஜெகன் மோகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் புனிதம் கெடுகிறது.
    • சிலர் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு கூறியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துத் தரப்பு பக்தர்களும் சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் தடையை மீறி ஒருசிலர் செல்போனை கோவிலுக்குள் எடுத்துச் செல்கின்றனர். கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் புனிதம் கெடுகிறது. சிலர் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர். இது, தகாத செயலாகும். கோவிலின் புனிதத்தை காக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், பக்தர்களும் கோவில் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நகலை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
    • அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் காலத்தில் குரு தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    இந்த வருடம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதையொட்டி வருகிற 23-ந்தேதி உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.

    இந்த அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமலை:

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து இருக்கிறோம்.

    இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் ஆந்திர மாநில விளைபொருள் விற்பனை துறை அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரியான விலையில் கொள்முதல் செய்ய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 2 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 3-ந்தேதி துவங்கி 16-ந்தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச சேது மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 6 யானைகள் ஒரு குட்டியுடன் நடமாடுவதை பார்த்து பஸ்கள், பைக்குகள், கார்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அதனை வீடியோ பதிவு செய்தனர்.
    • 2 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் 2 முறை காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    திருமலை:

    திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நேற்று யானை கூட்டம் வந்தது.

    6 யானைகள் ஒரு குட்டியுடன் நடமாடுவதை பார்த்து பஸ்கள், பைக்குகள், கார்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

    காட்டு யானைகளின் நடமாட்டம் பற்றி தகவல் அறிந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் விரைந்து வந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அந்த வழியாக பைக்கில் செல்லும் பக்தர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    2 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் 2 முறை காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
    • பக்தர்கள் போலி இணையதளங்களில் முன்பதிவு செய்து பணத்தை இழந்து வருகின்றனர்.

    திருப்பதி :

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    தரிசன டிக்கெட் இல்லாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பக்தர்கள் எப்படியாவது தரிசனம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.

    அவர்கள் பக்தர்களிடம் 300 தரிசன டிக்கெட் கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகள் மற்றும் சுப்ரபாத சேவை வி.ஐ.பி. தரிசனம் பெற்று தருவதாக பல ஆயிரம் வாங்கிக் கொண்டு போலி தரிசன டிக்கெட்களை தருகின்றனர்.

    போலி தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகள் சோதனை செய்யும் போது அவை போலி டிக்கெட்டுகள் என்பது கண்டறிந்து பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    இதுகுறித்து தேவஸ்தானங்களுக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன. புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதேபோல் திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் போலியான இணையதளங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதை உண்மை என நம்பும் பக்தர்கள் போலி இணையதளங்களில் தரிசனத்தை கேட்டு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து பணத்தை இழந்து வருகின்றனர். இது குறித்தும் தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது. புகாரின் பேரில் பக்தர்களை ஏமாற்றும் போலி இணையதளங்கள் மீது ஐடி துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் விளைவாக சுமார் 40 போலி இணையதளங்களை ஐடி துறை கண்டறிந்துள்ளது. இந்த இணையதளங்களின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஐடி துறை பொது மேலாளர் சந்தீப் திருமலை போலீசில் புகார் அளித்தார்.

    பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை தேடும் போது அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டுமே ஆன்லைனில் தெரியுமாறு உறுதிசெய்ய ஐடி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    • வேறு வழியில் திருமலை சென்றாலும் திவ்ய தரிசன டிக்கெட் பயன்படாது.
    • மெட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் டோக்கன்கள் வழங்கப்படும்.

    அலிபிரி பூதேவி வளாகத்தில், அலிபிரி படித்துறை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள், அலிபிரிமெட்லா பாதையில் உள்ள கலிகோபுரத்தில் (படி எண். 2083) தரிசன டோக்கனை ஸ்கேன் செய்ய வேண்டும். இல்லையெனில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல வேண்டும். வேறு வழியில் திருமலை சென்றாலும் திவ்ய தரிசன டிக்கெட் பயன்படாது. மெட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் டோக்கன்கள் வழங்கப்படும்.

    வாகனம் மூலம் திருமலையை அடைய விரும்புவோருக்கு ஸ்ரீனிவாசம், ஆர்.டி.சி. பஸ் நிலையம் எதிரிலும், விஷ்ணு நிவாசம், ெரயில் நிலையம் பின்புறம், கோவிந்தராஜ சத்திரங்கள் ஆகிய பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    • கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
    • இருவருக்கும் இடையே திருமணமான சிறிது நாட்களிலேயே அடிக்கடி தகராறு நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், விகாரா பாத், அல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்தர் கவுட் (வயது 27). தாம் துளின் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (26). இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாக படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்தனர்.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். நரேந்தர் கவுட் எந்த வேலைக்கும் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே திருமணமான சிறிது நாட்களிலேயே அடிக்கடி தகராறு நடந்தது.

    இதனால் கணவனை பிரிந்த அம்பிகா லிங்கம் பள்ளியில் தனியாக தனது மகளுடன் வசித்து வந்தார். அங்குள்ள பல் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். நரேந்திர கவுட் மியாபுரில் உள்ள மதுக்கடையில் வேலை செய்தார். அம்பிகா வேலை பார்க்கும் பல் மருத்துவமனைக்கு வந்து நரேந்திர கவுட் தன்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து அம்பிகா விகாராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று அம்பிகா வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். 11 மணி அளவில் ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த நரேந்திர் கவுட் மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வரவேண்டும் என மனைவியை வற்புறுத்தினார்.

    அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நரேந்தர் கவுட் அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவியின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அம்பிகாவின் கழுத்தில் குத்தினார்.

    அம்பிகாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனைக் கண்ட அவர்களது 5 வயது மகள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அம்பிகா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டு இருந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நரேந்திர கவுட் அங்கிருந்து தப்பி ஓடினார் பொதுமக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்பிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நரேந்திர கவுட்டை கைது செய்தனர்.

    5 வயது மகளின் கண்ணெதிரிலேயே மனைவியை கொடூரமாக கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு கணவரும் சிறைக்குச் சென்றதால் அவர்களது மகள் ஆதரவு இன்றி அனாதையாக உள்ளார்.

    • நீண்ட நேரமாகியும் மாணவி விளையாட வராததால், அவரது நண்பர்கள் மாணவியை அழைத்துவர வகுப்பறைக்கு வந்தனர்.
    • வகுப்பறை கதவு மூடிக்கிடந்தது. நண்பர்கள் கதவை தட்டினர் கதவு திறக்கவில்லை.

    திருப்பதி:

    நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண். இவர் நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தார். இது யாருக்கும் தெரியாது. அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார்.

    வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர்.

    அந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தார். அப்போது கதவை மூடி உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.

    நீண்ட நேரமாகியும் மாணவி விளையாட வராததால், அவரது நண்பர்கள் மாணவியை அழைத்துவர வகுப்பறைக்கு வந்தனர். வகுப்பறை கதவு மூடிக்கிடந்தது. அவர்கள் கதவை தட்டினர் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தனர். அங்கு பலத்த ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிக் கிடந்தார். மாணவியின் பக்கத்தில் 6 மாத சிசு ஒன்று கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவரும், சிசுவும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விவரங்களை சேகரித்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் மாணவி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    அப்போது ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினார்.

    அந்த இளம்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது அவர் கார் டிரைவர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் மூலம் மாணவி கர்ப்பமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி யூடியூப் பார்த்து வகுப்பறையில் கருக்கலைப்பு செய்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரகப்பிரவேசம் முடிந்து மதியம் 1.30 மணியளவில் விருந்தினர்கள் மதிய உணவு சாப்பிட பந்தலுக்கு கீழ் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
    • மின்சார ஒயர் அறுந்து இரும்பு மேசையின் மீது விழுந்தது. சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பெட்டிப்பா சமுத்திரம் மண்டலம், கனுகமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி . இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டி நேற்று கிரகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்கள் நண்பர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்தவர்கள் உணவு அருந்துவதற்காக வீட்டின் அருகிலேயே சாமியான பந்தல் போடப்பட்டிருந்தது.

    நேற்று காலை கிரகப்பிரவேசம் முடிந்து மதியம் 1.30 மணியளவில் விருந்தினர்கள் மதிய உணவு சாப்பிட பந்தலுக்கு கீழ் நாற்காலிகளில் அமர்ந்தனர்.

    அப்போது திடீரென வீசிய பலத்த காற்றால் பந்தலின் ஒருபுறம் காற்றில் பறந்தது. டியூப்லைட் கட்டப்பட்டிருந்த மின்சார ஒயர் அறுந்து இரும்பு மேசையின் மீது விழுந்தது. சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.கொத்தப்பள்ளியை சேர்ந்த சின்ன லட்சுமம்மா (வயது 70), விஜயபிரசாந்த் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோட்டகோட்டையைச் சேர்ந்த லட்சுமணா (53), சாந்தகுமாரி (54) ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.

    கனுகமாகுலப்பள்ளியைச் சேர்ந்த திம்மையா, மூலக்கல்செருவைச் சேர்ந்த சுனிதா, ஓடிகிலோல்லப்பள்ளியைச் சேர்ந்த சுப்பம்மா (70) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மதனப்பள்ளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×